• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

முதல்வர் ஸ்டாலினுக்கு மிட்நைட்டில் பறந்த ரிப்போர்ட்.. அதென்ன 175?.. புது உத்தரவுகள் வரப்போகுதாமே?

Google Oneindia Tamil News

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக அதற்கான வேலைகளில் தீவிரமாகி உள்ளது.. இது சம்பந்தமான மிக முக்கிய அதிரடிகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ளாராம்..!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சிகளை விட திமுக ஆரம்பத்தில் இருந்தே களப்பணியில் தீவிரம் காட்ட துவங்கிவிட்டது.. பெரும்பாலான கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து நவம்பர், டிசம்பர் மாதங்களிலேயே விருப்ப மனுக்களை பெற்றனர்

ஆனாலும், ஆளுங்கட்சியான திமுகவில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுபவர்களை தேர்வு செய்வதற்கான பணிகளை முடுக்கிவிட்டனர்..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. மக்களே உஷார்.. உங்க கையில் அதிகபட்சம் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்?நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. மக்களே உஷார்.. உங்க கையில் அதிகபட்சம் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்?

 கூட்டணி கட்சிகள்

கூட்டணி கட்சிகள்

அதேபோல, விருப்ப மனுக்களை அளித்தவர்களிடம் நேர்க்காணல் வரை செய்து வேட்பாளர்களை மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட்டும் தயார் செய்யும் பணியும் துரிதமாக கையில் எடுக்கப்பட்டது.. இதையெல்லாம் பார்த்து, கடந்த மாதமே, அக்கூட்டணியில் உள்ள கட்சிகள் பல மாவட்டங்களில் கதி கலங்கி நின்றன.. காரணம், கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இத்தனை சதவீத இடங்கள்தான் என்பதை மேல் மட்ட தலைவர்கள் பேசி முடிவு செய்துவிடுவார்கள்... இதுதான் வழக்கமான இயல்பு..

 என்ன முடிவு?

என்ன முடிவு?

அதேபோல, எந்தெந்த வார்டுகளில் போட்டியிடுவது என்பதை மாவட்ட அளவில் கூட்டணி கட்சி நிர்வாகிகளே பேசி விடுவார்கள்.. ஆனால், இந்த முறை திமுக கூட்டணிகளை பற்றி எந்தவித முடிவும் எடுக்கவில்லை.. அந்த கட்சிகளுக்கு எத்தனை சதவீத இடங்கள் என்பதையும் ஒதுக்கவில்லை... மாவட்ட அளவில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கும்படி திமுக கட்சி தலைமை உத்தரவிட்டுவிட்டது.. அப்படி முதல்வர் உத்தரவிட்டும், மாவட்டங்களில் அப்படியான எந்தவித பேச்சுவார்த்தையும் தொடங்கப்படாமலேயே இருந்தது, கூட்டணி கட்சிகளை கலங்கடித்துவிட்டது.

 நாளை மனு தாக்கல்

நாளை மனு தாக்கல்

இப்போது விஷயம் என்னவென்றால், இந்த கலக்கம் கூட்டணி கட்சிகளுக்கு கூடிப்போய்விட்டது.. காரணம், உள்ளாட்சி தேர்தல் தேதியே அறிவிக்கப்பட்டு விட்டது. நாளை மனு தாக்கலும் துவங்குகிறது.. மனு தாக்கல் செய்ய 8 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.. அதாவது மனு தாக்கல் கடைசி நாள் பிப்ரவரி 4-ந்தேதி. அதனால் அனைத்து அரசியல் கட்சிகளிடத்திலும் பரபரப்பு அதிகரித்து வேட்பாளர்களை முடிவு செய்து அறிவிப்பதில் வேகம் காட்டி வரும்நிலையில், திமுக இன்னும் ஸ்பீடு எடுத்துள்ளது..

 மாவட்ட செயலாளர்கள்

மாவட்ட செயலாளர்கள்

சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்கள், எம்எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோரிடம் அறிவாலயத்தில் ஆலோசிக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஏற்கனவே, மா.செ.க்களுக்கு பல இன்ஸ்ட்ரக்சன்களை ஸ்டாலின் கொடுத்திருந்தாலும், இந்த ஆலோசனையில் கடைசிக்கட்ட அட்வைஸ்களை சொல்லப்போகிறாராம்.. குறிப்பாக, கூட்டணி கட்சிகளிடம் இன்னும் பேச்சுவார்த்தையே நடத்தாத சூழலில், அவர்களுக்கு சீட் ஒதுக்குவதா? வேண்டாமா? ஒதுக்குவதாக இருந்தால் எத்தனை சீட் ஒதுக்க வேண்டும்? என்பது பற்றி இறுதி இன்ஸ்ட்ரக்சனை கொடுப்பார் என தெரிகிறது.

வேட்பாளர்கள்

வேட்பாளர்கள்

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் இருக்கிறது. அதற்குரிய வேட்பாளர்கள் தேர்வினை மாவட்டமே பார்த்துக்கொள்ளுங்கள் என்று முன்னரே முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருப்பதால் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று இரவோடு இரவாக ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.. 175 இடங்களுக்கு குறையாமல் போட்டிப்போட திமுக நினைக்கிறது போலும்.

 175 சீட்கள்

175 சீட்கள்

25 சீட்டுகள் தான் கூட்டணி கட்சிகளுக்கு என முடிவு செய்திருந்தது... இதில் மாற்றம் இருக்குமா? என்பது இன்றைய ஆலோசனையில் தெரியவரும் என்கிறார்கள். அதனால், இன்று இரவு அல்லது நாளை காலையில், சென்னை திமுக வேட்பாளர்கள் லிஸ்ட் ரிலீசாகலாம் என அறிவாலயத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருக்கிறோமா? இல்லையா? தேர்தல் இட பங்கீடு குறித்து நம்மிடம் எப்போது பேசுவார்கள் ? என்ற பதட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் இருப்பது தனி கதை !

English summary
Is DMK planning contest alone in urban local elections and the alliance parties are lamenting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion