சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்று இஸ்ரேலுக்கும் இதே சோகம்தான்.. விக்ரமுக்கும் இப்படித்தான் நடந்திருக்குமோ?

Google Oneindia Tamil News

Recommended Video

    கண்ணீர் மல்கிய இஸ்ரோ தலைவர் சிவன்.. வாரி அணைத்து, மோடி ஆறுதல்

    சென்னை: இந்தியாவின் சந்திரயான் 2 திட்டம் தோல்வி என்றாலும் கூட அதில் நாம் மகிழ்ச்சி அடைய பல விஷயங்கள் உள்ளன. இன்று இந்தியா சந்தித்த இதே பின்னடைவை பல நாடுகள் முன்பே சந்தித்துள்ளன. பின்னர் சாதித்துள்ளன. இஸ்ரேல் அதில் ஒன்று.

    இஸ்ரேலும் இதே போலத்தான் நிலவுப் பயணம் ஒன்றை தொடங்கியது. ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. கிட்டத்தட்ட விக்ரம் லேன்டர் போலவே இஸ்ரேலின் பெயர்ஷீட் லேன்டர் விண்கலமும் கடைசி நேரத்தில் தோல்வியைத் தழுவியது.

    விக்ரமுக்கு என்னாச்சு என்பது நமக்கு இதுவரை தெரியவில்லை. ஆனால் பெயர்ஷீட் லேன்டரானது நிலவின் தரைப் பகுதியில் மோதி சேதமடைந்து விட்டது.

    பாதி வெற்றி.. ஆர்பிட்டர் இயங்கும்.. லேண்டருடன்தான் தொடர்பு துண்டிப்பு.. இஸ்ரோ கொடுத்த விளக்கம்!பாதி வெற்றி.. ஆர்பிட்டர் இயங்கும்.. லேண்டருடன்தான் தொடர்பு துண்டிப்பு.. இஸ்ரோ கொடுத்த விளக்கம்!

    இஸ்ரேல் விண்கலம்

    இஸ்ரேல் விண்கலம்

    கடந்த ஏப்ரல் மாதம் பெயர்ஷீட் நிலவுப் பயணத் திட்டத்தை இஸ்ரேல் மேற்கொண்டது. விக்ரம் போலவே பெயர்ஷீட் லேன்டரும் நிலவை நோக்கிய பயணத்தை சிறப்பாகவே மேற்கொண்டது. ஆனால் தரையிறங்கப் போகும் நேரத்தில் கடைசி கட்டத்தில் அது வேகமாக கீழே விழுந்து நொறுங்கிப் போனது.

    இந்தியாவின் கவனம்

    இந்தியாவின் கவனம்

    இந்த திட்டமானது இஸ்ரேல் அரசின் உதவியுடன், தனியார் நிதியளிப்புடன் மேற்கொண்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தின் தோல்வியையும் நமது விஞ்ஞானிகள் கணக்கில் கொண்டு அதுபோன்ற சம்பவம் விக்ரமுக்கு நேர்ந்து விடாத வகையில் மிக மிக கவனமாகத்தான் திட்டமிட்டிருந்தனர்.

    எளிதானதல்ல

    எளிதானதல்ல

    உண்மையில் நிலவில் தரையிறங்குவது என்பது மிக மிக கடினமானது, எளிதானதல்ல. அமெரிக்காவே கூட இதில் மிக மிக சிரத்தை எடுத்துக் கொள்வது உண்டு. காரணம், நிலவின் சூழல் அப்படி. ஈர்ப்பு விசை கிடையாது. தரைப் பகுதி எல்லாமே கரடு முரடானது. மிக மிக கட்டுப்பாட்டோடு தரையிறங்க வேண்டும். சற்று தவறினாலும் சிக்கல்தான்.

    சிக்கல் சூழல்

    சிக்கல் சூழல்

    இந்தியாவின் சந்திரயான் 2 மட்டுமே தோல்வி என்று சொல்லி விட முடியாது. பல நாடுகளின் திட்டங்கள் தோல்வியில் முடிந்துள்ளன. நமது விக்ரம் இறங்கவிருந்த பகுதியில் அமெரிக்கா இதுவரை இறங்கியதில்லை. வேறு எந்த நாடும் இறங்கியதில்லை. இப்படி பல சிக்கல்களுக்கு மத்தியில்தான் விக்ரம் அங்கு போனான்.

    போகப் போகத் தெரியும்

    போகப் போகத் தெரியும்

    பெயர்ஷீட் லேன்டரின் என்ஜின் கடைசி நேரத்தில் தோல்வி அடைந்த காரணத்தால்தான் அது தரையில் போய் விழுந்தது. நமது விக்ரமுக்கும் அதுபோல நடந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அப்படி நடந்திருந்தால் விக்ரமும் நிலவின் தரையில் விழுந்திருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் வரும் நாட்களில்தான் விக்ரமின் கதி உண்மையில் என்ன என்பது தெரிய வரும்.

    English summary
    Not only Vikram lander but Israel's Beresheet lander also failed to complete the mission success in last April.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X