சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வருகிறது அடுத்த வாரிசு.. தனது மகனையும் களம் இறக்கும் முதல்வர் எடப்பாடி.. பரபரக்கும் அதிமுக

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : CM Edapadi Palanisamy is taking radical steps to bring his Son Mithun into AIADMK

    சென்னை: யாரை நம்பியும் பிரயோஜனம் இல்லை.. இனி நம் மகனையே உள்ளே இறக்கிவிட வேண்டியதுதான் என்று எடப்பாடியார் முடிவு செய்துவிட்டார் போலும்.. மகனை அரசியல் களத்தில் இறக்கிவிட யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

    எம்பி தேர்தலுக்கு முன்னாடிவரை, வாரிசு அரசியலுக்கு இடமில்லை, ஒரு சாதாரண தொண்டன் கூட முதல்வர் பதவிக்கு வரலாம் என்றுதான் அதிமுக தலைமை சொல்லி வந்தது. ஆனால் இது அப்படியே தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு உல்டாவாக மாறியது.

    கடந்த பிப்ரவரி மாதம், எம்பி தேர்தலுக்கு சீட் கேட்டு விண்ணப்பிக்கும்போதே நிறைய வாரிசுகளின் பெயர் அதிமுக தரப்பில் அடிபட்டது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுன் பெயரில் விருப்ப மனு வாங்க உள்ளதாகவும் தகவல் ஒன்று கசிந்தது.

    தமிழர்களின் வரலாற்றை பறைசாற்ற திட்டம்.. கடல் அகழாய்வில் களமிறங்கும் தொல்லியல் துறை.. அதிரடி முடிவு!தமிழர்களின் வரலாற்றை பறைசாற்ற திட்டம்.. கடல் அகழாய்வில் களமிறங்கும் தொல்லியல் துறை.. அதிரடி முடிவு!

    எம்ஜிஆர்

    எம்ஜிஆர்

    ஆனால் இதில் உண்மைதன்மை ஏதும் இல்லை என்று பின்னாளில்தான் புரிந்தது. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது எம்பி, எம்எல்ஏ தேர்தலில் வாரிசுகளுக்கு போட்டியிட எப்போதும் வாய்ப்பு அளிக்கவே மாட்டார். அப்படியே இவர்கள் வாய்ப்பு அளித்தாலும், ஒருமுறைக்கு பத்துமுறை யோசித்துதான் செய்வார்கள்.

    சீனியர்கள்

    சீனியர்கள்

    வாரிசு அரசியல் என்றாலே திமுகதான் என்று பதிந்துவிட்ட நிலையில், அதிமுகவும் இந்த ரேஸில் கடந்த எம்பி தேர்தலில் இணைந்துவிட்டதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.ஜெயக்குமார் மகன் ஜெயவரதன் ஆகட்டும், ஓபிஎஸ். மகன் ரவீந்திரநாத் ஆகட்டும், ராஜன் செல்லப்பா மகன் சத்யன் ஆகட்டும்.. இவர்களுக்கு சீட் தரும்போதும் தொண்டர்களும், அதிமுகவின் சீனியர்களும் குமுறதான் செய்தார்கள். இப்போது ஒரு வாரிசு தவிர மற்றவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், உரிய முக்கியத்துவத்தை வழங்க தந்தைமார்கள் முயன்று வருகிறார்கள்.

    ஓபிஎஸ் மகன்

    ஓபிஎஸ் மகன்

    அந்த வகையில், எடப்பாடியார், தன் வாரிசான மிதுனை கட்சியில் முன்னிறுத்த முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. கட்சி நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகளுக்கு பங்கேற்கவும் வழி செய்வதாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம், ஓபிஎஸ் மகனுக்கு இணையாக தன் மகனையும் கொண்டு வர வேண்டும் என்பதால் இருக்கலாம் அல்லது ஒரு தந்தையின் அடித்தளத்து ஆசையாகவும் இருக்கலாம்.

    மிதுன்

    மிதுன்

    ஆனால் டெல்லியில் தனது செல்வாக்கை எப்படியாவது ஊன்ற வேண்டும் என்பது எடப்பாடியாரின் உறுதியான எண்ணமாகவே உள்ளது. அதற்காக தன்னுடைய ஆதரவாளர்களுக்கு ராஜ்ய சபா சீட் உட்பட பலவற்றை செய்தும், ஓபிஎஸ்-க்கு நிகரான, அல்லது அதைவிட உயர்ந்த செல்வாக்கை டெல்லியில் எடப்பாடியால் பெற முடியாமல் போனதாக தெரிகிறது. அதனால்தான் மிதுனை மத்திய அமைச்சராக்க எடப்பாடியார் யோசிப்பதாக தகவல்கள் கசிகின்றன.

    எரிச்சல்

    எரிச்சல்

    அதற்கேற்ற மாதிரி, மகனும், ஆர்வத்துடன் தனது பங்களிப்பை தந்து வருகிறாராம். நம்மை நம்பாமல், மகனை எடப்பாடி நம்புகிறாரே என்று ஒருசில அதிமுக அமைச்சர்களுக்கும் மிதுனின் வருகை எரிச்சலை தந்ததாகவும் சொல்கிறார்கள். இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையோ, பொய்யோ தெரியாது. ஒருவேளை எடப்பாடியாரின் மகன் திறமையானவராக இருந்து, வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக அவரை ஒதுக்கிவிடுவதும் நியாயம் இருக்காதுதான்!

    English summary
    It is said that, CM Edapadi Palanisamy is taking radical steps to bring his Son Mithun into AIADMK politics
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X