சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமமுக தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்களுக்கு ஐஸ்.. ஈர்க்கப் பார்க்கிறாரா!

Google Oneindia Tamil News

Recommended Video

    இது அமமுக தேர்தல் அறிக்கை

    சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.

    60 சிறப்பு அம்சங்களை கொண்ட அந்த அறிக்கையில் இஸ்லாமியர்களின் நம்பிக்கையையும், வாக்குகளையும் ஈர்க்கும் வகையில் வாக்குறுதிகளை அளித்துள்ளார் டி.டி.வி.

    is dinakaran luring muslim votes

    வக்பு வாரியம் மூலம் இஸ்லாமிய மருத்துவக்கல்லூரி, ஏழை எளிய முஸ்லீம்களுக்கு வீட்டு வசதி, இஸ்லாமிய கைதிகள் விடுதலை, இஸ்லாமியர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கைக்கு சட்ட அங்கீகாரம் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அ.ம.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

    பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவே அளிக்காத பல வாக்குறுதிகளை அளித்து, இஸ்லாமிய மக்களின் ஓட்டுக்களை முழுமையாக தன் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தினகரன்.

    தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை.. அ.ம.மு.க அசத்தல் தேர்தல் அறிக்கை தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை.. அ.ம.மு.க அசத்தல் தேர்தல் அறிக்கை

    இதனிடையே சிறிய இஸ்லாமிய கட்சிகளையும், அமைப்புகளையும் தனது வலைக்குள் இழுத்துப்போட்டுள்ளார் டி.டி.வி. அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இஸ்லாமியர்களின் வாக்குகளை முழுவதுமாக பெற்றுவிடலாம் என திமுக கணக்கு போட்டிருந்த நிலையில், தினகரன் புது கணக்கு போட்டு வருகிறார்.

    தினகரன் கணக்கு பலிலிக்குமா.. பொறுத்திருந்து பார்க்கலாம்.

    English summary
    After seeing the manifesto of AMMK the question arises that is Dinakaran trying to woo Muslim votes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X