சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்

திமுக மீது கம்யூனிஸ்ட் கட்சிகள் வருத்தத்தில் உள்ளதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்-வீடியோ

    சென்னை: கம்யூனிஸ்ட்டுகளை பற்றி திமுக போட்டு கொடுத்துவிட்ட விவகாரம் மிகப்பெரிய விரிசலை இரு தரப்புக்கும் இடையே எழுப்பிவிடுமோ என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.

    பொதுவாக, சிறிய கட்சிகளை தங்கள் கூட்டணியில் சேர்த்து கொண்டால், அதற்காக பேரங்கள் பெரிய கட்சி பேசுவது இயல்பு.

    இந்த விஷயத்தில் ஜெயலலிதாவின் யுக்தி வேறு மாதிரி இருந்தது. கூட்டணிக்குள் வரும் சின்ன கட்சிகளுக்கு தானே முன்னின்று எல்லா செலவையும் பொறுப்பேற்று கொள்வார். அவர்களையும் வெற்றி பெற வைத்துவிடுவார். இது ஒரு வகையில் கைதூக்கி விடுவதை போலதான்!

    அப்ப நாங்குநேரி அதிமுகவுக்குதானா.. ரூபிக்கு கடும் எதிர்ப்பு.. உச்சகட்டத்தில் காங். கோஷ்டி பூசல்!அப்ப நாங்குநேரி அதிமுகவுக்குதானா.. ரூபிக்கு கடும் எதிர்ப்பு.. உச்சகட்டத்தில் காங். கோஷ்டி பூசல்!

    ஏன் வெளியிட்டது?

    ஏன் வெளியிட்டது?

    இதையும் திமுக இவ்வளவு காலம் இலைமறை காய்மறையாக செய்துவந்த ஒன்றுதான். ஆனால், இந்த முறை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குப் பணம் கொடுத்தது குறித்த விவரத்தை திமுக வெளியிட்டது ஏன் என்று தெரியவில்லை. இதற்கு முன்பு இப்படியெல்லாம் திமுக வெளிப்படையாக கூறியதாக தெரியவில்லை.

    நன்கொடை

    நன்கொடை

    தனது கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொமதேக ஆகிய கட்சிகளுக்கு சுமார் 15 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 10 கோடி ரூபாயும், நன்கொடையாக வழங்கியதாக திமுக கணக்கு காட்டியுள்ளது. நாளை தேர்தல் ஆணையம் திமுகவை கணக்கு கேட்டுவிடும் என்பதால், இப்படி சொல்லிவிட்டதா என புரியவில்லை.

    வருத்தம்

    வருத்தம்

    ஆனால், பணம் பெற்றதை திமுக போட்டு கொடுத்ததால், கம்யூனிஸ்ட்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளனர். எதற்காக ஸ்டாலின் இந்த விஷயத்தை வெளியே சொன்னார் என்ற பீதி, வருத்தத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளதால், கூட்டணியில் ஒரு தொய்வு காணப்பட்டு வருகிறது.. தேவையில்லாமல் இரு கட்சிகளுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

    உண்டியல் வசூல்

    உண்டியல் வசூல்

    உண்டியல் குலுக்கும் கட்சி என்று பெயர் எடுத்தாலும் அடிப்படை கொள்கையை விட்டுத்தராத கட்சி என்பதுதான் காலங்காலமாக கம்யூனிஸ்ட்கள் பெற்ற பெயர். ஆனால் அதற்கும் ஒரு கருப்பு புள்ளி விழுந்துள்ளது. கடைசியில இவங்களும் காசு வாங்கிட்டாங்களே என்ற கறை படிந்துவிட்டது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, "நாங்க, தெருத்தெருவா உண்டியல் குலுக்கி, வசூல் செய்து.. போஸ்டர் அடிச்சி, பிரச்சாரத்துக்கு உதவிட்டு வர்றோம்.. கட்சி தலைமை காசு வாங்கிடுச்சா?" என்ற கம்யூனிஸ்ட் தொண்டர்களையும் வேதனையில் புலம்ப வைக்கும் நிலைமை வந்துள்ளது.

    எச்.ராஜா

    எச்.ராஜா

    இதெல்லாம் போக எச்.ராஜா இந்த விஷயத்தை கிண்ட ஆரம்பித்துள்ளார். திமுக கொடுத்த அந்த பணத்தை 2 கட்சிகளும் என்ன செலவு செய்தார்கள், இதுக்கு கணக்கு வேணும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். இதில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் தரப்பு விளக்கத்தை அறிக்கையாகவும் தேர்தல் பணியாற்றிய திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கே நாங்கள் செலவு செய்துவிட்டோம் என்றும் சொல்கிறார்கள்.

    அமலாக்கத் துறை

    அமலாக்கத் துறை

    எனவே நாளை தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தை எப்படி கையாள போகிறதோ? அதன்மூலம் திமுக-கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடுகள் எப்படி இருக்க போகின்றனவோ தெரியாது. இதைதவிர, அமலாக்கத்துறையையும் உற்றுநோக்கும் அளவுக்கு இந்த பண விவகாரம் கொண்டு வந்துவிடும் என யூகிக்கப்படுகிறது.

    எப்படி பார்த்தாலும்... திமுக இப்படி செய்திருக்க கூடாது, இது தேவையில்லாத வேலை.. இதனால் கம்யூனிஸ்ட்கள் - திமுக இடையே விரிசல்களும் விரிவடையும் என்றே முணுமுணுக்கப்படுகிறது!

    English summary
    As the CPM, CPI Communist Parties are dissatisfied with the DMK, there seems to be a crack in the alliance
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X