சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு.. தமிழகத்தின் பல இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்திலும் போராட்டங்கள் தொடங்கின. இதனால் தமிழகத்தில் கல்லூரிகளுக்கு வரும் ஒன்றாம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்த வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

18 பேர் இறப்புக்கு போராட்டக்காரர்கள்தான் காரணம்.. ஒரு புல்லட்டைகூட நாங்கள் சுடவில்லை.. உ.பி. போலீஸ் 18 பேர் இறப்புக்கு போராட்டக்காரர்கள்தான் காரணம்.. ஒரு புல்லட்டைகூட நாங்கள் சுடவில்லை.. உ.பி. போலீஸ்

தேனியில் போராட்டம்

தேனியில் போராட்டம்

இதேபோல் குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தேனியில் பங்களாமேடு என்ற பகுதியில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போராட்டம் கைது

போராட்டம் கைது

இதேபோல் கோவை மாவட்டம் காந்தி புரத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெறக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆதரவாக ஆர்ப்பாட்டம்

ஆதரவாக ஆர்ப்பாட்டம்

இதனிடையே குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக சென்னை வள்ளுர்வர் கோட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஆதரவாக முழக்கம்

ஆதரவாக முழக்கம்

குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி எதிர்க்கட்சியினர் பொய்ப் பரப்புரை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர்கள், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர்.

English summary
Islamist organizations have been protesting in various districts of Tamil Nadu, including Chennai, protesting against the amendment of the citizenship law.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X