சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல் ஓகே..சட்டசபை இடைத்தேர்தலில் சறுக்கிருச்சே திமுக.. அதிமுக ஆட்சி தப்புகிறதா!

தமிழகத்தில் திமுக ஆட்சி மாற்றத்தை கொண்டு வருமா என தெரியவில்லை.

Google Oneindia Tamil News

சென்னை: எம்பி தேர்தல் முன்னணி நிலவரம் எல்லாம் சரி, ஆனால் இடைத்தேர்தலில் திமுக ஒன்னும் அபார வெற்றியை எட்டவில்லையே? ஏன்? இது எப்படி ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை குறைந்தது 4 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியை தக்க வைக்கலாம். இருந்தாலும், அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வென்ற தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோரின் முடிவைப் பொறுத்து இந்த நிலைமை மாற வாய்ப்பிருந்தது.

திமுகவை பொறுத்தவரை, முதல் விஷயம், 20 தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஆட்சி அமைக்கும். இரண்டாவது விஷயம், இதற்கு குறைவான தொகுதியில் வென்றால் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களின் உதவியை கோரும் நிலை ஏற்படும்.

காலி பெட்டியான பரிசு பெட்டி...!! ஒட்டு மொத்தமாக சரிவை சந்தித்த டிடிவியின் அமமுக..!! காலி பெட்டியான பரிசு பெட்டி...!! ஒட்டு மொத்தமாக சரிவை சந்தித்த டிடிவியின் அமமுக..!!

கட்சி தாவல் தடை சட்டம்

கட்சி தாவல் தடை சட்டம்

மூன்றாவது விஷயம், ஒருவேளை நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தால், கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ் எம்எல்ஏ பதவியை அவர்கள் இழக்கும் நிலை ஏற்படும். எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பது அல்லது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது.. இதில் இரண்டில் ஒன்றை செய்தால்தான் திமுக ஆட்சி அமைக்க உதவி செய்ய முடியும்.

முன்னிலை

முன்னிலை

இதை வைத்து பார்க்கும்போது, எம்பி தேர்தலை கவனத்தில் கொண்ட திமுக, இடைத்தேர்தலில் கோட்டை விட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 12 இடங்களிலும் அதிமுக 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

தருமபுரியில் ஒரே சுற்றில் மாறிய நிலை.. அன்புமணி ராமதாஸ் பின்னடைவு.. முன்னுக்கு வந்த திமுக தருமபுரியில் ஒரே சுற்றில் மாறிய நிலை.. அன்புமணி ராமதாஸ் பின்னடைவு.. முன்னுக்கு வந்த திமுக

நெருக்கடி தருமா?

நெருக்கடி தருமா?

அதாவது எம்பி தேர்தலில் எதிர்பார்க்காத வெற்றியை திமுக எட்டி வருகிறது என்றால், இடைத்தேர்தலில் அந்த அளவுக்கு சோபிக்கவில்லை என்பதே உண்மை. அதனால் அக்கட்சிக்கு நெருக்கடிதான் ஏற்பட்டுள்ளது. அதனால் அதிமுகவுக்கு மாற்றாக திமுக உருவாகுமா, ஆட்சி கவிழ்ப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுக்குமா என தெரியவில்லை.

சாத்தியமா?

சாத்தியமா?

இப்படி எம்பி தேர்தலில் மட்டுமே வெற்றி முகம் என்பதால், அகில இந்திய அளவில் மட்டுமே திமுக கவனம் செலுத்தியுள்ளது. அதுவும் கூட மத்திய அமைச்சர் பதவியை குறி வைத்து செயல்பட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சட்டமன்ற தேர்தலில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள திமுக இன்னும் கள முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும் என்பதே இப்போது புலப்பட்டுள்ளது. அதனால் ஆட்சி மாற்றம் நடக்குமா? சாத்தியமா என்பது இனி சந்தேகம்தான்!

English summary
DMK reversed in by election and it does not seem to bring change in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X