சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததா? வைரலாக பரவும் செய்தி.. உண்மை பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் திடீரென கூகுள் பே தடை செய்யப்பட்டு விட்டதாக வெளியாகும் செய்திகளுக்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Google Pay-வுக்கு தடையா? உண்மை பின்னணி என்ன? | Fake News Buster | Oneindia Tamil

    கடந்த சில நாட்களுக்கு முன் இணையம் முழுக்க கூகுள் பே தடை செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த செயலி ஆர்பிஐ விதிகளின் கீழ் செயல்படவில்லை. என்பிசிஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் (The National Payments Corporation of India) கட்டுப்பாட்டின் கீழ் இது செயல்படவில்லை என்று செய்திகள் வெளியானது.

    இதையடுத்து டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அதில் கூகுள் பே பாதுகாப்பாக இல்லை. அதை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வழக்கில் கோரப்பட்டது.

    ஊரடங்கால் அடங்காத கொரோனா.. இந்தியாவில் 5 லட்சம் கேஸ்கள்! சென்னை உட்பட 10 நகரங்களில் 54.47% நோயாளிகள்ஊரடங்கால் அடங்காத கொரோனா.. இந்தியாவில் 5 லட்சம் கேஸ்கள்! சென்னை உட்பட 10 நகரங்களில் 54.47% நோயாளிகள்

    என்ன வழக்கு

    என்ன வழக்கு

    இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.என். படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் என்பிசிஐ விளக்கம் அளித்தது . என்பிசிஐ என்பது இந்தியாவில் ஆன்லைன் மூலம் நடக்கும் பணபரிமாற்றங்களை கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும். முக்கியமாக போன்பே, பேடிஎம், கூகுள் பே போன்ற யுபிஐ பரிமாற்றங்களை மேற்கொள்ள இந்த என்பிசிஐ கட்டுப்பாடுகளை, அனுமதிகளை அளிக்கிறது.

    முழு விளக்கம்

    முழு விளக்கம்

    கூகுள் பே தொடர்பாக என்பிசிஐ அளித்த விளக்கத்தில் கூகுள் பே என்பது மூன்றாம் தர பணப்பரிமாற்ற செயலி. கூகுள் பே என்பிசிஐ விதிகளை பின்பற்றி செயல்படுகிறது. கூகுள் பே செயலியானது யுபிஐ கீழ் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. முழு அனுமதியோடுதான் கூகுள் பே செயல்படுகிறது.

    எப்படிப்பட்ட செயலி

    எப்படிப்பட்ட செயலி

    இது மூன்றாம் தர செயலி ஆகும். அதனால் என்பிசிஐயின் இணையத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்டண அமைப்பு பணப்பரிமாற்றாளர்கள் பட்டியலில் இந்த செயலி இடம்பெறவில்லை. மற்றபடி கூகுள் பே முழு அனுமதியோடுதான் செயல்படுகிறது. கூகுள் பே செயலிக்கு ஆர்பிஐ தடை விதிக்கவில்லை. அதோடு இந்த செயலி மற்ற யுபிஐ செயலிகளை போலவே மிகவும் பாதுகாப்பான செயலி ஆகும்.

    ஆர்பிஐ விதிகள்

    ஆர்பிஐ விதிகள்

    ஆர்பிஐ விதிகளுக்கு உட்பட்டே இதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது, என்று என்பிசிஐ விளக்கம் அளித்துள்ளது. இதனால் கூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதாக சமூக வலைதளத்தில் பரவிய செய்திகள் போலி என்று உறுதி ஆகி உள்ளது. நாங்கள் அனைத்து விதிகளையும் பின்பற்றிதான் செயல்படுகிறோம். இதில் முறைகேடு எதுவும் இல்லை, என்று கூகுள் பே நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளது.

    English summary
    Is Google Pay banned by RBI? What is the truth behind it?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X