சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்கள் பெயர் புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? எப்படி தெரிந்து கொள்வது? விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: உங்கள் ஊரில் எத்தனை வாக்காளர்கள், உங்கள் பெயர் புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா, உங்கள் ஊரில் உள்ள உறவினர்களின் பெயர்கள் ஏதேனும் விடுபட்டுள்ளதா என்பதை ஆன்லைனிலேயே பார்க்க முடியும். அப்படி இடம் பெறாவிட்டால் நீங்கள் விண்ணப்பிக்கவும் முடியும்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 2021, ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது நிறைவடைந்தவர்களை கணக்கிட்டு திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அண்மையில் வெளியிட்டார்.

தமிழகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 6,10,44,358 வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 3,01,12,370 பேரும், பெண் வாக்காளர்கள் 3,09,25,603 வாக்காளர்களும் திருநங்கை வாக்காளர்கள் எண்ணிக்கை 6,385 ஆகவும் உள்ளனர்.

பெயர் சேர்க்க விரும்புபவர்கள்

பெயர் சேர்க்க விரும்புபவர்கள்

இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களுடைய பெயர் விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ளலாம். இந்தப் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள், ஆட்சேபனை தெரிவிப்பவர்களுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 15-ந்தேதி வரையிலும் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

21, 22-ம் தேதி

21, 22-ம் தேதி

இந்த காலகட்டத்தில் பெயர் சேர்க்க, நீக்க விரும்புபவர்கள், திருத்தம் செய்ய விரும்புபவர்கள், இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். வரும் 21, 22-ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களிலுள்ள வாக்குச்சாவடி அதிகாரியிடமும் விண்ணப்பங்களை வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஜனவரி 15ம் தேதி பட்டியல்

ஜனவரி 15ம் தேதி பட்டியல்

பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் ஜனவரி மாதம் 5-ம் தேதியன்று இறுதி செய்யப்பட விருக்கின்றன. ஜனவரி 15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

என்ன செய்ய வேண்டும்

என்ன செய்ய வேண்டும்

உங்கள் ஊரில் எந்த வாக்குச்சாவடிக்கு சென்று உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதேபோல் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதையும் ஆன்லைனில் பார்க்க முடியும். அது எப்படி என்பதையும் இப்போது பார்ப்போம்.

எப்படி பார்ப்பது

எப்படி பார்ப்பது

தமிழக தேர்தல் ஆணையத்தின் https://www.elections.tn.gov.in/rollpdf/ என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள். அங்கு மாவட்டம் எது என்பதை கிளிக் செய்யுங்கள், கீழே உங்கள் தொகுதி எது என்பதை கிளிக் செய்யுங்கள். உதாரணமாக தேனி மாவட்டத்தை தேர்வு செய்கிறேன். அதில் பெரியகுளம் தொகுதியை கிளிக் செய்கிறேன்.

வாக்காளர் பட்டியல்

வாக்காளர் பட்டியல்

அதில் வாக்குச்சாவடி மற்றும் ஊர் வாரியாக பட்டியல் காட்டும், அதில் உங்கள் ஊரின் வாக்குச்சாவடியை கிளிக் செய்தால், அதில், அங்கு தெரியும் தானியங்கி கோடு எண்ணை பதிவிட சொல்லும். அதன்பிறகு அந்த வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் இவர்களின் விவரங்கள் அனைத்தும் பிடிஎப் பைலாக தெரியும். இதில் உங்கள் பெயர் உள்ளதா, உங்களின் உறவினர்களின் பெயர்உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பெயர் இல்லாவிட்டால் விண்ணப்பிக்கலாம்.

English summary
You can see online how many voters are in your town, whether your name is on the new voter list, and whether any of the names of relatives in your town are missing. If not, you can apply.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X