"பழனி" வீட்டில் ரகசிய பேச்சாமே.. திரண்ட புள்ளிகள்.. வேற வழியில்லை.. கடைசி அஸ்திரம் எடுக்க முடிவா?
சென்னை: ஓபிஎஸ் அடுத்து என்ன செய்வார்? அல்லது ஓபிஎஸ் சம்பந்தமாக எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.
கடந்த வாரம் வரை அதிமுகவில் இருந்த நிலைமை வேறு.. இந்த வாரம் அதிமுகவில் இருக்கும் நிலைமை வேறு.. ஆதரவாளர்கள் மொத்தமாக தனக்கு சப்போர்ட்டுக்கு உள்ள நிலையில், ஓபிஎஸ்ஸை பல்வேறு வகைகளில் நிராகரித்தது எடப்பாடி டீம்.
ஓபிஎஸ் அரசியல் வாழ்வு இதோடு அவ்வளவுதான், ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்றே கூட சிலரால் கருதப்பட்டது.. ஆனால், திடீரென வேறு ரூட்டில் டிராவல் ஆக ஆரம்பித்துள்ளது அதிமுக.
வைத்திலிங்கம் ஓபிஎஸ் இடையே ஒற்றுமை இல்லை.. பொதுச்செயலாளர் தீர்மானம் வருவது உறுதி- பற்ற வைத்த விச்சு!

வானகரம் கூட்டம்
கட்சிக்குள் மட்டுமே இதுவரை வாதங்களாக நடந்து வந்த விஷயம், இப்போது சட்டரீதியாகவும் விஸ்வரூபமெடுத்துள்ளது.... இதனிடையே, அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம், 11ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன. இந்த கூட்டத்தை வேறு இடத்தில் நடத்த முடிவு செய்து, அதற்காக பல இடங்களையும் பார்த்தனர்.. ஆனால், கடைசியில், வானகரம் திருமண மண்டபத்திலேயே நடத்த, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்தனர்.. ஆனால், இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோர்ட்டுக்கு சென்றனர்..

எடப்பாடிக்கு குழப்பம்
எப்போது சட்ட ரீதியான நடவடிக்கையை ஓபிஎஸ் கையில் எடுத்தாரோ, அப்போதே எடப்பாடிக்கு பெரும் சிக்கலையே அது ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.. ஒருவேளை அதையும் மீறி, திட்டமிட்டபடி பொதுக்குழு நடந்தால், ஓபிஎஸ்ஸிடம் உள்ள பொருளாளர் பதவியும் பறிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. அதேசமயம், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி, தற்காலிக பொதுச்செயலராக பழனிசாமியை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன

சீக்ரெட் பேச்சு
இப்போது விஷயம் என்னவென்றால், பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவது மட்டுமல்ல, கட்சியை விட்டே நீக்குவது குறித்தும் எடப்பாடி தரப்பு யோசித்து வருகிறதாம்.. எடப்பாடி பழனிசாமி வீட்டிலேயே முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடந்துள்ளது.. அப்போதுதான், இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது... நடக்க போகும் பொதுக்குழுவில் பங்கேற்க ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு அனுப்புவது பற்றி எடப்பாடி தரப்பு இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில், இப்படி ஒரு பேச்சு வட்டமடித்து வருகிறது..

முனுசாமி
அதற்கேற்றவாறு, நேற்றைய தினம் ஜெயக்குமார், ஏகப்பட்ட புகார்களை ஓபிஎஸ் மீது அள்ளி வீசியிருந்ததும்,
"ஓபிஎஸ் நீர்த்துப்போய்விட்டார்" என்று கேபி முனுசாமியும் ஓபிஎஸ்ஸை வெளுத்து வாங்கும் அளவுக்கு சென்றுவிட்டது.. மற்றொரு பக்கம் இவர்கள் தகராறில் இத்தனை நாட்களும் தலையிடாமல் இருந்த பாஜக, நேற்றைய தினமாவது தலையிட்டு, இவர்களை இணைத்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது..

2 தலைவர்கள்
ஆனால், பாஜக நினைத்திருந்தால் ஒரே நேரத்தில் எடப்பாடியையும் ஓபிஎஸ்சையும் மேடையேற்றி இருக்க முடியும்.. ஆனால் அவ்வாறு செய்யவில்லை.. அதிமுகவின் மொத்த வாக்கு வங்கிக்கும் குறி வைக்கும் பாஜக, இந்த 2 தலைவர்களை ஒன்றிணைப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றே தெரிகிறது.. ஒருபக்கம் பாஜக ஆர்வம் காட்டாத நிலையில், மற்றொரு பக்கம் எடப்பாடியின் புறக்கணிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில், ஓபிஎஸ் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதே ஆர்வமாக எழுந்துள்ளது.

இரட்டை இலை
நேற்றைய தினம் எடப்பாடி, தன்னுடைய மொத்த ஆதரவாளர்களுடன் கும்பலாக மேடையேறி, திரெளதிபதிக்கு ஆதரவு தந்த நிலையில், ஒரு கூட்டணி கட்சி தலைவரைப்போல, வெறும் 3 எம்எல்ஏக்களுடன் ஓபிஎஸ் திரௌபதிக்கு ஆதரவு தந்ததையும் கவனிக்க வேண்டி உள்ளது.. ஆனாலும் நான்தான் ஒருங்கிணைப்பாளர் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் ஓபிஎஸ்.. ஒருவேளை, பொதுக்குழு நடந்துவிட்டால், இரட்டை இலையை முடக்கும் நடவடிக்கையில் இறங்குவாரா? அல்லது சசிகலாவை சென்று சந்திப்பாரா? தெரியவில்லை.

உச்சத்தில் துரோகம்
இதனிடையே, அதிமுக எடப்பாடி வசம் ஆகிவிட்டால், தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாகவும் அதிமுகவில் சலசலக்கப்பட்டு வருகிறது.. ஆனாலும், துரோகத்தின் உச்சத்தில் எடப்பாடி உள்ளபோது, ஓபிஎஸ் எதற்காக தனிக்கட்சி தொடங்க வேண்டும்? எடப்பாடிதான் தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இருக்கு என்று என்று கொந்தளிக்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. எனினும், எடப்பாடி மீதே அவரது ஆதரவாளர்கள் சிலருக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் ஓபிஎஸ் பக்கம் மறைமுக டீலிங்கில் உள்ளதாகவும் செய்திகள் கசிகின்றன.. எப்படி பார்த்தாலும் ஓபிஎஸ் கட்சி ஆரம்பித்தாலும் சரி, ஆரம்பிக்காவிட்டாலும் சரி, இலையை வைத்து மிகப்பெரிய அரசியல் செய்ய காத்திருக்கிறார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்..!