சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா விசிக?... பரபரக்கும் வன்னியரசு டிவிட்!

Google Oneindia Tamil News

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் திமுக கூட்டணி மட்டுமே ஓரளவுக்கு தெளிவாக தெரிந்துவிட்ட சூழலில் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதோ என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு சில காட்சிகள் அரங்கேறியுள்ளன.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகே தமிழகத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக தவிர மீதமுள்ள கட்சிகள் பிரச்சனைகள் அடிப்படையில் திமுகவோடு சேர்ந்து நின்று மாநில அரசின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் விமர்சித்து வந்தன. அதே போன்று மத்திய அரசின் செயல்பாடுகளையும் பல்வேறு செயல்பாடுகளையும் இந்த கட்சிகள் ஒன்றிணைந்தே விமர்சித்து வந்தன.

Is VCK leaving DMK front?

இது எல்லாவற்றையும் தாண்டி மதிமுக பொது செயலாளர் வைகோ ஸ்டாலினை முதல்வர் ஆக்குவதே தனது தலையாய பணி என்றெல்லாம் கூறி வந்தார். ஆனால் திமுகவின் பொருளாளர் துரைமுருகனோ வேறு விதமாக பேசினார். விசிகவோ மதிமுகவோ தங்களைது கூட்டணியில் இல்லை என்றார். இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய மதிமுகவும் விசிகவும் திமுக தலைவரை சந்தித்து பேசினார்கள். இருந்தும் ஸ்டாலினிடம் இருந்து எவ்வித வெளிப்படையான பதிலும் வரவில்லை. இருந்தாலும் திருமாவளவன் திமுக தங்களை அழைத்துப் பேசும், தாங்களும் திமுக கூட்டணியில்தான் உள்ளோம் என்றுதான் பேசி வந்தார்.

ஆனால் அவர் இன்னொன்றையும் அப்போதிருந்தே கூறிவந்தார். அதாவது பாமக இருக்கும் அணியில் நிச்சயமாக நாங்கள் இருக்க மாட்டோம் என்றும் கூறி வந்தார். இந்நிலையில் பாமக திமுக அணியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தீவிரமாக விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் திமுக தலைவருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதற்கேற்றாற்போல பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியும் இரு கட்சிகளோடும் பேசி வருகிறோம் என்று கூறியிருந்தார்.

Is VCK leaving DMK front?

அதே வேளையில் திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள் இருப்பதை சில திமுக தலைவர்கள் இருப்பதை விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. அதனால் அவர்கள் விசிகவை கழட்டி விடும் முடிவில் திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் விசிகவின் மாநிலப் பொது செயலாளர் வன்னி அரசு தனது ஃபேஸ் புக் பக்கத்திலும், டிவிட்டரிலும் வெளியிட்டுள்ள பதிவில்

அமைந்தாங்கு ஒழுகான்

அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து

கெடும்.

- திருவள்ளுவர்

( பொருள்- வலி அறிதல்)

⭕️மற்றவர்களை மதிக்காமலும்

தன் வலிமையை

உணர்ந்து கொள்ளாமலும்,

தன்னைத்தானே

பெரிதாக விளம்பரப்படுத்திக்

கொண்டிருப்பவர்கள்

விரைவில்

கெட்டுத்தொலைவார்கள்⭕️

- சமத்துவப்பெரியார் கலைஞர்

அதாவது,

தேர்தலில் வெற்றி பெறவேண்டும்

என்று கூட்டு சேர்ந்து

களமாடும் போது

உடன்

இருப்பவர்களையும்

மதிக்காமல்,

தங்களுடைய

வலிமை என்னவென்றும்

தெரியாமல்,

தாங்கள் எதிரணியை

எளிதாக வீழ்த்தி விடுவோம்

என்று ஆணவத்தோடு

செயல்படுபவர்கள்

தாங்களாவே

வீழ்ந்து விடுவார்கள்.

- வன்னி அரசு

என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு திமுக அணியில் தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதையும் தாங்கள் மிகுந்த பலத்தோடு இருப்பதாக எண்ணிக் கொண்டு இருப்பவர்கள் மற்றவர்களை மதிக்காமல் இருக்கும்போது அவர்களாகவே வீழ்ந்து விடுவார்கள் என்று கூறுகிறார். ஆக பாமக வருகிறதோ இல்லையோ விசிகவுக்கு இப்போதைக்கு திமுக அணியில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

அதோடு இப்போதிருக்கும் தமிழக அரசியல் சூழலில் திமுகவுக்கு பெரும் வாய்ப்பு இருக்கும் சூழலில் அதிக கட்சிகளை இணைத்துக் கொண்டு அவர்களுக்கும் ஏன் தொகுதிகளை பங்கு வைக்கவேண்டும் என்று திமுக கருதுவதாகவும் கூறப்படுகிறது. அதனால் அடுத்து வரும் இரண்டு மூன்று நாட்களில் திமுக அணியில் யார் யார் இருக்கிறார்கள், விசிக திமுக அணியில் தொடர்ந்து நீடிக்குமா இல்லையா என்பதற்கான விடையும் தெரிந்து விடும்

English summary
Does VCK get out from DMK coalition? What does Vanniyarasu tweet say?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X