மீனாகிறது கருவாடு.. '11 எம்எல்ஏக்கள்'.. திமுகவை சுற்றியே எல்லாம்.. அப்ப பாஜக.. மாஸ்டர் ராஜதந்திரம்
சென்னை: ஓபிஎஸ் நடவடிக்கைக்கு பின்னால் திமுக இருக்கிறது, அந்த கட்சியின் பேச்சை கேட்டு ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்றன.. இந்த புகார்கள் உண்மையா?
Recommended Video - Watch Now
ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை எடப்பாடி அளவுக்கு ஸ்டிராங் இல்லை என்ற ஒரு பேச்சு உள்ளது.. எதிலும் உறுதிப்பாடு இல்லாததும், ஒரு விஷயத்திலும் நிலையான முடிவு எடுக்காததும், விமர்சனங்களாக உள்ளன.
அதுமட்டுமல்லாமல். சசிகலாவை எதிர்த்து கொண்டு, 11 எம்எல்ஏக்களுடன் கட்சியில் அன்று சேர்ந்துவிட்டு, இன்று அவருக்கு எதிராக ஒரு வார்த்தையைகூட உதிர்க்காமல் உள்ளதன் பின்னணியும் இதுவரை அதிமுகவினரால் விளங்கி கொள்ள முடியாததாக இருக்கிறது..
அந்த ரெஜிஸ்டர்.. அதுதான் எடப்பாடிக்கு சிக்கல்.. யார் அவங்கலாம்? - பாயிண்டுகளை அடுக்கும் ஓபிஎஸ் டீம்!

காவி சால்வை
மேலும், டிடிவி தினகரனையும் ரகசியமாக சந்தித்து பேசுவதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.. ஏற்கனவே, இவர் பாஜக நபரா? அதிமுக நபரா? என்ற குழப்பம் ஏற்படும் அளவுக்கு, அவரது செயல்பாடுகள் சலசலப்பை உண்டாக்கி வருகின்றன.. போதாக்குறைக்கு கடந்த வாரம் டெல்லி சென்றுவிட்டு திரும்பிய நிலையில், காவி சால்வையை போர்த்தி, "பாரத் மாதா கி ஜே" என்ற வலிய குரல் தேனி மண்ணில் ஒலித்துள்ளது.

சீனியர் தலைகள்
இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், இன்னொரு குற்றச்சாட்டை சொல்லி வருகிறார்கள்.. ஓபிஎஸ் திமுகவுடன் நெருக்கமாக இருப்பதாகவும், திமுகவுடன் அவருக்கு கூட்டு என்றும் பரபரப்பாக பேட்டிகளை தந்து வருகிறார்கள்.. இது எந்த அளவுக்கு உண்மை? ஒட்டுமொத்த அதிமுக தலைகளும் இப்படி, ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளை சொல்ல காரணம் என்ன?

சாப்ட் பேச்சு
தமிழகத்தை பொறுத்தவரை, திமுகவும், அதிமுகவும் நேர் எதிர் விரோத கட்சிகள்.. இவர்கள்தான் மாறி மாறி மாநிலத்தை ஆண்டாலும், களத்தில் இருவருமே பிரதான முக்கிய கட்சிகள்தான்.. அப்படி இருக்கும்போது, எடப்பாடி பழனிசாமி மட்டுமே, திமுகவை சரமாரியாக விமர்சித்து வருவதாகவும், ஓபிஎஸ் மென்மை போக்கை கடைப்பிடிப்பதாகவும் கூறப்படுகிறது.. அதாவது, திமுகவை கண்டித்து, அறிக்கையைகூட காட்டமாக விடுவதில்லையாம்.. கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுக்கு மட்டுமல்லாமல் கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

பராசக்தி - கலைஞர்
ஆனால், ஓபிஎஸ்ஸோ தேனியை தாண்டவில்லை.. அதிமுகவுக்காக கூட, மற்ற மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரமும் செயயவில்லை.. திமுகவை வெற்றி பெற வைக்கவே ஓபிஎஸ் இப்படி மறைமுகமாக செய்தாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் எடப்பாடி தரப்பினர்.. அதுமட்டுமல்ல, "என்னுடைய அப்பா ஒரு தீவிரமான கலைஞரின் பக்தர்... கலைஞரின் வசனத்தில் அனல் பறக்கும்.. பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அந்த வசனங்கள் எப்போதும் துணை நின்றுள்ளது" என்று ஓபிஎஸ் சட்டப்பேரவையில் பூரிப்புடன் சொன்னதை கேட்டு அதிமுக அதிர்ந்து போனது.

கருணாநிதி
இப்படி பொதுவெளியில் எதிர்க்கட்சியை பாராட்டி கொண்டு இருந்தால், யார்தான் நமக்கு எதிர்க்கட்சி? யாரை எதிர்த்து இங்கு அரசியல் செய்வது என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.. இதே கருணாநிதிதானே, அன்று எம்ஜிஆரை கட்சியில் இருந்து நீக்கினார்? அவரை இப்படியா புகழ்வது? இதுவே அந்தம்மா உயிருடன் இருந்திருந்தால், புகழ்ந்து பேச தைரியம் வந்திருக்குமா? என்றும் அதிருப்தி கேள்விகளை எடப்பாடி தரப்பில் எழுப்புகிறார்கள்.

பல்டி - பாஜகவா?
அதுவரை அனைத்தையும் பொறுத்து கொண்ட நிலையில், திடீரென முதல்வர் ஸ்டாலினை, ஓபிஎஸ் மகன் தனிமையில் சந்தித்து பாராட்டியதுடன், வாழ்த்து சொல்லி, பரிசும் தந்ததுதான், எல்லாவற்றிற்கும் மேலாக, அதிமுகவினரை கடுப்பாக்கிவிட்டதாம்.. இதுவரை மகனையும் கண்டிக்காமல் இருக்கிறாரே என்ற வேதனையும் உள்ளதாம்.. ஒருபக்கம் தம்பியை அனுப்பி சசிகலாவிடம் பேச வைக்கிறார், இன்னொரு பக்கம் மகனை அனுப்பி, திமுகவுடன் நட்பு வளர்க்கிறார், இன்னொரு பக்கம் தினகரனை ரகசியமாக சந்தித்து பேசுகிறார், என்று நாலாபக்கமும் குற்றச்சாட்டுகள் வருகின்றன.. உண்மையிலேயே, ஓபிஎஸ், பாஜக பக்கமா? சசிகலா பக்கமா? தினகரன் பக்கமா? திமுக பக்கமா? ஒன்னுமே புரியலயே.. பார்ப்போம்!

டிடிவி விளக்கம்
இதனிடையே, இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஓபிஎஸ் குறித்து விளக்கம் ஒன்றை தந்துள்ளார். அதில், "ஜெயக்குமாரை நிதி அமைச்சராக்கியது யார் என்பதை அவரே சொல்லட்டும்... தர்மயுத்தம் தொடங்கியபோது ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்... அதற்கு பிறகு சந்திக்கவில்லை... ஆனால், ஓபிஎஸ் என்னுடைய நண்பர்.. எம்ஜிஆர் கட்சி நயவஞ்சகர்கள் கையில் உள்ளது. சுப்ரீம்கோர்ட், தேர்தல் ஆணையம் வரை முறையீடு செய்தோம்... அதனால், அதிமுக கட்சிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை" என்று தெளிவுபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.