சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் அடுத்தடுத்த 3 புயல்.. தொடர் நிலநடுக்கம்.. பகீர் கிளப்பும் சோலார் மினிமம்.. உண்மை என்ன?

இந்தியாவில் அடுத்தடுத்து மூன்று புயல்கள் மற்றும் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்ப்படுவதற்கு பின் சோலார் மினிமம் காரணமாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் அடுத்தடுத்து மூன்று புயல்கள் மற்றும் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு பின் சோலார் மினிமம் காரணமாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புரட்டி எடுக்க போகும் மழை

    இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு இடையே தொடர் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்தியாவில் பருவம் மாறி தற்போது மழை பெய்து வருகிறது. கோடை காலமாக இருந்தாலும் பல மாநிலங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

    அதோடு வரிசையாக இந்தியாவை புயல் தாக்க தொடங்கி உள்ளது. இதுவரை ஆம்பன் மற்றும் நிசார்கா என்ற இரண்டு புயல் இந்தியாவை தாக்கிய நிலையில் மூன்றாவது புயல் தற்போது இந்தியாவை தாக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    பிடிவாதத்தை கைவிட்டு... மின் கட்டணத்தில் 6 மாதங்களுக்கு சலுகைகள் தர வேண்டும் -மு.க.ஸ்டாலின் பிடிவாதத்தை கைவிட்டு... மின் கட்டணத்தில் 6 மாதங்களுக்கு சலுகைகள் தர வேண்டும் -மு.க.ஸ்டாலின்

    இரண்டு புயல் என்ன

    இரண்டு புயல் என்ன

    கடந்த மாதம் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் ஆம்பன் புயல் தாக்கியது. இந்த புயல் வங்கக்கடலில் உருவாகி சூப்பர் புயலாக மாறியது. மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் அருகே இந்த புயல் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும் போது 160 கிமீ வேகத்தில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக மேற்கு வங்கத்திலும், ஒடிசாவில் மிக மோசமான சேதம் ஏற்பட்டது.

    நிசார்கா புயல்

    நிசார்கா புயல்

    இதை தொடர்ந்து அரபிக்கடலில் நிசார்கா புயல் உருவானது. இந்த புயல் அதி தீவிர புயலாக மாறியது. இந்த புயல் காரணமாக குஜராத், மகாராஷ்டிரா, கேரளாவில் கனமழை பெய்தது. மும்பை அருகே இந்த புயல் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும் போது 90 கிமீ வேகத்தில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக மும்பை கடுமையாக பாதிப்பு அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்த புயல் வருகிறது

    அடுத்த புயல் வருகிறது

    இந்த நிலையில் அடுத்த புயல் இந்தியாவை தாக்க இருக்கிறது. இந்த புயலுக்கு "காட்டி" என்று பெயரை வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக இந்த புயல் உருவாகி வருகிறது. அதுவும் வங்கக்கடலில் இந்த புயல் உருவாகி வருகிறது. இதனால் இந்த புயல் எங்கு தாக்கும், தமிழகம் பக்கம் வருமா அல்லது மேற்கு வங்கம் பக்கம் செல்லுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

    இன்னொரு பக்கம் நிலநடுக்கம்

    இன்னொரு பக்கம் நிலநடுக்கம்

    ஒரு பக்கம் இப்படி இந்தியாவில் தொடர்ந்து புயல்கள் தாக்கி வரும் நிலையில் டெல்லி, ஹரியானா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று முதல்தான் டெல்லியில் 3.2 ரிக்டரில் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது . ஹரியானா அருகேயும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

    தொடர்ந்து மோசமாகும் நிலை

    தொடர்ந்து மோசமாகும் நிலை

    கடந்த ஒன்றரை மாதமாக டெல்லியில் இப்படித்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து நேற்று வரை மொத்தம் 12 முறை டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் வரும் நாட்களில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெல்லியில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    என்ன சந்தேகம்

    என்ன சந்தேகம்

    இந்தியாவில் அடுத்தடுத்து மூன்று புயல்கள் மற்றும் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு பின் சோலார் மினிமம் காரணமாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. சூரியனில் தற்போது சோலார் மினிமம் ஏற்பட்டு உள்ளது. அது என்ன சோலார் மினிமம் என்று நீங்கள் கேட்கலாம். சூரியனில் இருக்கும் ''சன் ஸ்பாட்'' எனப்படும் பகுதிகள்தான் சூரியனின் வெப்பநிலைக்கு மிக முக்கிய காரணம் ஆகும்.

    குறையும் வாய்ப்பு

    குறையும் வாய்ப்பு

    சூரியனின் பரப்பில் எவ்வளவு சன் ஸ்பாட் இருக்கிறது என்பதை பொறுத்துதான் அது வெளியிடும் வெப்பநிலையில் அளவு மாறுபடும். இந்த சன் ஸ்பாட் அவ்வவ்போது அதிகரிக்கவும், அவ்வப்போது குறையவும் வாய்ப்பு உள்ளது. சன் ஸ்பாட் 11 வருடங்களுக்கு ஒருமுறை குறையவும் வாய்ப்புள்ளது. இந்த சன் ஸ்பாட் குறைந்து சூரியனின் வெப்பநிலை குறைவதை "solar minimum" என்று அழைக்கிறார்கள். இந்த வருடம் சூரியனில் இந்த சோலார் மினிமம் ஏற்பட்டது.

    இந்த வருடம் ஏற்பட்டது

    இந்த வருடம் ஏற்பட்டது

    இதனால் சூரியன் வெளியிடும் வெப்ப கதிர்களின் அளவு வெகுவாக குறையும். இதனால் பூமியில் குளிர் மிக மோசமாக அதிகரிக்கும். இதனால், பல இடங்களில் நிலநடுக்கம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். மழை வெள்ளம், சூறாவளி, புயல் அதிகமாக வரும். எரிமலை வெடிப்பு, கடல் கொந்தளிப்பு ஏற்படும் என்றும் கூறுகிறார்கள். பனி அதிகமாக பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு பின் இப்படி நடக்கிறது என்று நாசா தெரிவித்தது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இந்தியாவில் இப்போது ஏற்படும் இது போன்ற இயற்கை பேரிடர்களுக்கு பின் சோலார் மினிமம் காரணம் இல்லை என்று கூறுகிறார்கள். ஏனென்றால் சூரியனில் இந்த முறை சோலார் மினிமம் அவ்வளவு வலுவாக இல்லை. அதேபோல் சூரியனில் ஏற்பட்ட புதிய வெடிப்புகள் காரணமாக அதன் வெப்பநிலை லேசாக அதிகரித்துள்ளது. இதனால் சோலார் மினிமம் அவ்வளவு பெரியதாக இல்லை, சக்தியோடு உள்ளது என்று கூறுகிறார்கள்.

    கடந்த வாரம்

    கடந்த வாரம்

    அதேபோல் கடந்த வாரம் சூரியனில் பெரிய வெடிப்பு ஏற்பட்டது. 2017க்கு பின் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பு ஆகும் இது. இதனால் சூரியன் மீண்டும் புத்துயிர் பெற்று இருக்கிறது. இதனால் சூரியனில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. ஆகவே சோலார் வெடிப்பு காரணமாக பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்கிறார்கள். ஆகவே இந்தியாவில் ஏற்படும் பேரிடர்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    English summary
    Is sun minimum a reason for earthquakes and 3 consecutive big storms in India?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X