India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"விடமாட்டோம்".. அன்று திமுக அடித்த பந்தை..இன்று திருப்பி வாங்கி வீசும் பாஜக.. சுபஸ்ரீயை ஞாபகமிருக்கா

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த ஆட்சி காலத்தில், திமுக மேற்கொண்ட அதே ரூட்டை, பாஜகவும் கையில் எடுத்து, ஆளும் கட்சியை கேள்வி எழுப்பி வருகிறது. இதுதான் திமுக தரப்பை கடுப்பாக்கி வருகிறது.

தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் சித்திரை தேர் திருவிழாவில் எதிர்பாராத சோகம் ஏற்பட்டது.. உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்ததில் 2 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்.

உச்சநீதிமன்றம் செம்ம குட்டு- 7 தமிழரை விடுவிக்க உடனே கையெழுத்து போடுங்க- ஆளுருக்கு ராமதாஸ் அட்வைஸ் உச்சநீதிமன்றம் செம்ம குட்டு- 7 தமிழரை விடுவிக்க உடனே கையெழுத்து போடுங்க- ஆளுருக்கு ராமதாஸ் அட்வைஸ்

மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்... நேற்று காலையில், இந்த அதிர்ச்சியை கேள்விப்பட்டு ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டது.

விளக்கம்

விளக்கம்

இந்நிலையில், நேற்று, தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.. அப்போது,திருவிழா காலங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்... இப்படிப்பட்ட சூழலில், தஞ்சாவூர் தேர் திருவிழா அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் ஊர் மக்களால் ஒன்று கூடி நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் தந்திருந்தார்.

 தேர் விபத்து

தேர் விபத்து

இந்த தேர் விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்ற நிலையில், களிமேடு பகுதியில் நடைபெற்றது தேர்த்திருவிழாவும் கிடையாது, அது தேரும் கிடையாது.. மாறாக அது சப்பரம்.. இந்த விழா அரசுக்கு தகவல் அளிக்காமல் நடத்தப்பட்டுள்ளது என்று சேகர்பாபு கூறியிருந்தார்.. சேகர்பாபு சொன்ன விஷயத்தைதான், தமிழக பாஜக 2 நாட்களாக கிண்டி எடுத்தும் கேள்வி கேட்டும் வருகிறது..

 திருப்பதி நாராயணன்

திருப்பதி நாராயணன்

தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயண் இதுகுறித்து ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.. "மத்திய மண்டல ஐ ஜி திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் தனியார் தொலைக்காட்சியில்,மின் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், உயர் மின் அழுத்த கம்பிகளை தவிர்த்து மின்சாரத்தை செயலிழக்க செய்திருந்ததாகவும் கூறியுள்ளார். அப்படியானால் அரசுக்கு தெரிந்தே இந்த விழா நடந்துள்ளது என்று தானே பொருள்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

 8 ட்வீட்கள்

8 ட்வீட்கள்

இன்றும் ட்வீட் போட்டுள்ளார்.. ஒன்றல்ல, மொத்தம் 8 ட்வீட்.. சென்னையில் பேனர் சரிந்து விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயை நினைவிருக்கா? அவர் மரணத்துக்கு திமுக ஆற்றிய எதிர்வினையை வைத்துதான் நாராயணன் ட்வீட் பதிவிட்டு, முக்கிய கேள்வி ஒன்றையும் எழுப்பி உள்ளார். அந்த ட்வீட்களின் தொகுப்புதான் இவைகள்:

 சுபஸ்ரீ

சுபஸ்ரீ

"அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம்,அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? 2019, செப்டம்பர் மாதம் 12ம் தேதியன்று பேனர் விழுந்து விபத்தில் சிக்கிய சுபஸ்ரீ மரணத்தின் போது இந்த விமர்சனங்களை முன் வைத்தவர் அன்றைய தமிழக எதிர்க்கட்சி தலைவர் திரு @mkstalin அவர்கள்.

 மின்சாரம்

மின்சாரம்

நேற்று தஞ்சாவூர் களிமேடு அப்பர் கோவில் தேர் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது 11 பேர். 15 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், இது ஒரு விபத்து தான் என்றும், அனுமதியின்றி தேர் திருவிழா நடந்தது என்றும் அதனால் அரசை விமர்சிக்கக்கூடாது என்றும் சொல்கிறது திமுக அரசு. தகவல் தெரிவிக்கவில்லை, அனுமதி பெறவில்லை என்று அரசு கூறுவது ஏற்கத்தக்கதல்ல.

 பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாதுகாப்பு ஏற்பாடுகள்

கடந்த நூறு வருடங்களாக நடைபெறும் இந்த திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்குவது அந்த சரகத்தை சேர்ந்த காவல்துறையின் கடமை. தேர் திருவிழாவில் பொது மக்கள் கூடுவார்கள் என்ற அடிப்படையில், பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை ஆகிய துறைகளோடு முன்கூட்டியே கலந்தாலோசித்து சாலைகளை சீரமைப்பது, மின்சார இணைப்பை துண்டிப்பது உள்ளிட்ட உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டிய பொறுப்பு அரசினுடையது.

 உயிர்ப்பலி

உயிர்ப்பலி

சட்டமும் அதை தான் சொல்கிறது. அதில் தவறிருந்தால் அதற்கான முழு பொறுப்பையும் தொடர்புடைய அரசு துறை அதிகாரிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும்.. விழா அமைப்பினர் தகவல் தரவில்லை, அனுமதி பெறவில்லை என்பது பழியிலிருந்து தப்பித்து கொள்ளும் முயற்சியே. இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? என்று நீங்கள் கேட்ட அதே கேள்வியை தான் கேட்கிறோம்.

 11 பேர் மரணம்

11 பேர் மரணம்


ஆளும் திராவிட முன்னேற்ற கழக அரசு தான் 11 பேர் மரணத்திற்கு காரணம் என்று நாம் கூறவில்லை. ஆனால், இந்த கொடிய நிகழ்விற்கு காரணமாண அலட்சியமிக்கவர்கள் மீது, பொறுப்பில்லாதவர்கள் மீது, கையாலாகாதவர்கள் மீது அதிகார மமதையால் நடைபெற்ற அராஜகத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம்.

 நாராயணன் ட்வீட்

நாராயணன் ட்வீட்

அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம், அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?" என்ற அரசின் மீதான அன்றைய எதிர்க்கட்சி தலைவரின் விமர்சனம் சரியென்றால், அதே விமர்சனம் இன்றைய அரசுக்கும் பொருந்தும் தானே? நாராயணன் திருப்பதி,செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Is DMK doing the right thing or What does Tamil Nadu BJP leader tirupati narayanan say சுபஸ்ரீ மரண சம்பவத்தை நினைவூட்டி, தமிழக பாஜக திமுகவை கேள்வி கேட்டுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X