"வீடியோ" வர போகுதாம்.. ரெடியாகிறார் இலையின் "தலை".. சட்டென மாறும் சூழல்கள்.. வீசும் அனுதாப அலைகள்
சென்னை: நாளுக்கு நாள் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு பெருகி கொண்டிருக்கிறது என்று கருதப்பட்ட நிலையில், திடீரென ஓபிஎஸ் பக்கம் அனுதாப அலை வீச தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இன்று தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.. எடப்பாடி டீம் மீட்டிங் நடத்திய அதே நேரம், ஓபிஎஸ்ஸும் சென்னையில் உள்ள தன் வீட்டில் ஆலோசனை நடத்தினார்.
எடப்பாடி டீம் கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையைவிட, ஓபிஎஸ் மீதான எதிர்ப்புகள்தான் அதிகமாக வெளிப்பட்டது.
அமாவாசைக்கு காத்திருந்த ஓபிஎஸ்.. முந்திய எடப்பாடி 'போச்சே’ அதே இடத்தில் போட்டி கூட்டம்- பரபர பிளான்!

பிளான்கள்
இந்த கூட்டம் நடப்பதற்கு முன்னதாக, அங்கே வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் பேனரை, எடப்பாடி ஆதரவாளர்கள் கிழித்தெறிந்தனர்.. அதேபோல, எடப்பாடி ஆதரவாளர்களும் ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்தனர்.. இதில் சற்று ஓவராக போனவர் ஜெயக்குமார்தான்.. நாளைக்கு ஓபிஎஸ் மீட்டிங் போட போகிறார்.. நாளைக்கு என்னவெல்லாம் நடக்க போகிறதோ தெரியவில்லை... அதுமட்டுமல்ல, ஒருவேளை தன்னை பொருளாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கும் பட்சத்தில், அதை எதிர்த்து கோர்ட்டில் முறையிட ஓபிஎஸ் பிளான் செய்து வருவதாக தெரிகிறது..

வீடியோ
மேலும், ஜுன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும், கையெழுத்து போட்டு பாஸ் வாங்கிக் கொண்டு உள்ளே செல்லவில்லை என்கிறார்கள்.. போலி பாஸ்கள் மூலம் பொதுக் கூட்டத்துக்கு கூட்டம் சேர்ப்பது போல சேர்த்திருந்தார்களாம்.. அதிலும் எடப்பாடியின் சொந்தக்காரர்கள்கூட இந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டதால், அதுகுறித்த வீடியோ ஆதாரங்களை சேகரிக்க முற்பட்டுள்ளதாம் ஓபிஎஸ்.. அதைவைத்து, ஜூலை 11 நடக்க உள்ள பொதுக்குழுவை நிறுத்தவும் முயன்று வருகிறதாம்.

மெஜாரிட்டி
இதனிடையே, வைத்திலிங்கம் சொன்ன வார்த்தை, எடப்பாடியின் கூடாரத்தை லேசான கலக்கத்திற்கு ஆளாக்கி உள்ளதாக தெரிகிறது.. அதாவது, "பொதுக்குழுவுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வத்திற்கான ஆதரவு தொண்டர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது" என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இது உண்மைதானா? பெரும்பாலான நிர்வாகிகள், மா.செ.க்கள், எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், வைத்திலிங்கம் ஏன் இப்படி சொல்கிறார்? என்ற கேள்வியும் எழுகிறது..

ஓபிஎஸ்
இது குறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: "எடப்பாடிக்கு ஏகோபித்த ஆதரவு இருக்கதான் செய்கிறது.. மெஜாரிட்டி அவர் பக்கம்தான் ஆதரவாளர்கள் நிற்கிறார்கள்.. அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், ஏன் தரம் தாழ்ந்து அரசியல் செய்கிறார் எடப்பாடி? எதற்காக ஓபிஎஸ்ஸை அவமானப்படுத்த வேண்டும்? கட்சியில் பதவி வழங்கப்படாவிட்டால், அதற்கு முறை இதுதானா? நாளுக்கு நாள், ஓபிஎஸ்ஸை அவர்கள் நடத்தும் விதம்தான், ஓபிஎஸ்ஸுக்கே அனுதாப அலையை உருவாக்கிவிடும்..

இரட்டை இலை
சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் சென்று நியாயம் கேட்க போகிறேன் என்று ஓபிஎஸ் சொல்லி வருகிறார்.. இலையை முடக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. இரட்டை இலை இல்லாமல், அன்று ஜெயலலிதாவாலேயே வெற்றி பெற முடியாத சூழலும் ஏற்பட்டது.. எப்போதுமே அதிமுகவுக்கு மிகப்பெரிய பலம், அக்கட்சியின் தொண்டர்களும் + இலையும்தான்..

இலைகள்
இந்த இரண்டையும் முக்கிய ஆயுதமாக ஓபிஎஸ் கையில் எடுக்கும் நிலையில், எடப்பாடி தரப்பினரால் ஏற்படும் அவமானங்களும், இழிவுகளும் மேலும் அவருக்கே சாதகமாக அமைந்துவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது.. தன்னை யார் எதிர்த்தாலும், அவர்களுக்கு கட்சிக்குள் இடம் கிடையாது என்பது போல எடப்பாடி நடந்து வருகிறார்.. அப்படியானால் யாருமே தன்னை எதிர்க்க கூடாதா? எதிர்த்தால் அவ்வளவுதானா? இன்று ஓபிஎஸ் என்றால் நாளை யாருக்கும் இந்த அவலம் நடக்கலாம்.. எனவே, ஓபிஎஸ் விஷயத்தில், எடப்பாடி தரப்பு சற்று பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்" என்றனர்.