India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஞ்சர் பாஜக.. மாஸ்டர் பிளானில் குதித்த "தலை"கள்.. தாக்கு பிடிப்பாரா தாக்கரே.. காங்கிரஸ் என்னாகும்?

Google Oneindia Tamil News

சென்னை: பலம் கொண்ட பாஜகவை வீழ்த்த, தேசிய தலைவர்கள் ஒன்றுகூடி வருகின்றனர்.. இது எந்த அளவுக்கு பலனை தரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது... இதனால் தேசிய அரசியலே பரபரத்து காணப்படுகிறது.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்ததன் பேரில், நேற்றைய தினம் அந்த விருந்து நல்லபடியாக நடந்து முடிந்தது.

காலை 6 மணிக்கு முன்பாக அங்கு ஆஜராக வேண்டும்! அதிமுக முகவர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அளித்த யோசனைகள்!காலை 6 மணிக்கு முன்பாக அங்கு ஆஜராக வேண்டும்! அதிமுக முகவர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அளித்த யோசனைகள்!

சந்திரசேகர்ராவ் மும்பை வந்து இந்த விருந்தில் கலந்துகொண்டார்... இது வெறும் விருந்து நிகழ்ச்சி மட்டுமே இல்லை..

 தலையெழுத்து

தலையெழுத்து

இந்திய அரசியலின் தலையெழுத்தை மாற்றியமைப்பதற்கான சந்திப்பாக கருதப்படுகிறது. வரும் எம்பி தேர்தலில் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுப்பதா... வேண்டாமா? என்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது..அதாவது 2024-ல் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சி கூட்டணி அமைக்கும் பணி இப்போதே ஆரம்பமாகிவிட்டது..

 சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு

2019-ல் எம்பி தேர்தலிலும் இப்படியான ஒரு முயற்சியை சந்திரபாபுநாயுடு முன்னெடுத்தார்.. தேசிய தலைவர்கள் ஒவ்வொருவராக சந்தித்து பேசி ஆதரவு கேட்டு வந்தார்.. பெரும்பான்மையான தலைவர்களும் அவருக்கு ஆதரவை தந்தனர்.. ஆனால் பிரதமர் வேட்பாளர் தேர்வில் எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் அந்த கூட்டணி திட்டம் கைவிடப்பட்டுவிட்டது.

 உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

இந்தமுறை, அந்த முயற்சியை மம்தா கையிலெடுத்துள்ளார்.. அவரும் ஒவ்வொரு தலைவராக சந்தித்து பேசி வருகிறார்.. தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் போன்ற பிரதான தலைகள் இந்த கூட்டணியில் கிட்டத்தட்ட இடம்பெற்றாகிவிட்டதுபோல் தெரிகிறது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முடிவு நாளைய தினம் எப்படி மாறுமோ தெரியாது.

 பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்

ஆனால், இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு தருமா? அல்லது கடைசிவரை தராமலேயே போய்விடுமா என்பதுதான்.. கடந்த வருட ஆகஸ்ட் மாதமே தன்னுடைய அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மூலம் எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்க மம்தா ஒரு முயற்சி மேற்கொண்டார்... அதற்கு பிறகுதான், காங்கிரஸ் தலைவர் சோனியா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை தனிப்பட்ட முறையில் பிரசாந்த் கிஷோர் சந்தித்தும் பேசினார். லாலுவிடமும் போனில் பேசி ஆதரவு கேட்கப்பட்டது..

காந்தி

காந்தி

ஆனால் அந்த சமயத்தில், பிரதமர் வேட்பாளருக்கு மம்தாவை நிறுத்தலாம் லாலு கூறியதாக செய்தி கசிந்தது.. இந்த யோசனையை காங்கிரஸ் அப்போதே எதிர்த்தது.. மம்தாவை பிரதமர் வேட்பாளராக்க காங்கிரஸ் விரும்பவில்லை என்றே யூகிக்கப்பட்டது. அதாவது ராகுலை பிரதமர் வேட்பாளராக்க காங்கிரஸ் முடிவு செய்து வைத்துள்ளதாக தெரிகிறது.. இதற்கு பிறகு காங்கிரஸை கண்டுகொள்ளாமல் மம்தா அடுத்த அரசியலை நகர்த்தினார்..

 சோனியா

சோனியா

ஒருமுறை டெல்லிக்கு கிளம்பும் முன்பு, கொல்கத்தாவில் செய்தியாளர்கள் அவரிடம் சோனியாவை சந்திப்பீர்களா? என்று கேட்டனர்.. அதற்கு மம்தா, "ஒவ்வொரு முறையும் டெல்லி வரும்போது அவரை சந்தித்தே ஆகவேண்டும் என்று ஏதாச்சும் கட்டாயம் இருக்கிறதா என்ன? என்று பதில் கேள்வி எழுப்பும்போதே காங்கிரஸ் உறவை மம்தா விரும்பவில்லை என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த புகைச்சல்தான் இன்று வரை விரிசலை ஏற்படுத்தி வருகிறது.. 3வது அணி அமைய வாய்ப்புள்ளதா என்று கேட்கும் அளவுக்கு இந்த புகைச்சல் அனல்கக்கி கொண்டிருக்கிறது.

 சாத்தியமா?

சாத்தியமா?

காங்கிரஸ் இல்லாமல் 3வது அணி சாத்திமா? என்பதே மிகப்பெரிய கேள்வி.. மம்தாவை பொறுத்தவரை, பாஜகவை எதிர்க்கும் துணிச்சல், தைரியம் காங்கிரசுக்கு கிடையாது என்றும், அதற்கு திரிணாமல் காங்கிரஸே மேல் என்றும் உறுதியாக நம்புகிறார் போலும்.. இது ஒரு நல்ல முயற்சி என்றாலும், காங்கிரஸ் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற உண்மையை இந்த தலைவர்கள் உணர்ந்து கொண்டால், முதல் கட்டமாகவே வெற்றியை உறுதிபடுத்தி கொள்ளலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

 பாஜக

பாஜக

காரணம், இந்த பாஜக ஆட்சி மீது மக்கள் கடுங்கோபத்தில் உள்ளதால், இந்த அணி திரண்டால் அது சாதகமான வெற்றியையே பெற்று தரும்.. பிரதமர் வேட்பாளர் யார்என்ற ஈகோவை பார்த்து, மறுபடியும் அணி திரளும் முயற்சி தோல்வியடைந்து விடக்கூடாது என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. ஐக்கிய ஜனநாயக கூட்டணியே கிடையாது என்று அன்று மம்தா சொல்லிவிட்டு சென்றதில் இருந்தே சில தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.. சரத்பவாருக்கு மம்தா பேசியதில் உடன்பாடு இல்லை..

 உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

இப்போது உத்தவ்தாக்கரேவும் காங்கிரஸ் கட்சியின் தயவில்தான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்... அப்படி இருக்கும்போது, உத்தவ் தாக்கரே காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை முழு மனசுடன் ஏற்பாரா என்பது சந்தேகமே என்கிறார்கள்.. எனவே, காங்கிரஸ் இல்லாத புதிய அணி சாத்தியமா? அல்லது இந்த பலம் பொருந்திய கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் விரைவில் இணையுமா? அல்லது காங்கிரஸ் இல்லாமலேயே பாஜகவை வீழ்த்த முடியுமா? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.

English summary
Is the 3rd team strong enough to defeat the BJP? Is it possible to form a team without Congress?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X