• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஓஹோ.. இதான் மேட்டரா.. திமுகவை டேமேஜ் செய்ய புது அஸ்திரத்தை எடுத்த பாஜக.. ஒர்க் அவுட் ஆகுமா?

Google Oneindia Tamil News

சென்னை: திமுக மீது அனைத்து கட்சிகளின் பார்வையும் குவிந்து வருகிறது.. மிக முக்கியமான பிரச்சனையை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் மும்முரமாகி வருகிறதாம்..!

சட்டசபை தேர்தலில் திமுக ஜஸ்ட் பாஸ்தான் ஆகியிருந்தது.. இந்த ஜஸ்ட் பாஸ் வெற்றியானது, ஸ்டாலினுக்கே அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதனால்தான், நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலிலும் அபார வெற்றியை பெற வேண்டும் என்று திமுக முனைப்பு காட்டியது.. இன்னும் சொல்லப்போனால், இந்த தேர்தலை ஒரு கவுரவ பிரச்சினையாக நினைத்துவிட்டது..

நயினார் பேச்சுக்கு இடையே.. பரபர உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை.. பாஜகவிற்கு ஜெர்க் கொடுக்குமா அதிமுக ? நயினார் பேச்சுக்கு இடையே.. பரபர உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை.. பாஜகவிற்கு ஜெர்க் கொடுக்குமா அதிமுக ?

 பணப்பட்டுவாடா

பணப்பட்டுவாடா

எனவே, சட்டசபை தேர்தல்களை மிஞ்சும் அளவுக்கு சில இடங்களில் பணப்பட்டுவாடாக்கள் நடந்தாக செய்திகளும் வந்தன.. அதுவும் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை பட்டுவாடா செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.. சிலஇடங்களில் காமாட்சி அம்மன் விளக்குகள் வினிநோயகமும் இரவு நேரங்களில் நடந்துள்ளது.. இது தொடர்பாக அதிமுகவினர் ராத்திரி நேரம் என்றும் பார்க்காமல்போராட்டமும் செய்தனர்.. இப்படி பல புகார்களை திமுக மீது எல்லா எதிர்க்கட்சிகளும் அப்போது முன்வைத்திருந்தன..

 தேர்தல் தேதி

தேர்தல் தேதி

இந்நிலையில், திமுக தரப்பு மீது சில சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வட்டவடித்து கொண்டிருக்கின்றன. தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக மும்முரமாகி வருகிறது.. ஆனால், கொரோனாவும் ஒமிக்ரானும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் பலவி விரும் நிலையில், தேர்தல் நடக்குமா என்ற சந்தேகமும் இத்தனை நாளாக எழுந்துவந்தது.. பிறகு தேர்தல் நடத்துவது உறுதியாகி, அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுவிடவும், திமுக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டது..

ஒமிக்ரான்

ஒமிக்ரான்

அதில் ஒன்றுதான், ஊரடங்கில் தளர்வுகள் குறித்த அறிவிப்பு.. கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருக்கும் நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் மக்களிடம் சந்தேகம் அதிகரித்து வருகிறது. தேர்தல் பணிகளை இரவு நேரங்களில் ரகசியமாக ஆளும் கட்சியினர் தடையின்றி செய்யவே இந்த ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளன..

பாஜக

பாஜக

இதற்கிடையே, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக ஊரடங்கு தளர்வுகள் செய்யப்பட்டிருப்பதாக திமுக அரசுக்கு எதிராக , தங்களின் தேசிய தலைமைக்கு புகார் அனுப்ப தமிழக பாஜகவினர் திட்டமிட்டு வருகிறார்களாம்.. அதுமட்டுமல்ல, இந்த புகாரின் நோக்கம், துணை ராணுவ படையினரை தமிழகத்துக்கு அனுப்பி பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே என்கிறது கமலாலய வட்டாரம்...

 பாஜக பிளான்

பாஜக பிளான்

உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல்கள் நடைபெறுகிறது என்றால், அதில் பெரும்பாலும் ஆளும் கட்சிகள் வெற்றி பெறுவது என்பது வழக்கமான இயல்பு.. இந்த முறை அப்படி நடக்கவும் வாய்ப்புள்ளது என்றாலும், ஏதாவது ஆதாரங்கள் சிக்குமா? அதைவைத்து திமுகவை டேமேஜ் செய்ய முடியுமா என்று கண்களில் விளக்கெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு உலா வருகின்றன தமிழகத்தின் எதிர்க்கட்சிகள்..!

English summary
Is DMK planning for money giving to voters in TN local body election and Oppn. Parties allegations
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X