சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆணவமாக பேசும் பசிதம்பரம் அவர்களே இதுதான் காங்கிரசின் ஜனநாயகமா? தமிழிசை நறுக்

Google Oneindia Tamil News

சென்னை : எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்வோம் என கூறிய ப.சிதம்பரத்திற்கு இதுதான் காங்கிரஸின் ஜனநாயகமா என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் எஞ்சிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் சட்டசபை இடைத்தேர்தலே முக்கியத்துவம் மிகுந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு எதிராக வந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்... சொல்கிறார் ஓபிஎஸ்! நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்... சொல்கிறார் ஓபிஎஸ்!

முதல்வராக ஸ்டாலின்

முதல்வராக ஸ்டாலின்

அதே நேரத்தில் தேர்தலுக்கு பிறகு நிச்சயம் ஸ்டாலின் தான் முதல்வர் என திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பேசி வருகின்றன. இந்நிலையில் பிரச்சார கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம் ராகுல் பிரதமரான அடுத்தநாள் இங்கே ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார் என தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் பேச்சு

ப.சிதம்பரம் பேச்சு

எடப்பாடி பழனிச்சாமிக்கு எத்தனை எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தாலும் அவர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்வோம் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இதுதான் ஜனநாயகமா?

இதுதான் ஜனநாயகமா?

இந்நிலையில் ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை டிவிட்டரில் பதிலடி கொடுத்ததோடு இதுதான் காங்கிரஸின் ஜனநாயகமா என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

பகல் கனவு வேண்டாம்

தமிழிசை பதிவிட்டுள்ள டிவிட்டில் கூறியிருப்பதாவது, ராகுல் பிரதமரான அடுத்தநாள் இங்கே ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பாராம்.எடப்பாடிக்கு எத்தனை எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தாலும் அவர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்வோம் என ஆணவமாக பேசும் பசிதம்பரம் அவர்களே இதுதான் காங்கிரசின் ஜனநாயகமா ? மக்களின் தீர்ப்பை என்றுமே மதிக்காத கட்சி காங்! பகல் கனவு வேண்டாம்‘ இவ்வாறு தமிழிசை தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

பதிலடி

பதிலடி

தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் அரசு மீதான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு டிவிட்டர் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu BJP leader Tamilisai raising questioned to P.chidambaram. Is this the democracy of Congress? tamilisai asked.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X