சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேசி தீர்த்துக்கலாம் வாங்க.. ஓபிஎஸ் பேச்சு, சசிகலா வருகை.. கூட்டி கழிச்சு பார்த்தா அடடே.. அப்படியா!

Google Oneindia Tamil News

சென்னை: ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் இயக்கத்தில் அண்ணன் தம்பி பிரச்சினை இருந்தால் பேசி தீர்ப்போம் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர் செல்வம் பேசியதை பார்த்தால் அமமுகவினருக்கு அழைப்பு விடுவது போல் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஜெயலலிதா இருந்த வரை ராணுவ கட்டுப்பாடுடன் இருந்த அதிமுக, இன்று யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யும் அளவுக்கு போய்விட்டது. ஜெயலலிதா மறைந்தவுடன் சசிகலாவிடம் ஆட்சியையும் கட்சியையும் ஒப்படைக்க இருந்த நிலையில் அவர் சிறை சென்றுவிட்டார்.

தினகரனும் இரட்டை இலை சின்னத்திற்காக ஹவாலா பணம் கொடுத்ததாக ஒரு வழக்கில் சிக்கினார். இதையடுத்து சிதறிக் கிடந்த அதிமுகவை இணைக்க ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஏற்றுக் கொண்டது.

"சின்னம்மா" வர்றதுக்குள்ள சீக்கிரம்.. அவசரப்படுத்தும் பாஜக.. அதிமுக கொடுக்க போவது இவ்வளவுதான்!

தினகரன்

தினகரன்

அதாவது எந்த சூழலிலும் சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதுதான் அந்த கோரிக்கையாக இருந்தது. இதை ஏற்றும் இரு அணிகளும் இணைந்தன, ஓபிஎஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். தினகரனும் அமமுக எனும் அரசியல் அமைப்பை தொடங்கினார்.

எதிர்க்கட்சி

எதிர்க்கட்சி

ஆர் கே நகர் தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் இந்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதே வேளையில் சசிகலாவும் வரும் 27ஆம் தேதி விடுதலையாகிறார். இவரது விடுதலையால் அரசியல் களம் மாறும் என சொல்லப்படுகிறது.

அண்ணன் தம்பி

அண்ணன் தம்பி

ஆனால் அதிமுகவினரோ சசிகலா என்ன யார் வெளியே வந்தாலும் அதிமுகவில் ஒரு மாற்றமும் நடக்காது என கூறிவருகிறார்கள். இந்த நிலையில் அதிமுக சார்பில் ஈபிஎஸ், ஓபிஎஸ் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசுகையில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் இயக்கத்தில் அண்ணன் தம்பி பிரச்சனை இருந்தால் பேசித் தீர்ப்போம் என தெரிவித்திருந்தார்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இதை பார்க்கும் போது அமமுகவிற்கு ஓபிஎஸ் விடுக்கும் மறைமுக அழைப்பாகவே பார்க்கப்படுகிறது. தினகரன் அணியிலிருந்து பெங்களூர் புகழேந்தி, சசிரேகா, சிவசங்கரி உள்ளிட்டோர் மீண்டும் அதிமுகவுக்கே வந்துவிட்டார்கள். அது போல் மற்றவர்களும் அதிமுகவில் இணைய ஓபிஎஸ் அழைப்பு விடுக்கிறார் என்கிறார்கள்.

பரபரப்பு

பரபரப்பு

சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் சிறையிலிருந்து விடுதலையாகும் நிலையில் ஓபிஎஸ் அண்ணன் தம்பி பிரச்சினை குறித்து கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போல்தான் ஓபிஎஸ் அணியும் ஈபிஎஸ் அணியும் ஒன்றாக இணைவதற்கு முன்னர் அண்ணன் தம்பி பிரச்சினை என்ற வார்த்தையை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

English summary
Is O Paneer Selvam invitating AMMK to join in AIADMK?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X