சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"தலைவர்" ஆனார் அன்புமணி ராமதாஸ்.. துள்ளலில் பாமக.. பொதுக்குழுவில் அதிரடி அறிவிப்பு.. அடுத்து இதுதான்

அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வரும் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை அருகே திருவேற்காட்டில் இன்று நடந்தது.. இந்த கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Recommended Video

    PMK Leader ஆனார் Anbumani Ramadass! இளைஞரணி To தலைவர் | #Politics | OneIndia Tamil

    சமீப காலமாக நடந்து வரும் பாமக கூட்டங்களில், தன்னுடைய வேதனையும், அதிருப்தியும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளிப்படுத்தியே வருகிறார்..

    குறிப்பாக, உள்ளாட்சி தேர்தலில் கட்சியினரே துரோகம் செய்து விட்டனர், போட்டியிடுவதற்குக் கூட ஆட்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதே என்று மனம் வெதும்பி பேசி வருகிறார்.

    நிர்மலா சீதாராமன் அறிவித்த பெட்ரோல் டீசல் விலை.. இன்றும் மாற்றமில்லை.. 7 நாளாக அதே விலையில் விற்பனைநிர்மலா சீதாராமன் அறிவித்த பெட்ரோல் டீசல் விலை.. இன்றும் மாற்றமில்லை.. 7 நாளாக அதே விலையில் விற்பனை

    கோட்டைக்கு அன்புமணி

    கோட்டைக்கு அன்புமணி

    எனவேதான், தான் உயிருடன் இருக்கும்போதே அன்புமணியை கோட்டையில் உட்கார வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை மீண்டும் கட்சிக்குள் டாக்டர் ராமதாஸ் ஆழமாக வேரூன்றி வருவதாக தெரிகிறது... இதற்காக பாமகவை பலப்படுத்த ஒருசில மாற்றங்களை கையில் எடுக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வந்தன.. முக்கியமாக தலைவர் போஸ்டிங் தர போவதாகவும் பரபரக்கப்பட்டது..

    ஜிகே மாற்றம்

    ஜிகே மாற்றம்

    ஆனால், பாமக தலைவராக ஜிகே மணி இப்போதைக்கு இருப்பதால், அவர் வகிக்கும் மாநில தலைவர் பதவி, இளைஞரணி தலைவரான அன்புமணிக்கு வழங்கப்படுமா அல்லது செயல் தலைவர் பதவி வழங்கப்படுமா என்பதுதான் அப்போதைய கேள்வியாக எழுந்தது.. எனினும், எப்படியும் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளநிலையில், அப்போது அதுகுறித்த முடிவு வெளியாகும் என்றும் நம்பப்பட்டது.

    வெள்ளி விழா

    வெள்ளி விழா

    இப்படித்தான், கடந்த 2019-லேயே அன்புமணிக்கு செயல்தலைவர் பதவி என்ற பேச்சு எழுந்து, அது அப்படியே அமுங்கிவிட்டது.. இந்நிலையில்தான், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் வரும் இன்றைய தினம் நடக்க போவதாக அறிவிப்பு 4 நாட்களுக்கு முன்பு வெளியானது.. கட்சி தலைவர் ஜிகே மணி அந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

    சிறப்பு பொதுக்குழு

    சிறப்பு பொதுக்குழு

    அதன்படி, இன்று காலை 11.00 மணிக்கு சென்னையை அடுத்த திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ் திருமண அரங்கத்தில், பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடந்து வரும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜிகே மணி தலைமையேற்றள்ளார்.. பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சி தலைவராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், அதன்படியே ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    ஜிகே மணி

    ஜிகே மணி

    கடந்த 4 நாட்களுக்குமுன்புதான், 25 வருடம் கட்சி தலைவர் பதவியை நிறைவு செய்த ஜிகே மணிக்கு, வெள்ளி விழா நடத்தப்பட்டது.. அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாலேயே, ஜிகே மணிக்கு விடை கொடுக்கும் வகையில், அந்த பாராட்டு விழா நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது... அதைவிட இன்னொரு சிறப்பு அம்சமும் இன்றைய விழாவில் நடக்க உள்ளதாக கூறப்பட்டது.. வழக்கத்தை விட இந்த பொதுக்குழுவை, 'மெகா' விருந்துடன் அமர்க்களமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டும் இருந்தன.

    ஸ்பெஷல் அழைப்பு

    ஸ்பெஷல் அழைப்பு

    அதனால்தான், தமிழகம், புதுச்சேரியில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், அணிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜி.கே.மணி ஸ்பெஷலாக அழைப்பும் விடுத்திருந்தார்.. மேலும், அன்புமணிக்கு புது போஸ்டிங் தரப்படும் என்பது நீண்ட காலமாகவே எதிர்பார்ப்பில் உள்ளதால், அது இன்றைய தினம் நிறைவேறும் என்று நம்பப்பட்டு வந்த நிலையில், இன்று கட்சி தலைவராக தேர்வாகி உள்ளார். ஒரு மனதாக சிறப்புப் பொதுக்குழு தேர்வு செய்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து, வரப்போகும் தேர்தலுக்கு பாமக தயாராகி வருவதாகவும், எம்பி மற்றும் சட்டமன்ற தேர்தலை குறி வைத்து அன்புமணியின் அரசியல் நகர போவதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    Is Anbumani become the leader and pmk special general body meeting today near Chennai அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X