சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தினகரனை பதற வைத்த இசக்கி சுப்பையா.. வரும் 6-ம் தேதி அதிமுகவில் இணைகிறார்!

இசக்கி சுப்பையா இன்று அதிமுகவில் இணைய வாய்ப்பு என கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    நெல்லை: அ.தி.மு.கவில் இணைகிறார் இசக்கி சுப்பையா .! அமமுக தலைமை அலுவலகம் பறிபோகிறது!

    சென்னை: அமமுகவை சேர்ந்த இசக்கி சுப்பையா அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகுவதாகவும், வரும் 6-ம் தேதி அதிமுகவில் தன்னை இணைத்து கொள்ள போவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, நாஞ்சில் சம்பத், மைக்கேல் ராயப்பன், போல அமமுகவின் கட்சியின் மிக முக்கியமான நிர்வாகிதான் இசக்கி சுப்பையா. தினகரனிடம் நெருக்கமாக இருந்தவர். அமமுகவின் "தேவைகளை" குறைவின்றி பூர்த்தி செய்து வந்தனர்.

    Isakki Subbaiah may out from AMMK today

    18 எம்எல்ஏக்கள் வழக்கு, குக்கர், தொப்பி போன்றவைகளில் வராத பிரச்சனை சீட் ஒதுக்கீட்டின்போது எழ ஆரம்பித்தது. திருநெல்வேலியை இசக்கி கேட்க, தினகரனோ தென்சென்னையை வற்புறுத்தி திணிக்க.. இதில் இசக்கி தோல்வியை தழுவ.. இங்குதான் விரிசல் வேகமாகவும், மிக ஆழமாகவும் விழுந்தது.

    இசக்கி சுப்பையா அமமுகவை உதறி விட்டு.. அதிமுகவில் இணைய இதுதான் காரணமா..! இசக்கி சுப்பையா அமமுகவை உதறி விட்டு.. அதிமுகவில் இணைய இதுதான் காரணமா..!

    இதையடுத்து, அமமுகவின் கூட்டங்களில் பெரிசாக இசக்கி தலைகாட்டவில்லை. திடுதிப்பென்று தனது ஆதரவாளர்களை கூப்பிட்டு கொண்டு குற்றாலத்தில் கூட்டம் போட்டார். அப்போதே தினகரனுக்கு எரிச்சல் + எச்சரிக்கையை தந்தது.

    இதே சமயம் அதிமுகவும் குஷியாகி விட்டது. ஒரு பக்கம் அதிமுகவில் சேர போகிறார் என்ற தகவல்கள் கசிந்தாலும், செந்தில்பாலாஜியும், இசக்கியை திமுக பக்கம் இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறப்பட்டது.

    இந்த சூழலில்தான் நேற்று அமமுகவில் இருந்து இசக்கி சுப்பையா விலக போகிறார் என்று தகவல் பறந்தன. இதை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாளை அதாவது இன்று தனது அரசியல் ரீதியான முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று செய்தியாளர்களை சந்தித்த இசக்கி சுப்பையா தினகரன் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

    தங்கள் ஆதரவாளர்கள் 20 ஆயிரம் பேருடன் அதிமுகவில் இணைய உள்ளதாகவும், இதற்காக தென்காசியில் வரும் 6ஆம் தேதி பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்து, முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் தாய்க்கழகத்தில் இணைய போவதாகவும் அறிவித்துள்ளார்.

    English summary
    AMMK Senior Leader Isakki Subbaiah may out from the Party and joins in AIADMK today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X