சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடுக்கம் தரும் ஓபிஎஸ் மகன்.. தம்பிதுரை தயவை நாடும் எடப்பாடியார்.. ராஜ்யசபா சீட் ரெடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    தம்பிதுரை தயவை நாடும் எடப்பாடியார்.. ராஜ்யசபா சீட் ரெடி!- வீடியோ

    சென்னை: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியால் எடப்பாடியார் தரப்பு ரொம்பவே நடுங்கி போயுள்ளதாம்.

    தேர்தலுக்கு முன்பேயே சொந்த கட்சிக்கு கூட பிரச்சாரம் செய்யாத நிலையில், பிரதமர் மோடி தேனிக்கு சென்று ரவீந்திரநாத்துக்காக ஆதரவு திரட்டினார். இதையடுத்து மகனுடன் ஓபிஎஸ்-ன் வாரணாசி பயணம் அமைந்தது.

    "அம்மா இறந்ததில் இருந்து டம்மியாக உள்ளதாகவும், எடப்பாடியின் கையே ஓங்கி இருப்பதாகவும்" ஓபிஎஸ் பாஜக தலைமையிடம் புலம்பியதாகவும் செய்திகள் வந்தன.

    மோடி, ஸ்டாலினுக்கு அன்றே பாராட்டு.. கமலுக்கு மட்டும் 5 நாள் கழித்தா?.. என்னா தலைவா இது! மோடி, ஸ்டாலினுக்கு அன்றே பாராட்டு.. கமலுக்கு மட்டும் 5 நாள் கழித்தா?.. என்னா தலைவா இது!

    மத்திய அமைச்சர்

    மத்திய அமைச்சர்

    இதனிடையேதான், இப்போது வேறு எங்கேயுமே அதிமுக ஜெயிக்காத நிலையில் தேனியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இப்போது மகன் வெற்றி பெற்றுள்ளதால், ஓபிஎஸ்-ன் செல்வாக்கு அதிமுகவிலேயே உயர்ந்துள்ளது. மகனுக்கும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்க போகிறது.

    பனிப்போர்

    பனிப்போர்

    ஏற்கனவே ஓபிஎஸ், இபிஎஸ் புகைச்சல், பனிப்போர் நீண்டு வரும் நிலையில், ரவீந்திரநாத்தின் வெற்றி எடப்பாடி தலைமைக்கு தலைவலியைதான் தந்துள்ளதாம். ஒருவேளை மத்திய அமைச்சராகி விட்டால், ஓபிஎஸ்-ன் பலம் இன்னும் கூடிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாம். தேசிய அரசியலிலும் ஓபிஎஸ் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டால், தன் நிலைமை இன்னும் பரிதாபம் ஆகிவிடும் என்பதை உணர்ந்துள்ளார்.

    மிரட்டும் திமுக

    மிரட்டும் திமுக

    மேலும் 2 வருட கால ஆட்சியை எந்த குறைவின்றி நகர்த்தும் நெருக்கடியில் எடப்பாடி உள்ளார். மற்றொருபுறம் 103 எம்எல்ஏக்களை வைத்து மிரட்டி வருகிறது திமுக தரப்பு. இதில் ஓபிஎஸ்-ன் செல்வாக்கு கூடிவிட்டால், இருக்கும் மதிப்பையும் இழக்க நேரிடுமோ என்ற பயம் முதல்வர் தரப்பை சூழ்ந்துள்ளதாம்.

    தம்பிதுரை

    தம்பிதுரை

    அதனால் முதல்வேலையாக, டெல்லிக்கு தன் தரப்பிலிருந்து யாராவது ஒருநம்பிக்கைக்கு உரியவரை ராஜ்யசபாவுக்கு அனுப்பலாம் என யோசித்துள்ளராம். அதன்படி முதல்ரின் முதல் சாய்ஸ் சாட்சாத் தம்பிதுரையேதான்!

    நிலைப்பாடு

    நிலைப்பாடு

    ஆரம்பம் முதலே விசுவாசியாக இருப்பவர். பட்ஜெட் தாக்கலின்போது பாஜகவை கடுமையாக எதிர்த்தவர். அந்த அவையில் கூட அன்றைய தினம் தம்பிதுரை உட்காரவே இல்லை. அந்த அளவுக்கு பாஜக மீது வெறுப்பு. ஆனால் எப்போது அதிமுக தலைமை பாஜகவுடன் கூட்டணி வைத்ததோ, அப்போதே தன்னுடைய நிலைப்பாட்டையும் மாற்றிகொண்டவர் தம்பிதுரை. உடனே கரூர் தொகுதியும் இவருக்கு ஒதுக்கப்பட்டது.

    எடப்பாடி

    எடப்பாடி

    எனினும் மக்களின் அதிருப்தியால் தோல்வியை தழுவினார். பலதரப்பில் இருந்து பலவாறாக தம்பிதுரையை விமர்சனம் செய்தாலும், இந்த நிமிடம் வரை எடப்பாடியாருக்கு ஆதரவாக இருந்து வருகிறார். நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்கிறார். எப்போது எடப்பாடி டெல்லி சென்றாலும் பக்கத்திலேயே உரசி நின்று பக்க பலமாக நின்றவர் தம்பிதுரைதான்.

    பீதி

    பீதி

    அதனால் இந்த முறை தம்பிதுரை ராஜ்யசபா உறுப்பினராக அனுப்பி வைத்தால், பல வகையில் தனக்கு சவுகரியம் நடக்கும் என எடப்பாடியார் நம்புகிறாராம்! ரவீந்திரநாத்தின் வெற்றி அவ்வளவு பீதியை எடப்பாடிக்கு ஏற்படுத்தி உள்ளதாம்!

    English summary
    It is said that Edapadi Palanisamy will recommend M Thambidurai to the Rajya Sabha on behalf of AIADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X