India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஆர்எஸ்எஸ்ஸும், ஆளுநர் ரவியும்".. எகிறிய பாலகிருஷ்ணன்.. டி.ஆர்.பாலுவுக்கு வந்த கோபம்.. செம எதிர்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: ஆளுநர் ரவிக்கு எதிரான நடவடிக்கைகளில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இறங்கி உள்ளது, தற்போதைய தமிழக அரசியலில் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு விவகாரம் தலைதூக்கி வருகிறது.. மசோதாவில் ஆளுநர் கையெழுத்து போடாத நிலையில், அவைகளை திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், திமுக அரசு அது தொடர்பான தீவிர நடவடிக்கையை கையில் எடுத்து வருகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, தமிழக எம்பிக்களை நேரில் சந்திக்க மறுத்து, அமித்ஷா அப்பாயிண்ட்மென்ட் தராததில் இருந்தே இந்த பிரச்சனை வெடிக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை மாற்றுங்கள்... லோக்சபாவில் திமுக எம்.பிக்கள் முழக்கம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை மாற்றுங்கள்... லோக்சபாவில் திமுக எம்.பிக்கள் முழக்கம்

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் அப்போதே முதல்வர் கொந்தளித்தார்.. "நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குகோரும் சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது. நீட்தேர்வு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க, அனைத்துக் கட்சி எம்.பி.க்களைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை" என்பதை வெளிப்படையாகவே கூறியிருந்தார். அத்துடன், எம்பி டிஆர் பாலுவையும் "என்ன நடக்குது அங்கே?" என்று கேட்டு கடிந்து கொண்டார்.

 ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

நேற்றைய தினமும் இதே பிரச்சனை தொடர்பாக, தமிழக ஆளுநர் குறித்து டிஆர் பாலு பார்லிமென்ட்டில் கேள்வி எழுப்பி உள்ளார்.. தமிழக அரசின் 7 மசோதாக்களுக்கு இன்னும் ஒப்புதல் தராமல் தமிழக கவர்னர் கிடப்பில் போட்டுள்ளார்.. இது ஜனநாயக நாடா, இல்லை காட்டாட்சி தர்பார் நடக்கிறதா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்... சட்டத்தின்படி கவர்னர் நடக்க மறுக்கிறார்; அவரை கவர்னர் பதவியிலிருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..

 டிஆர் பாலு பேச்சு

டிஆர் பாலு பேச்சு

இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, கவர்னர் அரசியல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறார்.. 34 நாட்கள் கடந்த பின்னும் அவரிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. இதுபோல 7 மசோதாக்களை அவர் தன்வசம் வைத்துக் கொண்டு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கிறார்.. நீட் விவகாரத்தை வாக்குறுதியாக அளித்து, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக முதல்வர், அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் கையை பிசைந்தபடி உள்ளார்.. இது தொடர்பாக நீட் மத்திய உள்துறை அமைச்சரிடம் முறையிட்ட பின்னும் பலனில்லை" என்றார்.

 டிஆர் பாலு

டிஆர் பாலு

டிஆர் பாலு கொந்தளித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, முதல்வர் ஆளுநர் ரவியை சென்று சந்தித்து நீட் மசோதா தொடர்பான கோரிக்கையை வைத்தபோதிலும், விவகாரம் இன்னும் முடியவில்லை.. திமுகவின் கூட்டணி கட்சிகள் கடும் கோபத்தில் உள்ளன.. நீட் மசோதாவையும் தாண்டி, பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராக நீடிப்பது கூடாது என்ற முழக்கத்தை ஆரம்பித்துள்ளது.

 பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றுநாள் மாநில குழு கூட்டம் சேலத்தில் நடந்து வருகிறது.. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், "தமிழகத்தில் ஆளுநரின் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு விரோதமாக உள்ளது. ஆளுநர்களுக்கும் மாநில அரசுக்கு இடையிலான முரண்பாடு பல மாநிலங்களில் உள்ளது... அதுமட்டுமன்றி ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ளவர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக நியமிக்கப்படுவது பல விளைவுகளை ஏற்படுத்தும்...

 ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

அதனால், பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் நீடிக்க வேண்டியதில்லை... அதற்கு பதிலாக கல்வித்துறை அமைச்சரே பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்படலாம்' என்ற சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்... ஒவ்வொரு விஷயத்திலும் தமிழக ஆளுநருக்கு எதிராக எதிர்ப்புகள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில், அடுத்த கட்டம் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.

அழுத்தம்

அழுத்தம்

இந்நிலையில், இது தொடர்பாகவே, சிபிஎம் கட்சி அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. அதில், "நீட் தேர்வு எதிர்ப்பு சூழலில் கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை அழுத்தம் பெற்றுள்ள நிலையில், மாநில நிலைப்பாட்டுக்கும், நலனுக்கும் எதிராக ஆளுநர் பேசுகிறார். அதேபோல், கூட்டாட்சிக் கோட்பாட்டைத் தளர்த்தும் விதமாக, இது இயல்பான ஒன்றிணைப்பு (Organic union) என்றும், ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒரு முனையிலிருந்து மறு முனை வரை கலாச்சார ஆன்மிக மாண்புகளின் அடிப்படையில் நீடித்து வந்துள்ளது என்றும் பேசியுள்ளார்.

 ஆளுநர் வரம்பு

ஆளுநர் வரம்பு

இத்தகைய பேச்சு உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்த குரல் என்பதோடு, ஆளுநரின் அதிகார வரம்பைத் தாண்டியதாகவே கருத முடியும். இது கண்டிக்கத்தக்கது.. வேந்தராக இருந்து துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் மாநிலச் சட்டத்தின் கீழ் ஆளுநருக்கு அளிக்கப்படுவதே. மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டத் திருத்தத்தின் மூலம் அந்த அதிகாரம் ஆளுநரிடமிருந்து அகற்றப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதனைப் பரிசீலித்து, சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து, ஆளுநர் அதிகாரத்தை அகற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

English summary
Is opposition to TN governor ravi growing and CPIM Balakrishnan says about universities chancellor
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X