சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்படீன்னா திருப்பரங்குன்றத்துக்கு எப்ப நடக்கும்??

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிப்ரவரியில் நடக்குமா?

Google Oneindia Tamil News

சென்னை: அப்படியென்றால் திருப்பரங்குன்றம் தேர்தல் இப்போதைக்கு நடக்காதா? இதுதான் மக்கள் மனதில் மதியத்திலிருந்து ஓடிக் கொண்டிருக்கும் கேள்வி.

ஏற்கனவே ரெட் அலர்ட் காரணம் காட்டி இடைத்தேர்தல் தள்ளிப் போடப்பட்டது என்றார்கள். வராத மழைக்கே தள்ளி போன இடைத்தேர்தல் கஜா காட்டி விட்டு போன பயங்கரத்தை அடுத்து என்னாகுமோ என்ற பயம் வந்தது.

இன்னும் சொல்லப்போனால் இடைத்தேர்தல் எல்லாம் நடக்கவே நடக்காது என்றே நிறைய பேர் எசகுபிசகாக பேச ஆரம்பித்தனர். இதனிடையே எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயார் என்று எல்லா கட்சிகளும் சொல்லி வருகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அதிமுக, திமுக, அமமுக என எல்லார் கணக்குமே பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலை நடத்தினால் நன்றாக இருக்கும் என்பதுதான்.

[பிப்ரவரி 7ம் தேதிக்குள் திருவாரூர் இடைத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் தகவல் ]

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

ஆனால், இடைத்தேர்தல் குறித்து இன்று முடிவு வந்துவிட்டது. மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் மூலமாக ஒரு விடிவு வந்துவிட்டது. பிப்ரவரி 7-ம் தேதி தேர்தல் என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் திருப்பரங்குன்றம் பற்றி வழக்கு இருப்பதால் இப்போதைக்கு எதுவுமே சொல்ல முடியாது என்று சொல்லி விட்டது தேர்தல் ஆணையம்.

கையெழுத்து

கையெழுத்து

விஷயம் இதுதான்.. திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலின் போது ஆஸ்பத்திரியில் இருந்த ஜெயலலிதாவிடமிருந்து வேட்புமனுவில் ஒரு கையெழுத்து வாங்கப்பட்டது. அது அவரது பெருவிரல் கைரேகையாகும். இந்த கைரேகையில்தான் சிக்கல் என்று திமுக வேட்பாளர் டாக்டர்.சரவணன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கை போட்டார்.

தீர்ப்பு எப்போது?

தீர்ப்பு எப்போது?

அந்த தொகுதி சம்பந்தப்பட்ட போஸே இறந்துவிட்டார். ஆனால் இன்னும் கேஸ் போய்ட்டு இருக்கு. இதில் எப்ப முடிவு வரும் என்று தெரியவில்லை. அப்படியென்றால் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்தப்படுமா? என தெரியவில்லை. இரண்டு இடைத்தேர்தல்களும் ஒன்றாக நடத்த வேண்டுமானால் ஒரே வழி, ஐகோர்ட் திருப்பரங்குன்றம் குறித்த தீர்ப்பை உடனடியாக சொல்வதுதான். ஏனென்றால் 2019 ஜனவரி வரைக்குத்தான் டைம் உள்ளது.

திருவாரூர் மட்டுமா?

திருவாரூர் மட்டுமா?

இன்னொரு விஷயம், இடைத்தேர்தல் பற்றின அறிவிப்பினை 40 நாட்களுக்கு முன்பே அறிவித்து விட வேண்டும். இப்போது கணக்கு பார்த்தால் இடிக்கிறது. திருப்பங்குன்றம் உடனடி தீர்ப்பு வருமா? அல்லது அதற்கு மட்டும் தனியாக நடத்தப்படுமா? வரப்போகிற திருவாரூர் தொகுதியில் மட்டும் கட்சிகள் இறங்கி தேர்தல் வேலையை பார்க்க போகிறதா என இனிதான் பார்க்க வேண்டும்.

எப்போது நடக்கும்?

எப்போது நடக்கும்?

இதை விட முக்கியமான இன்னொன்று இருக்கிறது.. அது 18 தொகுதி இடைத் தேர்தல். அது எப்போது நடக்கும் என்றும் தெரியவில்லை. மொத்தத்தில் தமிழ்நாட்டில் எது நடந்தாலும் அதில் ஒரு மர்மம் வைக்காமல் எதுவும் நடக்காது போல.. !

English summary
Will Thirupparankundram By-Election be conducted in February
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X