"கன்ட்ரோல்" பண்றீங்களா.. இது திமுக.. நாங்க "அவங்க" இல்லை.. திருவாரூரையே அசரடித்த "காம்ரேடு" தலைவர்
சென்னை: மத்திய பாஜகவின் கணக்கு, திமுகவிடம் எடுபடாது, திமுகவை யாராலும் அடிபணிய வைக்க முடியாது என்று மூத்த தலைவர் முத்தரசன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு வேறு எந்த மாநில ஆளுநரும், இந்த அளவுக்கு ஆரசியல் கட்சிகளால் விமர்சிக்கப்பட்டதில்லை.. எந்த மாநிலத்திலும், ஆளுநரின் தேனீர் விருந்து புறக்கணிக்கப்பட்டதில்லை.
கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி.. 4 சிறுமிகள் உட்பட 7 பேர் பலி! குளிக்க சென்ற போது விபரீதம்
வேறு எந்த மாநில ஆளுநருக்கு எதிராகவும் மக்களவையில் எதிர்க்கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியதில்லை.. வேறு எந்த மாநில முதல்வரையும், உச்சநீதிமன்றம் கண்டித்து, அவரது செயல்பாடுகளுக்கு கடிவாளம் போட்டதில்லை.

திருமாவளவன்
இது அத்தனையும் இப்போது நம்முடைய மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கிறது.. ஆளுநரின் உரிமைகள் ஒருபக்கம் இருந்தாலும், மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாத நிர்ப்பந்தம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.. அதனால்தான், கம்யூனிஸ்ட் கட்சிகளும் சரி, திருமாவளவனும் சரி, கி.வீரமணியும் சரி, பாஜக என்றாலே கொந்தளித்து போகிறார்கள்.. பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது என்றால், அதற்கு ஏஜென்டாக செயல்படுபவர் ஆளுநர் என்று ஒரேமாதிரியான குற்றச்சாட்டுகளை வீசி வருகிறார்கள்.

ஆளுநர் ரவி
இப்போது மீண்டும் ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து முத்தரசன் ஒரு பேட்டி தந்துள்ளார்.. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கலந்துக்கொண்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் சொன்னதாவது: "தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 21 மசோதாக்கள் கிடப்பில் உள்ளன. இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் நேரிலேயே ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

மத்திய அரசு
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அரசை கவிழ்க்கும் நோக்கமில்லை என்கிறார்.. அவர் சொல்வதையும், ஆளுநர் ஒப்புதல் அளிக்காததையும் ஒப்பிட்டு பார்த்தால் மத்திய அரசு, தமிழக அரசை எந்த திட்டத்தையும் செயல்படவிடாமல் இருப்பதை கவனமாக பார்த்துக் கொள்வதாகவே தெரிகிறது.. திமுக ஆட்சியை கவிழ்க்க முடியாது என்பதால், அதற்கு மாறாக அரசுக்கு நற்பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும், தமிழக மக்களுக்கு எதிராகவும் ஆளுநர், தமிழக பாஜக, ஒன்றிய அரசு என இந்த முக்கூட்டணி சேர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது...

கன்ட்ரோல்
இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல. ஒன்றிய அரசு நினைப்பதை மாநில அரசுகள் செய்தே தீர வேண்டும்.. அப்படி ஒத்துழைக்காத மாநிலங்களுக்கு, ஒன்றிய அரசு ஒத்துழைக்க மறுக்கிறது.. பாஜக ஆளுகின்ற மாநிலங்களுக்கு ஒரு நிதி, பிற கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களுக்கு ஒரு நிதி என்கிற அடிப்படையில் தான் ஒன்றிய அரசு செயல்படுகிறது... தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி கொடுத்து பணிய வைக்க பாஜக அரசு முயல்கிறது.. கடந்த கால அதிமுக அரசைப்போலவே, திமுக அரசும் கட்டுப்பட வேண்டுமென நினைக்கிறது... அதற்காக கணக்கு போடுகிறது.. ஆனால், அது ஒருபோதும் நடக்காது..

சுற்றறிக்கை
ஆளுநரால் நியமிக்கப்பட்ட துணை வேந்தர்கள் அத்துமீறி செயல்படுகின்றனர். குறிப்பாக பெரியார் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் கல்லூரி மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது மிகப் பெரிய கண்டனத்திற்கு உரியது... ஏற்க முடியாதது.. மாநில, தேசிய அளவில் தலைவர்கள் உருவாகி உள்ளனர். அவர்கள் மாணவர் பருவத்தில் அரசியல் பங்கேற்று உருவாகி உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.