சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேட்டி சட்டை.. தமிழ்ப்பற்று.. உலக அளவில் புகழ்பெறும் தமிழ் கலாச்சாரம்.. மோடியின் திட்டம்தான் என்ன?

பிரதமர் மோடியும் மத்திய பாஜக அரசும் தமிழ் மீதும், தமிழகம் மீது செலுத்தி வரும் கவனம் அந்த கட்சிக்கு அரசியல் ரீதியாக உதவ வாய்ப்புள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi Praises Tamilnadu | ஐநா தொடங்கி சீனா வரை.. தமிழகம் மீது பாஜக தீவிர கவனம்..ஏன்?-வீடியோ

    சென்னை: பிரதமர் மோடியும் மத்திய பாஜக அரசும் தமிழ் மீதும், தமிழகம் மீது செலுத்தி வரும் கவனம் அந்த கட்சிக்கு அரசியல் ரீதியாக உதவ வாய்ப்புள்ளது.

    பிரதமர் மோடியின் டிவிட்டர் பக்கத்தை சென்று பார்த்தால் கடைசியாக செய்யப்பட்ட 20 டிவிட்களில் 10 டிவிட்கள் தமிழில் செய்யப்பட்டது. மூன்று டிவிட்கள் சீனத்திலும் மற்றது ஆங்கிலத்திலும் செய்யப்பட்டு இருக்கிறது.

    கடைசி 20 டிவிட்டுகளும் தமிழ், தமிழ்நாடு, தமிழர் கலாச்சரம் பற்றியது மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் பிரதமர் மோடி தெரிந்தோ, தெரியாமலோ தமிழர் கலாச்சாரத்தை உலகம் முழுக்க பிரபலப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

    மாமல்லபுரத்தில் போட்ட வலுவான அஸ்திவாரம்.. லாபம் யாருக்கு.. இந்தியாவுக்கா.. சீனாவுக்கா?மாமல்லபுரத்தில் போட்ட வலுவான அஸ்திவாரம்.. லாபம் யாருக்கு.. இந்தியாவுக்கா.. சீனாவுக்கா?

    தமிழ் மொழி

    தமிழ் மொழி

    இந்தியாவின் பிரதமர்கள் யாரும் ஐநா மேடையில் தமிழ் பாடலை எடுத்துக்காட்டாக கூறியது கிடையாது. ஆனால் பிரதமர் மோடி கணியன் பூங்குன்றனாரை ஐநா மேடையில் எடுத்துக்காட்டினார். தமிழ்தான் உலகின் முதல் மொழி என்று வெளிப்படையாக அவர் ஐநா மேடையில் புகழ்ந்துரைத்தார்.

    அலங்காரம் எப்படி

    அலங்காரம் எப்படி

    அது மட்டுமின்றி சீன அதிபரின் தமிழக வருகைக்காக மத்திய அரசு தமிழக அரசுடன் சேர்ந்து மிகப்பெரிய ஏற்பாடுகளை செய்தது. இதற்காக சென்னையே மொத்தமாக மாற்றப்பட்டது. அதேபோல் மகாபலிபுரம் பெரிய அளவில் அலங்காரம் செய்யப்பட்டு புது பொழிவு பெற்றது.

    இளநீர் குடித்தனர்

    இளநீர் குடித்தனர்

    பிரதமர் மோடி மகாபலிபுரத்தில் தமிழர்களின் வரலாற்றை சீன அதிபருக்கு எடுத்துக்காட்டினார். சீன அதிபரிடம் மாமல்லபுரம் கற்களை, சிலைகளை குறித்து விளக்கி கூறினார். அதிலும் கடற்கரை அருகே அமர்ந்து அவர்கள் இருவரும் தமிழக முறைப்படி இளநீர் குடித்து ஓய்வு எடுத்தனர்.

    வேட்டி சட்டை

    வேட்டி சட்டை

    இதெல்லாம் போக யாருமே எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடி வேட்டி சட்டை கட்டி வந்திருந்தார். அவர் செய்த டாப் அதிரடி விஷயம் இது என்று கூறலாம். தமிழர்களை மனதில் வைத்து கொஞ்சம் கூட யோசிக்காமல் அவர் வேட்டி சட்டை கட்டி இருந்தார். இது கண்டிப்பாக பெரிய வரவேற்பை பெறும்.

    காரணம் இருக்கிறது

    காரணம் இருக்கிறது

    இது அனைத்திற்கும் காரணம் இல்லாமல் இல்லை. பிரதமர் மோடி தமிழர்களை, தமிழ் மக்களின் மனதை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று தீவிரமாக முயன்று வருகிறார். அதன் ஒருபகுதிதான் இந்த தமிழ் டிவிட்டுகளும் வேட்டி சட்டையும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அரசியல்

    அரசியல்

    அதுமட்டுமின்றி இன்று தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம், நாச்சியார் கோவில் குத்து விளக்கு ஆகியவற்றை பிரதமர் மோடி ஜின்பிங்கிற்கு பரிசளிக்க உள்ளார். முழுக்க முழுக்க தமிழகத்தை, தமிழை உலகம் முழுக்க வெளிக்காட்டும் வகையில் அவர் இதை செய்கிறார்கள். இதற்கு பின் கண்டிப்பாக அரசியல் திட்டங்கள் இருக்கும்.

    அட இப்படியா?

    அட இப்படியா?

    பாஜக தமிழர் விரோத கட்சி என்ற பிம்பத்தை மாற்ற அவர் இப்படி செய்கிறார்கள். இது முழுக்க முழுக்க பிஆர் ஸ்டண்ட் என்று விமர்சனங்களும் வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் இன்னொரு பக்கம், பாஜக இவ்வளவு திட்டமிடலுடன் செயல்பட்டும் பிரதமர் மோடிக்கு எதிராக பல தமிழர்கள் டிவிட் செய்து வருகிறார்கள்.

    திமுக நிலைப்பாடு

    திமுக நிலைப்பாடு

    இந்த முறை பிரதமர் மோடியை எதிர்த்து திமுக போராட்டம் செய்யவில்லை. ஏன் டிவிட் கூட செய்யவில்லை. டிவிட்டரில் திமுக எந்த பிரச்சாரத்தையும் முன்னெடுக்கவில்லை. சரியாக சொல்லவேண்டும் எனில் திமுக தலைவர் ஸ்டாலின், சீன அதிபர் வருகையை பாராட்டி வரவேற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தேசிய வைரல்

    தேசிய வைரல்

    ஆனால் திமுக இல்லையென்றாலும் தமிழர்கள் பலர் கோ பேக் மோடியை நேற்று டிரெண்ட் செய்து இருந்தனர். 150கே டிவிட்டுகளை தாண்டி நேற்று முழுக்க கோ பேக் மோடி இணையம் முழுக்க தேசிய அளவில் முதல் இடத்தில் இருந்தது. ஏன் மக்கள் இன்னும் பாஜகவை எதிர்க்கிறார்கள், என்ன நடக்கிறது, என்பதை பாஜக புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகிறது.

    தமிழர்கள் எப்படி?

    தமிழர்கள் எப்படி?

    தமிழர்கள் மொழி மீது ஆர்வம் கொண்டவர்கள். ஆனால் அதுமட்டுமே இங்கு ஆட்சியாளர்களை தேர்வு செய்கிறது என்றால் இல்லை. அதற்கும் மேல் தமிழக மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை தேர்வு செய்ய நிறைய வரையறைகளை வைத்து இருக்கிறார்கள். அதை பாஜக இந்த பயணம் மூலம் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்கின் இந்த தமிழக பயணம் கண்டிப்பாக பாஜகவிற்கு தமிழகத்தில் பெரிய திருப்பமாக பார்க்கப்படும்.

    English summary
    Is PM Modi keeping a too deep bull's eye on Tamilnadu and its culture!? - Here is the report card on Xi Summit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X