சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எமிசாட் மற்றும் பல நாடுகளின் 28 செயற்கைக்கோள்களுடன்.. விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட்

Google Oneindia Tamil News

சென்னை: 'எமிசாட்' மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படும், மினி செயற்கைக்கோள் 'எமிசாட்'. இது பி.எஸ்.எல்.வி-‌சி45 மூலம் விண்ணில் செலுத்தப்பட முடிவு செய்யப்பட்டது.

ISRO to launch EMISAT satellite on Monday, eyes several firsts

இதற்கான கவுண்ட்டவுன் ஆரம்பித்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

ISRO to launch EMISAT satellite on Monday, eyes several firsts

இதில், அமெரிக்காவின் 24 செயற்கைக்கோள்கள், சுவிட்சர்லாந்து, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் ‌இருந்து தலா ஒரு செயற்கைக்கோள் மற்றும் லுதுவேனியாவை சேர்ந்த 2 செயற்கைக்கோள்கள் என 4 நாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

ISRO to launch EMISAT satellite on Monday, eyes several firsts

இஸ்ரோ மூலம் முதல்முறையாக ஒரே ராக்கெட்டில் 3 செயற்கைக்கோள்கள் வெவ்வேறு புவி சுற்றுவட்டப்பாதைகளில் நிலைநிறுத்த உள்ளது. ‌ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பப்பட்ட 71வது ராக்கெட் இதுவாகும்.

English summary
The Indian Space Research Organisation (ISRO) will launch India's EMISAT satellite along with 28 nano satellites on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X