சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்.. பொறிந்து தள்ளிய எடப்பாடி.. உள்ளே வந்த "தலை".. எல்லாம் மாற போகுது?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை நடக்க உள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான சில சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

Recommended Video

    ADMK Controvasy | EPS-ஐ அழைக்க OPS-க்கு தகுதி கிடையாது - ராஜன் செல்லப்பா

    கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதையடுத்து பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், கடந்த 17ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

    தீர்ப்பில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்ற 2 நீதிபதி அமர்வில் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு திங்கள் கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

    ஜூலை11 அதிமுக பொதுக்குழு செல்லாது சென்னை ஹைகோர்ட் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடுஜூலை11 அதிமுக பொதுக்குழு செல்லாது சென்னை ஹைகோர்ட் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு

     தீர்ப்பு

    தீர்ப்பு

    இந்த பொதுக்குழு தீர்ப்பு காரணமாக எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகள் மீது கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழு ஜூன் 23ம் தேதி நடந்த அன்று பொதுக்குழுவை ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை நீதிபதி ஏற்றுக்கொள்ளாத நிலையில்தான் ஜூலை 11ம் தேதி நடத்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. எடப்பாடிக்கு இந்த திட்டத்தை கொடுத்ததே ஒரு முன்னாள் அமைச்சர்தான் என்று கூறப்படுகிறது.

    முன்னாள் அமைச்சர்

    முன்னாள் அமைச்சர்


    அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர்தான் எடப்பாடியிடம் ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்டலாம் என்று அந்த மேடையிலேயே அறிவித்துவிடலாம் என்று கூறியதாக தெரிகிறது. அவர் வழங்கிய ஆலோசனையின் பெயரில்தான் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவையில் ஜூலை 11ம் தேதிக்கான பொதுக்குழு அறிவிப்பு வெளியானது. ஆனால் 15 நாட்களுக்கு முன்பாக முறையாக பொதுக்குழு அழைப்பிதழ் செல்லவில்லை என்று நீதிமன்றம் இந்த பொதுக்குழுவை ரத்து செய்துள்ளது.

    அவசரம்

    அவசரம்

    அன்று அவசரப்பட்டு அறிவித்ததே எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளது. இந்த நிலையில்தான் அந்த முன்னாள் அமைச்சர் மீது எடப்பாடி கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மட்டுமின்றி இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே தவறான ஆலோசனைகளை வழங்கிய 3 மாஜி அமைச்சர்கள் மீது எடப்பாடி கடும் கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. உங்கள் நம்பி முடிவுகளை எடுத்து எனக்கே சிக்கலாகிவிட்டது பாருங்க என்று எடப்பாடி கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    அப்செட்

    அப்செட்

    முக்கியமாக எடப்பாடி பழனிசாமி சட்ட வல்லுனர் ஒருவரிடம் கோபமாக இருக்கிறாராம். அதாவது மாஜி அமைச்சர் ஒருவர் சட்டம் படித்தவர். அவர் தனக்கு சட்டம் தெரியும் என்று பல்வேறு ஆலோசனைகளை எடப்பாடிக்கு வழங்கி இருக்கிறார். இது எதுவும் கோர்டில் வேலைக்கு ஆகவில்லை என்ற கடுப்பில் எடப்பாடி இருக்கிறாராம். இதனால் இந்த முறை இவர்கள் யாருடைய கருத்தையும் கேட்க வேண்டாம் என்ற திட்டத்தில் எடப்பாடி இருக்கிறாராம்.

    சட்ட வல்லுனர்

    சட்ட வல்லுனர்

    இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி முக்கியமான வேறு ஒரு சட்ட வல்லுனரிடம் ஆலோசனை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. திங்கள் கிழமை அவரின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வருகிறது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி வெளியே கட்சியை சாராத ஒருசட்ட வல்லுனரை ஆலோசனைக்கு அணுகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை மேல்முறையீட்டில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி அந்த சட்ட புள்ளியிடம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    English summary
    Is Edappadi Palanisamy not happy with few of senior AIADMK leaders in his side? அதிமுக பொதுக்குழு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை நடக்க உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X