சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சீதை" கண்ணீர்..சின்னம்மா சாபம்! சசிகலாவுடன் டீம் சேர்ந்த ஓபிஎஸ்? இதை பாருங்களேன்! வெலவெலத்த அதிமுக

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான மோதல் உச்சம் அடைந்துள்ள நிலையில் சசிகலா - ஓபிஎஸ் இருவரும் ஒரு அணியில் திரள வேண்டும் என்று தென் மாவட்ட நிர்வாகிகள் பலர் கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர்.

Recommended Video

    ADMK-வில் நடைபெறும் உட்கட்சி பிரச்சனைகளுக்கு DMK-தான் காரணம் -சசிகலா குற்றச்சாட்டு

    ஜூலை 11ம் தேதி என்ன நடக்கும்.. அதிமுக பொதுக்குழு கூடுமா? ஒற்றை தலைமை குறித்த முடிவு எடுக்கப்படுமா? என்ற கேள்வி அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது. எப்படியாவது பொதுக்குழுவை கூட்டிவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார்.

    5 டாகுமெண்ட்.. அவமதிப்பு.. சூழ்ச்சி - எடப்பாடிக்கு எதிராக பக்காவாக காய்நகர்த்திய ஓபிஎஸ்.. என்னாகும்? 5 டாகுமெண்ட்.. அவமதிப்பு.. சூழ்ச்சி - எடப்பாடிக்கு எதிராக பக்காவாக காய்நகர்த்திய ஓபிஎஸ்.. என்னாகும்?

    இந்த பொதுக்குழுவிற்கு எதிராக சட்ட போராட்டம் நடத்த ஓ பன்னீர்செல்வம் தரப்பு தீவிரமாக முயன்று வருகிறதாம். ஏற்கனவே இது தொடர்பாக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஓபிஎஸ் தென் மண்டல பயணம்

    ஓபிஎஸ் தென் மண்டல பயணம்

    அதிமுகவில் எதையாவது செய்து தான் இழந்த ஆதரவை மீட்க வேண்டும் என்பதில் ஓபிஎஸ் தீவிரமாக இருக்கிறார். முக்கியமாக தென் மண்டலத்தில் தான் இழந்த ஆதரவை மீட்க வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதற்காக கடந்த இரண்டு நாட்களாக மதுரை, தேனியில் பல்வேறு நிர்வாகிகளை ஓபிஎஸ் சந்தித்து பேசினார். தென் மாவட்ட நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ்ஸுக்கு எதிர்பார்த்ததை விட சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    மீண்டும் தொடங்குவார்

    மீண்டும் தொடங்குவார்

    இந்த நிலையில்தான் தேனியில் இருந்தவர் சென்னையில் நடந்த அதிமுக தலைமை கழக கூட்டம் காரணமாக அவசர அவசரமாக சென்னை திரும்பினார். சென்னையில் தனக்கு எதிராக ஏதாவது தீர்மானம் அல்லது முடிவு எடுக்கப்படுமா என்று அஞ்சி தென் மண்டல பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு அவசர அவசரமாக சென்னை வந்தார். ஆனால் எடப்பாடி நடத்திய மீட்டிங்கில் முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில் ஓபிஎஸ் மீண்டும் தென் மண்டல பயணத்தை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வடமண்டல பயணம் சசிகலா

    வடமண்டல பயணம் சசிகலா

    இது ஒரு பக்கம் இருக்க எடப்பாடிக்கு எதிராக வடக்கில் இருந்து தெற்கு நோக்கி சசிகலா பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து வட மாவட்டங்கள் முழுக்க பயணம் மேற்கொள்வதாக சசிகலா அறிவித்து நேற்று பயணத்தை தொடங்கினார். முன்பை விட இந்த முறை சசிகலா பயணத்தில் கொஞ்சம் கூட்டம் கூடுதலாக உள்ளது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஒற்றை தலைமை குறித்து பேசி வருகிறார்.. அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவை. ஆனால் அதற்கு எடப்பாடி தகுதியானவர் கிடையாது என்று சசிகலா கூறி வருகிறார்.

    ஒரே நேரத்தில் பயணம் சந்தேகம்

    ஒரே நேரத்தில் பயணம் சந்தேகம்

    ஒரே நேரத்தில் இரண்டு பேரும் இப்படி சுற்றுப்பயணம் மேற்கொள்வது எடப்பாடி தரப்பிற்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதோடு ஓபிஎஸ் - சசிகலா இருவரும் ஒரு அணியில் திரள்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதாவது எடப்பாடி எதிர்ப்பு.. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ஒற்றை புள்ளியில் இவர்கள் இருவரும் இணைகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தென் மண்டல அதிமுகவில் இதுதான் பேச்சாக இருக்கிறது.

    ஏற்கனவே இருந்த சந்தேகம்

    ஏற்கனவே இருந்த சந்தேகம்

    கடந்த முறை அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் உயர் நீதிமன்றம் சென்ற போதே அவருக்கு பின் சசிகலா இருப்பதாக கூறப்பட்டது. சசிகலாவின் நிதி மற்றும் சட்ட ஆலோசனைகள் ஓபிஎஸ்ஸுக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வந்தன. ஓபிஎஸ்ஸை சசிகலா பின்னால் இருந்து இயக்குவதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது சசிகலா - ஓபிஎஸ் இருவரும் திட்டமிட்டு இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

    போஸ்டர்

    போஸ்டர்

    அதிலும் மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சசிகலா - ஓபிஎஸ்ஸை சேர்த்து வைத்து பல போஸ்டர்கள் தோன்றி வருகின்றன. சீதையின் கண்ணீர், சாபம் இலங்கையை அழித்தது.. சின்னம்மா சசிகலாவின் கண்ணீர், சாபம் எடப்பாடி அணியை அழிக்கும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. ஓபிஎஸ் - சசிகலா இருவரும் அம்மாவின் நம்பிக்கைக்குரியவர்கள்.. அவர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

    முக்குலத்தோர் சொந்தங்கள் ஒன்று கூடல்

    முக்குலத்தோர் சொந்தங்கள் ஒன்று கூடல்

    அதோடு முக்குலத்தோர் சங்கங்களின் வாட்ஸ் ஆப் குழுக்களிலும்.. எடப்பாடி தன் ஜாதிக்கு மட்டுமே ஆதரவு தருகிறார். அதேபோல் முக்குலத்தோர் நிர்வாகிகளும் ஓபிஎஸ் பின் ஒற்றுமையாக அணி திரள வேண்டும். டிடிவி - சசிகலா - ஓபிஎஸ் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இவர்கள் ஒன்றாக இணைந்து கட்சியை காக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். திடீரென இப்படி தென் மண்டல கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் ஓபிஎஸ் பக்கம் செல்வது எடப்பாடி தரப்பிற்கு சின்ன டென்ஷனை கொடுத்துள்ளதாகவும் அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

    English summary
    Is Sasikala and O Panneerselvam joining hands against Edappadi Palanisamy? What is happening in South? அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான மோதல் உச்சம் அடைந்துள்ள நிலையில் சசிகலா - ஓபிஎஸ் இருவரும் ஒரு அணியில் திரள வேண்டும் என்று தென் மாவட்ட நிர்வாகிகள் பலர் கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X