சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. இதைத்தான் எதிர்பார்த்தோம்.. பாஜக உத்தேச பட்டியலால் குஷியில் திமுகவினர்!

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக போட்டியிடப் போகும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல் சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது அந்த 20 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்தும் உத்தேச பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக போட்டியிடப்போவதாக சொல்லப்படும் 20 தொகுதிகளில் பல தொகுதிகள் திமுகவின் செல்வாக்கு மிக்க தொகுதிகள் ஆகும். எனவே பாஜகவின் இந்த பட்டியலை பார்த்து திமுகவினர் குஷியாக உள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் இன்னும் 10 நாட்களில் தொடங்க உள்ளது. அதற்குள் கூட்டணியில் உள்ள கட்சிகள் இடம் தொகுதி பங்கீடு முடிகிற திமுக மற்றும் அதிமுக ஆகியவை மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் துறைமுகம், அரவக்குறிச்சி, பழனி, கோவை தெற்கு, கிணத்துக்கடவு, ஈரோடு, பவானி, காரைக்குடி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராசிபுரம், ஆத்தூர், திருவாரூர், திருவண்ணாமலை, வேலூர், ஓசூர், ராஜபாளையம், காஞ்சிபுரம், வேளச்சேரி, திருத்தணி, சிதம்பரம் என இந்த 20 தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளதாக உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

திமுக தொகுதிகள்

திமுக தொகுதிகள்

இந்த உத்தேச பட்டியல் உள்ள தொகுதிகளில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களின் விவரங்களும் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலைப் பார்த்து திமுகவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் திமுக போட்டியிடும் பல தொகுதிகள் இதில் உள்ளன.

பாஜகவே கேட்டு வங்கியதா

பாஜகவே கேட்டு வங்கியதா

பழனி, துறைமுகம் , வேளச்சேரி, சேப்பாக்கம், காஞ்சிபுரம் , வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, கிணத்துக்கடவு உள்பட 20 தொகுதிகளில் குறைந்த பட்சம் 15 தொகுதிகளில் திமுகவை பாஜக எது கொள்ள வேண்டியது இருக்கும் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்..திமுக வலிமையாக உள்ள பல தொகுதிகளை அதிமுக பாஜகவிற்கு ஒதுக்கியதா அல்லது பாஜகவை கேட்டு வாங்கியதா என்ற கேள்விகள் எழுகிறது.

காங்கிரஸ் இடத்தை பிடிக்கும்

காங்கிரஸ் இடத்தை பிடிக்கும்

தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு பாஜக பல்வேறு முக்கிய பிரபலங்களை தனது கட்சியில் சேர்த்து வலிமையாக போட்டியிடுகிறது. பாஜகவின் வலிமை என்னவென்பது முன்பு பார்த்த வரையில் மிகவும் பலவீனமான நிலையில் தான் தமிழகத்தில் இருந்து வந்தது. இந்த முறை 20 தொகுதிகளில் பாஜக வாங்கி உள்ள நிலையில் இதில் வெற்றி பெற்று, தமிழகத்தில் காங்கிரஸ் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக சட்டசபைத் தேர்தலில் வலிமையான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது.

2021 ல் அதிமுக உடன் கூட்டணி

2021 ல் அதிமுக உடன் கூட்டணி

2001ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்தித்தது. அதன் பிறகு சுமார் 20 வருடங்கள் கழித்து இப்போதுதான் திமுகவை போன்றே வலிமையான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக சட்டசபைத் தேர்தலை சந்திக்கிறது.

பாஜக பதிலடி கொடுக்குமா

பாஜக பதிலடி கொடுக்குமா

இந்த சூழலில் 20 தொகுதிகளில் பல தொகுதிகளில் திமுக எதிர்கொள்ளவேண்டிய நிலை பாஜகவிற்கு உருவாகிறது. துறைமுகம், சேப்பாக்கம், வேளச்சேரி, பழனி போன்ற தொகுதிகளில் எங்களை வீழ்த்துவ எளிதான காரியம் அல்ல என்று திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இன்று அளித்த பேட்டியில், எடுத்த எடுப்பிலேயே திமுக கூட்டணிக்கு 20 தொகுதிகளை அதிமுக விட்டுக் கொடுத்து விட்டது என்று பாஜகவை கிண்டலடித்துள்ளார். ஆனால் இதற்கு பதிலடி கொடுத்து பாஜக எத்தனை தொகுதிகளை இந்த தேர்தலில் கைப்பற்றப் போகிறது என்பது மே 2-ஆம் தேதி தெரிந்துவிடும்.

English summary
Is BJP going to clash directly with DMK in many constituencies ? DMK memebers excited by the proposed list of tamil nadu bjp candidates 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X