சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்ல நான் ஒரு இந்தியன்.. எனக்கு எந்த கலரும் இல்லை.. வைரலாகும் இஸ்ரோ சிவனின் நெத்தியடி பதில்!

இஸ்ரோ தலைவர் சிவனின் வீடியோ வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    நான் ஒரு இந்தியன்... வைரலாகும் இஸ்ரோ சிவனின் நெத்தியடி பதில்!

    சென்னை: "முதல்ல நான் ஒரு இந்தியன்.. கம்மிங் ஃப்ரம் திஸ் ஏரியா.. தட்ஸ் ஆல்.. மத்தபடி எனக்கு வேற எந்த கலரும் இல்லை" என்று இஸ்ரோ தலைவர் சிவன் அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கடந்த ஆண்டு, இஸ்ரோவின் புதிய தலைவராக விஞ்ஞானி சிவனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டபோது, தமிழகமே பூரிப்படைந்தது.

    ஏனெனில், தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்பது என்பது இதுதான் முதல் முறை. சிவன் நாகர்கோவிலை சேர்ந்தவர். அரசு பள்ளியில்தான் படித்தார்.

    கண்ணீர்

    கண்ணீர்

    இப்போது உலகமே திரும்பி பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். விக்ரம் லேன்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட செய்தியால், கண்ணீர் மல்க இவர் காணப்பட்ட காட்சி நாட்டையே கலங்க வைத்தது. இஸ்ரோ புதிய உச்சத்தை தொடும் என்று பிரதமர் உட்பட மக்கள் ஊக்கத்துடன் நம்பிக்கை ஊட்டி வருகிறார்கள்.

    கேள்வி

    கேள்வி

    இந்நிலையில், சிவனின் பழைய பேட்டி ஒன்றினை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். சிவன் இஸ்ரோ தலைவராக நியமித்தபிறகு, ஒரு தனியார் தொலைக்காட்சியில் சிவனை பேட்டி எடுத்துள்ளது. அப்போது அவரிடம் "ஒரு தமிழர், ஒரு பெரிய பதவிக்கு வந்திருக்கீங்க. உங்க ஊர் மட்டுமில்லை.. உங்க பள்ளி மட்டுமில்லை.. உங்க மாவட்டம் மட்டுமில்லை.. தமிழகமே கொண்டாடிட்டு இருக்கு. இந்த சூழ்நிலையில், தமிழக மக்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க" என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

    இந்தியன்

    இந்தியன்

    அதற்கு சிவன், "முதல்ல நான் ஒன்னு சொல்லிக்க விரும்புகிறேன். நான், தமிழ், மலையாளி, கன்னடன் என்று பிரித்து பார்ப்பவன் இல்லை.. நான் ஒரு இந்தியன். இஸ்ரோவில் நான் முதன்முதலில் சேரும்போதுகூட இந்தியனாகத்தான் சேர்ந்தேன்.

    கலர் இல்லை

    கலர் இல்லை

    இஸ்ரோவில் எல்லா மொழியை சேர்ந்தவர்களும் வேலை பார்க்கறாங்க. ஒரே ஒரு மொழியை சார்ந்தவர்களோ, ஒரு பகுதியை மட்டும் சேர்ந்தவர்களுடைய பங்களிப்பு மட்டும் அங்க இல்லை. நான் இந்தியன், கம்மிங் ஃப்ரம் திஸ் ஏரியா.. தட்ஸ் ஆல்.. மத்தபடி வேற எந்த கலரும் எனக்கு இல்லை.

    நன்றி

    நன்றி

    அதே சமயத்தில் என் சொந்த மண்ணின் சகோதரர்களுக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன். என் சகோதரர்கள், சகோதரிகள், என்னுடைய கிராமத்து ஆட்கள் இவங்க எல்லாம் என்னை சொந்த பிள்ளை மாதிரி கொண்டாடும்போதுரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று பதிலளிக்கிறார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உழைப்பாளி

    உழைப்பாளி

    இதற்கு "இந்திய மக்களால் விரும்பப்படும் மனிதராக மாறியிருக்கிறார் சிவன் என்றும், எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது பிரச்னையல்ல. சிவன் நேர்மையானவர், கடும் உழைப்பாளி. உலகின் மிகச்சிறந்த விண்வெளி ஆய்வகத்தின் தலைவர். நமது நாட்டின் ஹீரோ'' என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

    வீடியோ

    வீடியோ

    ஒட்டுமொத்த தேசமும், இஸ்ரோ தலைவர் சிவனின் முயற்சிகளுக்கு பக்கபலமாக உள்ள நிலையில், அவரது இந்த பழைய வீடியோவினை வெளியிட்டும், ஷேர் செய்தும் மக்கள் மேலும் புளகாங்கிதம் அடைந்து வருகிறார்கள்.

    English summary
    ISRO Chief Sivan says First of all I am an indian, this old Interview viral again in socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X