சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓரம் கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்.. அதிர வைக்கும் அதிமுக வியூகங்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுகவிற்குள் ஓரம் கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?- வீடியோ

    சென்னை: ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது இரண்டாம் இடத்தில் மரியாதையான இடத்தில் இருந்தவர் ஓ.பி.எஸ். பின்னர் அவரது மரணத்திற்கு பின்னரும் சசிகலாவுக்கு பின்னால் இருந்தாலும் முதல்வர் பதவியில் இருந்தவர் ஓ.பி.எஸ். ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டதாக சொல்கிறார்கள்.

    தர்ம யுத்தம் நடத்தியபோதும் சரி, மோடி கூறியதால்தான் இணைந்தேன் என்று அவரது மைன்ட் வாய்சை சத்தமாக கூறியபோதும் சரி கட்சியில் நல்ல மரியாதையுடன் தான் இருந்தார் ஓ.பி.எஸ். ஆனால் இப்போதோ அவரது நிலைமை சற்று தலைகீழாக கீழிறங்கி கொண்டிருக்கிறது.

    அதிமுக பாஜகவுடன் கூட்டணி முடிவாகிவிட்டது என்ற தகவலை பத்திரிக்கையாளர்களிடம் கூறியது ஓ.பி.எஸ். தான். அப்போது அதைப் பார்த்தவர்களுக்கு இந்த கூட்டணி முடிவு செய்யப்பட்டதில் ஓ.பி.எஸ். க்கும் முக்கிய பங்கு இருக்கும் என்றே நினைத்தனர். ஆனால் அங்கு நடந்ததே வேறு. எப்படி திமுக கூடாரத்தில் முக்கிய முடிவுகளில் எல்லாம் ஸ்டாலின் மருமகன் சபரீசன் தலையிடுகிறார் என்று கூறப்படுகிறதோ அது போல அதிமுகவில் முக்கிய முடிவுகள் எல்லாம் அந்த இரண்டு அமைச்சர்களால்தான் எடுக்கபடுகிறது என்று சீனியர் அமைச்சர்களே புலம்புகிறார்கள்.

     இரு சாமியார்கள்

    இரு சாமியார்கள்

    கொங்கு மண்டலத்தை சார்ந்த அந்த அமைச்சர்கள்தான் டெல்லி மற்றும் கோவையில் உள்ள இரு சாமியார்கள் மற்றும் சிலரோடு சேர்ந்து கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் பணப் பரிமாற்றம் ஆகியவற்றை பார்த்துக் கொள்வதாக கூறப்படுகிறது. இவர்கள்தான் பாஜகவோடு கூட்டணிப் பேச்சு வார்த்தையையும் இறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.

    தொழிலதிபர் வீட்டில் சந்திப்பு

    தொழிலதிபர் வீட்டில் சந்திப்பு

    தமிழகத்தில் உள்ள ஒரு தொழில் அதிபரின் இல்லத்தில் மத்திய அமைச்சர் பியுஸ் கோயலோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது பேச்சு வார்த்தை இறுதி வடிவத்தை எட்டியுள்ளது. அந்த நேரம் நீங்கள் கொஞ்சம் வெளியில் இருங்கள் என்று ஓ.பி.எஸ்.சை வெளியில் அனுப்பிவிட்டுத்தான் எடப்பாடியும் கோயலும் பேசியுள்ளனர். அப்போதே ஓ.பி.எஸ் அப்செட்டாகவே இருந்துள்ளார்.

    கேட்டுக் கொள்ளவில்லை

    கேட்டுக் கொள்ளவில்லை

    இருந்தாலும் என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டது, வேறு என்னென்ன பேசப்பட்டது என்பதெல்லாம் ஓ.பி.எஸ். க்கு கூறப்படவில்லையாம். இவரும் அதைக் கேட்காமலேயே பாஜகவுடன் கூட்டணி அமைந்துவிட்டது என்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

    ஆலோசனை கூட கேட்கவில்லை

    ஆலோசனை கூட கேட்கவில்லை

    மத்திய அரசு போதிய நிதி தராதது, தன்னை ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்று கூட பாராமல் நிர்மலா சீதாராமன் திருப்பி அனுப்பியது, தமிழகத்திற்கு விரோதமான மத்திய அரசின் திட்டங்கள் இவையெல்லாவற்றையும் மனதில் வைத்து பாஜகவோடு கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டிலேயே ஓ.பி.எஸ்.சும் இருந்தாராம். ஆனால் கூட்டணி விவகாரத்தில் அவரது ஆலோசனை கூட கேட்கப்படவில்லையாம்.

    பிரஸ் மீட்டுக்கு மட்டும்

    பிரஸ் மீட்டுக்கு மட்டும்

    சில அமைச்சர்களும் சில கார்பரேட் நபர்களும் இரண்டு சாமியார்களும் முதல்வர் எடப்பாடியும் எடுத்த முடிவின்படி பாஜகவோடு அனைத்தையும் பேசி முடித்த பின்னரே ஓ.பி.எஸ்.-சிடம் வந்து எல்லாம் பேசி முடித்துவிட்டோம் வந்து ஊடகங்களிடம் கூறுங்கள் என்று கூறியுள்ளனர். வேறு வழியின்றி ஓ.பி.எஸ்.சும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

    English summary
    Sources say that Deputy CM O Panneerselvam is being sidelined in ADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X