சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்படீன்னா உண்மையிலேயே ரஜினி அரசியலுக்கு வர்றாரா?!

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    Rajini Praises Amit shah | காஷ்மீரை இரண்டாக பிரித்த அமித்ஷா..ரஜினிகாந்த் அதிரடி பாராட்டு!

    சென்னை: இந்திய அரசியல் பார்வையாளர்கள் இரண்டு நிகழ்வுகளை முடிச்சுப்போட்டுப் பார்க்கிறார்கள். ஒன்று சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய கிருஷ்ணர் - அர்ஜூனன் பேச்சு. மற்றொன்று, ரஜினி தனது போயஸ் வீட்டு முன்பாக என் கட்சி அறிவிப்பு எப்போது என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் எனும் பேட்டி.

    ரஜினியின் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் இடையில் மிகப்பெரிய நெருக்கம், அர்த்தம் இருக்கிறது. ரஜினி அரசியல் ரீதியாக பா.ஜ.க.வை நெருங்கிவிட்டார்! ஆனால்.... என்று இழுக்கிறார்கள். ஆனால் என்ன? என்ற கேள்விக்கு அவர்களிடமே அர்த்தத்தை தேடியபோது....

    "சென்னை நிகழ்வுக்கு வரும் ஐடியா ரஜினியிடம் இல்லை. ஆனால் முறையாக அழைப்பு வந்திருந்ததால் யோசித்தார். ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சில பத்திரிக்கையாளர்களிடம் பேசிப்பார்த்தார். அவர்களும் அவரை அந்த விழாவில் கலந்து கொள்ளச் சொல்லினர். ஒன்று செல்லாமல் இருந்துவிடுவது, அல்லது சென்றால் புயலை கிளப்புவது! என்பது ரஜினியின் பிளான். இதில் எதை செய்தாலும் ரஜினியை சுற்றி பரபரப்பு கிளம்பும்.

    புயல்கள்

    புயல்கள்

    காரணம்? செல்லாவிட்டால் அமித்சா, வெங்கய்ய நாயுடு விழாவையே ரஜினி புறக்கணித்துவிட்டார். காஷ்மீர் நடவடிக்கை விஷயத்தில் அவருக்கு உடன்பாடில்லை! என கிளப்புவர். அது பற்றி எரியும். ஆனால் போய் நின்றால் தானே பரபரப்பான பேச்சை உருவாக்குவது என நினைத்தார். அதன்படியே போனார், ‘மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜூனன் மாதிரி. இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனன் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.' என புகழ்ந்தும், காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆதரவும் தெரிவித்தார்.

    பரபரப்பு

    பரபரப்பு

    அதற்கடுத்த தினங்களில் தன் வீட்டு வாசலில் வைத்து தன் அரசியல் வருகையை உறுதிப்படுத்தியும் விட்டார். இதன் மூலம் 'ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி, தனிக்கட்சி துவங்கி பின் உடனேயே பா.ஜ.க.வுடன் கலப்பார், பா.ஜ.க.வின் தமிழக தலைவராக ரஜினி ஆகப்போகிறார்.' என்றெல்லாம் பரபரப்புகள் கிளம்பின.

    பாதி பாஜக

    பாதி பாஜக

    ஆனால் இதில் பாதியே உண்மை. அதாவது ரஜினி கட்சி துவங்குவது உறுதி. அது பா.ஜ.க.வின் பிரஷரால்தான் நடக்கிறது. ஆனால் அவர் தன் கட்சியை பா.ஜ.க.வுடன் கலக்க மாட்டார். அக்கட்சியின் நெருங்கிய நண்பனாக மட்டுமே இருப்பார். அ.தி.மு.க.வுக்கு முட்டு கொடுத்து ஓட வைப்பதை விட, ரஜினியை மிகச் சரியாக பயன்படுத்தினால், தமிழகத்தில் அடுத்த தேர்தலில் தி.மு.க. ஆட்சியமைப்பதை தடுத்து வீழ்த்திட முடியும்! என்று அமித்ஷாவை சந்தித்து ரஜினியின் நெருங்கிய புது நண்பரும், முதல்வர் அந்தஸ்தில் உள்ள இளைஞரும் சமீபத்தில் சொல்லியுள்ளார்.

    நிஜமாவே வர்றாரா

    நிஜமாவே வர்றாரா


    அவரும் பா.ஜ.க. ஆதரவுப் புள்ளியே. நான் மோடியின் நண்பர், ஆனால் பா.ஜ.க.வின் மெம்பரில்லை! எனும் ரஜினியின் நிலைப்பாடானது அமித்ஷாவையே அதிர வைத்துள்ளது என்று நிறுத்தினர். அப்ப உண்மையிலேயே ரஜினி அரசியலுக்கு வர்றாரா?!

    - ஜி.தாமிரா

    English summary
    Political experts see both Rajini's speech in Venkaiah Naidu function and his press meet infront of his house as something to be noted.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X