சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டாரே.. உடைகிறதா பாஜக-அதிமுக கூட்டணி? திடீர் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Jayakumar press meet | உடைகிறதா பாஜக-அதிமுக கூட்டணி? ஜெயக்குமார் பேட்டி

    சென்னை: பாஜகவுடன் வைத்துள்ள கூட்டணியை அதிமுக முறித்துக்கொள்ள விரும்புகிறதா என்ற ஐயப்பாட்டை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி எழுப்பியுள்ளது.

    நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருந்தது. அந்த கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இதில் எதிலுமே அந்த கட்சி வெற்றி பெறாத நிலையில், அதிமுகவுக்கும் கடும் அடி கிடைத்தது.

    தேனி லோக்சபா தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. அதேநேரம் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், 9 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை பலத்தை எடப்பாடி பழனிச்சாமி பெற்று அரசு பெற்றுவிட்டது.

    ரொம்ப மோசம்.. தமிழக பாஜக மீது கடும் கோபத்தில் அமித் ஷா.. விரைவில் நடவடிக்கை ரொம்ப மோசம்.. தமிழக பாஜக மீது கடும் கோபத்தில் அமித் ஷா.. விரைவில் நடவடிக்கை

    ஆட்சி கலையாது

    ஆட்சி கலையாது

    இதுவரை ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் பாஜகவுடன் அதிமுக தலைமை நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஆட்சிக்குத் தேவையான நம்பர்கள் கிடைத்துவிட்டதால், பாஜகவை இனிவரும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக கழற்றி விடலாம் என்ற திட்டத்தை அதிமுக வைத்து உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    மோடி எதிர்ப்பு அலை

    மோடி எதிர்ப்பு அலை

    ஏனெனில் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக ஓரளவு கவுரவமான, வெற்றி பெற்று விட்டது. திமுகவுக்கு பெரும் சவாலை கொடுத்தது. லோக்சபா தொகுதியில் மோசமாக தோற்றது. இதற்கு காரணம் மோடிக்கு எதிரான அலை என்று சொல்லப்படுகிறது. எனவே பாஜகவுடன், கூட்டணி வைத்துக் கொள்வது, அதிமுகவுக்கே பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிமுகவை பலப்படுத்துவதே, திமுகவை எதிர்கொள்ள போதுமானதாக இருக்கும் என்ற கருத்துக்கள் பரவ ஆரம்பித்துள்ளன.

    கூட்டணி

    கூட்டணி

    இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், வரும் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக உடனான கூட்டணி தொடருமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நேரடியாக பதில் சொல்லாத ஜெயக்குமார், இது கொள்கை முடிவு என்பதால் கட்சி மேலிடம் தான் இது பற்றி முடிவு செய்ய வேண்டும். நான் கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். கூட்டணி தொடரும் என்ற வார்த்தை ஜெயக்குமார் வாயிலிருந்து வரவில்லை.

    பாஜக அஸ்திரம்

    பாஜக அஸ்திரம்

    ஜெயக்குமார் பேட்டியை பார்த்தால், கூட்டணியில் விரிசல் ஆரம்பித்து விட்டதா என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது. லோக்சபா தேர்தல் முடிவுகள், இதுபோன்ற முடிவு எடுப்பதற்கு அதிமுக தலைவர்களை தூண்டுகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு வேளை பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டால், தினகரன் அணியினர் பலரும் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்புவார்கள் என்று சொல்லப்படுவதால், பாஜக கூட்டணியில் தொடர, அதிமுக தலைமை மனப்பூர்வமாக விரும்பவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரனுக்கு, மத்தியில், அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் கூட்டணியை விட்டு வெளியேறுவதில் பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என்றும் தெரிகிறது. இதுதான் இப்போது பாஜகவுக்கு உள்ள அஸ்திரமாகும்.

    English summary
    Will the AIADMK come out from the alliance with BJP? Minister Jayakumar press meet indicating the direction.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X