சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆந்திராவுக்கு 3 தலைநகர்.. அப்போ தமிழகத்திற்கு? இந்த பிளான் எப்படி இருக்கு பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: ஆந்திராவில் 3 தலைநகரங்களை உருவாக்குவதற்கான சட்ட மசோதா அந்த மாநில சட்டசபையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவிலிருந்து, தெலுங்கானா பிரிந்து சென்ற பிறகு, ஹைதராபாத் அந்த மாநிலத்துக்கு சொந்தம் ஆகிவிட்டதால், புதிதாக ஒரு தலைநகரை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் தலைநகராக அமராவதி உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தபோதுதான், பொதுத் தேர்தல் வந்தது.

ஜெகன் மோகன் ரெட்டி

ஜெகன் மோகன் ரெட்டி

இடைத்தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதால், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இவர் ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலை நகரங்களை, உருவாக்கும் முயற்சியை முன்னெடுக்க தொடங்கியுள்ளார். மூன்று தலைநகரங்களை உருவாக்கக்கூடிய முக்கியமான கட்டம் இன்று நடந்தேறியுள்ளது. இதற்கான சட்ட மசோதாவிற்கு, மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், சட்ட மசோதா இன்று அந்த மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விதவிதமான தலைநகரம்

விதவிதமான தலைநகரம்

இதன்படி விசாகப்பட்டினம் நகரம் என்பது தலைமைச்செயலகம் அமையக்கூடிய நகரமாக இருக்கும். அமராவதி நகரில் சட்டசபை அமையும். கர்நூல் நீதித்துறை தலைநகரமாக கருதப்படும். அதாவது, மாநில உயர் நீதிமன்றம் அங்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமராவதியில் மாநில சட்டசபை அமைந்தாலும் கூட தலைமைச்செயலகம் விசாகப்பட்டினத்தில் அமைவதால் அது தான் உண்மையான தலைநகரம் என்று கருதப்படும். ஏனெனில், முதல்வர், தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோருக்கான அலுவலகங்கள் விசாகப்பட்டினத்தில்தான் அமைந்திருக்கும். அரசின் அனைத்து முடிவுகளும், உத்தரவுகளை இங்கிருந்துதான் பிறப்பிக்கப்பட உள்ளது. எனவே தான் இதற்கு, தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆந்திர மேலவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு போதிய பலம் இல்லாத காரணத்தால், இந்த சட்டம் அங்கே முடக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் கருத்து

மக்கள் கருத்து

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழகத்திலும் இதேபோல ஒன்றுக்கு மேற்பட்ட தலைநகரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற கருத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் பரவி வருவதை சமூக வலைத்தள பதிவுகள் மூலமாக நாம் பார்க்க முடிகிறது. சென்னை என்பது தமிழகத்தின் வட கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள பிற பெரிய நகரங்கள் அனைத்திலிருந்தும், தலைநகரத்தில் பணிகளை மேற்கொள்வதற்காக மக்கள் நீண்ட தூரம் பயணித்து வரவேண்டியுள்ளது.

எம்ஜிஆர் காலத்தில் திருச்சி

எம்ஜிஆர் காலத்தில் திருச்சி

எனவே சென்னைக்கு மாற்றாக மற்றொரு தலை நகரத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை, இன்று, நேற்றல்ல.. நீண்ட காலமாக நிலவக்கூடிய ஒன்றுதான். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலேயே, தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்றும் முயற்சிகளை முன்னெடுத்தார். இதற்காக, நவல்பட்டு கிராமத்தில் துணை நகரம் ஒன்றையும் உருவாக்கினார். அகலமான ரோடுகள், வீட்டுமனைகள் உள்ளிட்ட சகல வசதிகளுடன் கூடிய இந்த துணை நகரத்துக்கு 1984 ஆம் ஆண்டு திறப்பு விழா நடைபெற்றது. ஆனால் எதிர்ப்பு காரணமாக இந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் போய்விட்டது.

நீதித்துறை தலைநகர் மதுரை

நீதித்துறை தலைநகர் மதுரை

இந்த நிலையில்தான் ஆந்திர அரசின் நடவடிக்கையை பார்த்து, தமிழக மக்கள் பலருக்கும் இந்த கோரிக்கை மீண்டும் நினைவுக்கு வந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால், நமக்கு இரண்டாவது நீதித்துறை தலைநகரமாக ஏற்கனவே மதுரை மாறிவிட்டது என சொல்லலாம். தென் மாவட்ட மக்கள் உயர்நீதிமன்ற அலுவல்களுக்காக, சென்னை வரை பயணிப்பதை தவிர்க்கும் வகையில் மதுரையில் உயர்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம்

எனவே சட்டசபை சென்னையில் இருந்தால் பரவாயில்லை, தலைமைச் செயலகம் திருச்சி, மதுரை போன்ற தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள ஏதாவது ஒரு நகரத்தில் அமைக்கப்பட்டால் அது மக்களுக்கு பலனளிக்கும் என்ற ஒரு யோசனை சமூக வலைத்தளங்களில் பலராலும் முன்வைக்கப்படுவதை பார்க்க முடிகிறது. சென்னை ஏற்கனவே மக்கள் நெரிசலால் பிதுங்கி வழிவதால், அந்த நகர மக்களுக்கும், இதுபோன்ற அதிகார பரவலாக்கல் நன்மையை கொடுக்க கூடும்.

கர்நாடக உதாரணம்

கர்நாடக உதாரணம்

கர்நாடகாவின் தெற்கு எல்லைப் பகுதியில் தலைநகர் பெங்களூர் அமைந்துள்ளது. எனவேதான், வட பகுதியில் அமைந்துள்ள பெல்காமில் சட்டசபை கட்டிடம் அமைக்கப்பட்டு, குளிர்கால கூட்டத்தொடர் மட்டும் அங்கு நடத்தப்படுகிறது. அதிகாரப் பரவலாக்கம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றால் இது போன்று, அதிகார மையங்கள் மக்களை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்கு இதெல்லாம் உதாரணம். தமிழகத்திலும் சென்னைக்கு மாற்றாக வேறு தலை நகரம் அமைக்க வேண்டுமா? இல்லையா என்பதுபற்றி உங்களது கருத்துக்களை நமது கமெண்ட்ஸ் பகுதியில் தெரிவியுங்களேன்.

Take a Poll

English summary
Is Tamilnadu needs alternative capital city for Chennai as the city is become large and it is located in for North East from other parts of the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X