ஓபிஎஸ் செய்த ஒற்றை தவறு.. உச்சபட்ச முடிவை எடுக்க போகும் எடப்பாடி? ஓ இதுக்குத்தான் அத்தனை மீட்டிங்கா?
சென்னை: அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை பெற தீவிரமாக முயன்று வரும் எடப்பாடி பழனிசாமி விரைவில் நிர்வாகிகள் உதவியுடன் உச்சபட்ச முடிவு ஒன்றை எடுப்பார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்டி எப்படியாவது பொதுச்செயலாளர் ஆகிவிடலாம் என்ற திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஆனால் இதற்கு ஓபிஎஸ் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
இது தொடர்பாக பல்வேறு வழக்குகளை, மனுக்களை ஓ பன்னீர்செல்வம் போட்டு வருகிறார். ஒரு பக்கம் ஜூலை 11ம் தேதி நடக்க அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுக்க இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி மாஸ்டர்கள்.. கொள்ளைப் பணத்தில் அதிமுக குத்தகை.. வெளுத்து வாங்கிய நாஞ்சில் சம்பத்!

வழக்கு மேல் வழக்கு
அதேபோல் பொதுக்குழு தொடர்பாக ஏற்கனவே ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே இதில் எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றம் சென்றால் அதில் ஓ பன்னீர்செல்வத்தின் வாதத்தையும் கேட்க வேண்டும். அதோடு தலைமை கழக கூட்டத்திற்கு எதிராக இவர் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டு இருக்கிறார். இது போக ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்படவில்லை என்று அவமதிப்பு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார்.

எடப்பாடி மனு
இப்படி வரிசையாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் வழக்குகளை தொடுத்துள்ளார். இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக, எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் பதில் மனு கொடுத்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி வருகிறார் , இதனால் அவர் மனுவை ஏற்க கூடாது என்று ஓபிஎஸ் மனுவிற்கு எதிராக எடப்பாடி பதில் அளித்துள்ளார். ஆனால் எடப்பாடி தரப்பு நேரடியாக வழக்கு எதையும் தொடுக்கவில்லை.

விதி என்ன சொல்கிறது
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வத்தை கட்சி விதிகளை மீறிவிட்டதாக கூறி கட்சியில் இருந்தே நீக்க எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதிமுக விதிப்படி, கட்சி முடிவுகளுக்கு எதிராக நிர்வாகிகள் வழக்கு தொடுக்க கூடாது. ஏற்கனவே ஒருவர் வழக்கு தொடுத்து இருந்தால் அதற்கு மேல்முறையீடு செய்யலாம். எனவே எடப்பாடி தரப்பு மேல்முறையீடு செய்யும் வழக்குகளில் பிரச்சனை இல்லை.

விதிக்கு எதிரானது
ஆனால் ஓ பன்னீர்செல்வம் தரப்போ கட்சி முடிவுகளுக்கே எதிராக வழக்கு தொடுக்கிறது. இது பைலாவிற்கு எதிரானது ஆகும். இந்த நிலையில்தான் பைலாவை பயன்படுத்தி ஓ பன்னீர்செல்வத்தை பொதுக்குழு அல்லது தலைமை கழக குழு மூலம் தீர்மானமாக நிறைவேற்றி கட்சியை விட்டு தூக்கலாமா என்ற திட்டத்தில் எடப்பாடி தரப்பு இருக்கிறதாம். இதுதான் அவர் எடுக்க போகும் உச்சபட்ச முடிவு என்கிறார்கள். இதில் சட்ட ரீதியான ஆலோசனை பெறவே எடப்பாடி தொடர் மீட்டிங்குகளை நடத்தி வருகிறாராம்.

தவறு
ஓபிஎஸ்ஸின் இந்த தவறை சட்ட ரீதியாக அவருக்கே எதிராக பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர். இன்று
அதிமுக பொதுக்குழுவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற ஹைகோர்ட் தீர்ப்புக்கு எதிராக மனு செய்துள்ளனர். இதில் வரும் தீர்ப்பை பொறுத்து, பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக தனித்தீர்மானத்தை நிறைவேற்றி, அதன் பின் ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து தூக்கலாம் என்ற திட்டத்தில் எடப்பாடி தரப்பு இருக்கிறதாம்.

எடப்பாடி பிளான்
இதற்கு தொண்டர்கள் மத்தியில் எதிர்ப்பு வரலாம். இருந்தாலும் எடப்பாடிக்கு இருக்கும் அளவிற்கு ஓபிஎஸ்ஸுக்கு நிர்வாகிகள் ஆதரவு இல்லை. தென் மண்டலத்திலும் பெரிதாக நிர்வாகிகள் ஆதரவு இல்லை. தென் மண்டல நிர்வாகிகளும் எடப்பாடி பக்கம் உள்ளன. இதனால் பொதுக்குழு அல்லது தலைமை கழக குழுவில் தனித்தீர்மானம் நிறைவேற்றி, அதில் வாக்கெடுப்பு நடத்தி ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிவிடலாமா என்ற திட்டத்தில் எடப்பாடி தரப்பு இருக்கிறதாம்.