சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் அம்மன் என்கிறார்.. தர்காவுக்குள் நுழைகிறார்.. உளறுகிறார்.. நிர்மலாதேவிக்கு என்னதான் பிரச்சனை?

நிர்மலாதேவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    Nirmala Devi : தர்காவுக்குள் தலைவிரி கோலத்தில் புலம்பல்.. தூக்கி சென்ற போலீஸ்- வீடியோ

    சென்னை: நான் காமாட்சி அம்மன் என்கிறார் நிர்மலாதேவி.. பிறகு திடீரென தர்காவுக்குள் நுழைகிறார்.. கண்டமேனிக்கு உளறுகிறார்.. உண்மையிலேயே நிர்மலாதேவிக்கு என்னதான் பிரச்சனை?

    கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஜெயிலில் இருந்தார் நிர்மலாதேவி. எப்போதெல்லாம் விசாரணைக்காக கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகிறாரோ அப்போதெல்லாம் மன அழுத்தத்துடன்தான் காணப்படுவார்.

    எந்த செய்தியாளர்களிடமும் அவர் பேச அனுமதிக்கப்பட மாட்டார். ஏராளமான போலீசார் புடைசூழ வந்தாலும், அதற்கு நடுவில் மைக்கை நுழைத்து கேள்வி கேட்டாலும் ஒரு வார்த்தையும் வெளிவராது. மேலும் முகமெல்லாம் இறுகி, வாடிப்போய், உச்சக்கட்ட சோகத்துடனே தென்பட்டார்.

    திகில் தரும் நிர்மலாதேவி அவதாரம்.. தர்காவுக்குள் தலைவிரி கோலத்தில் புலம்பல்.. தூக்கி சென்ற போலீஸ் திகில் தரும் நிர்மலாதேவி அவதாரம்.. தர்காவுக்குள் தலைவிரி கோலத்தில் புலம்பல்.. தூக்கி சென்ற போலீஸ்

    ஜாமீன்

    ஜாமீன்

    ஆனால் ஜாமீனில் வெளியே வந்ததும்தான் அவரது நடை, உடையில் மாற்றம் தெரிந்தது. முகத்தில் தெளிவு காணப்பட்டது. பளிச்சென உடையில், தலைநிறைய மல்லிகை பூவுடனும், புன்னகையுடனும் கோர்ட்டுக்கு வருவார்.. விசாரணை முடிந்ததும் விரைவாக சென்றுவிடுவார்.

    செயல்பாடுகள்

    செயல்பாடுகள்

    விருப்பப்பட்ட உடை, நகைகள் அணிவது தனிநபர் சுதந்திரம் என்றாலும், நிர்மலாவின் இந்த மாற்றம் அனைவரையுமே கவனிக்க வைத்தது. இப்போது இவரது வழக்கு இன்னமும் முடியவில்லை. ஆனால் திடீரென நிர்மலாவின் செயல்பாடுகளில் மாற்றம் வர என்ன காரணம்? வழக்கு சம்பந்தமாக நிர்மலா இப்படி நடந்து கொள்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.

    சிபிஐ மாற்றம்

    சிபிஐ மாற்றம்

    ஏனெனில், இந்திய ஜனநாயக மாதர் சங்க செயலர் சுகந்தி, நிர்மலாதேவி விவகாரத்தில் உயர் அதிகாரிகள் பலருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்களில் ஒருத்தர்கூட வழக்கில் சேர்க்கப்படவில்லை. யாருக்காக மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசினார் என்பது தெளிவாக விசாரிக்கப்படவில்லை. இனியும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தால் நியாயம் இருக்காது. அதனால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு போட்டிருந்தார். இது சம்பந்தமாக விரைவில் தீர்ப்பு வர உள்ளது.

    தண்டனை

    தண்டனை

    ஒருவேளை இந்த தீர்ப்பில் தனக்கு பாதகமான முடிவு வந்துவிடும் என்று நிர்மலா அச்சப்பட்டு இப்படி நடந்து கொள்கிறாரா? அல்லது தீர்ப்பில் ஏதேனும் ஒரு வகையில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு விட்டால், அதன்மூலம் கிடைக்கும் தண்டனையில் இருந்து தப்பித்து கொள்ள இப்படி நடந்து கொள்கிறாரா? என்பது குழப்பமாக உள்ளது.

    விரக்தி

    விரக்தி

    இது எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெயிலில் இருக்கும்போதே நிர்மலாவுக்கு நிறைய முறை உடம்பு சரியில்லாமல் போயுள்ளது. மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார். பெற்ற குழந்தைகளும், கட்டிய கணவனும் தன்னை ஆதரிக்கவில்லை, ஏற்றுக் கொள்ளவில்லை என்ற உச்சக்கட்ட விரக்திக்கு சென்றார். ஜாமீனில் வெளிவந்தும் ரத்த பந்தங்கள் ஆதரவு அவருக்கு கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.

    சிகிச்சை

    சிகிச்சை

    ஜெயிலில் ஏற்பட்ட மன அழுத்தம் இப்போது அதிகமாகி மனநலம் பாதிக்கப்படும் நிலைமைக்கு சென்றுவிட்டதா? சுயநினைவு இல்லாமல் உளறி கொட்டும் அளவுக்கு மூளை பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதும் புரியவில்லை. தெளிவான, தைரியமான, அதுவும் பேராசிரியையாக வேலை பார்த்த ஒரு பெண், இப்போது தன் நடவடிக்கையை தமிழகமே உற்று பார்க்கிறது என்று தெரிந்தும் இப்படி நடந்து கொள்வதன் காரணத்தை ஆராய்வது மிக அவசியம். ஒருவேளை மனரீதியான பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு சிகிச்சை தருவதும் கட்டாயமாகிறது.

    நீதிமன்றம்

    நீதிமன்றம்

    இல்லையென்றால், மருத்துவ பரிசோதனை மூலம் நிர்மலாவுக்கு மனரீதியான பாதிப்பு எதுவும் இல்லை என்பது நிரூபணமானால், அவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்ற கேள்வியை எழுப்புவதும் அவசியமாகிறது. எதுவானாலும் எல்லாம் நீதிமன்றம் கையில்தான் உள்ளது!

    English summary
    Is Professor Nirmala Devi mentally ill? People are confused as to why Nirmala Devi is acting like this
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X