கே.பி அன்பழகன்: சிக்கிய 6வது மாஜி.. என்னாது 11.32 கோடி ரூபாயா.. அதிகாலையிலேயே 57 இடத்தில் ஐடி ரெய்டு
சென்னை: அதிமுக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள்.. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த கால ஆட்சியில் ஊழல் லஞ்சம், மற்றும் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த புகார்களில் மாஜி அமைச்சர்கள் சிக்கி வருகிறார்கள்..
மிக்க நன்றி சார்.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பிரியாவிடை கொடுக்கும் திமுக ஐடி பிரிவு ஊழியர்கள்

அதிகாரிகள்
இந்த புகார்களின் மீது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, தங்கமணி, கேசி வீரமணி, எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.. அந்த சோதனைகளில் எல்லாம், கணக்கில் வராத ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது..

கேபி அன்பழகன்
இந்நிலையில், அதிமுக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டவர்.. இன்று அதிகாலையில் இருந்தே கேபி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்...

வருமானம்
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறை கே.பி.அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இப்போது இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. சென்னை, தருமபுரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கேபி அன்பழகன் தனது குடும்பத்தினர் பெயர்களில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும், சொத்துக்குவிப்பு தொடர்பாக கேபி அன்பழகனின் மனைவி, 2 மகன்கள், மருமகள் உள்ளிட்டோர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 பேர் மீது வழக்கு பதிவு
முன்னாள் அமைச்சர் அன்பழகன் தன்னுடைய வருமானத்தை விட கூடுதலாக ரூபாய் 11.32 கோடி சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது... அன்பழகனின் மனைவி 2 மகன்கள், மருமகள் உள்பட 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.. அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது... அதிமுக மாஜிக்கள் வீடுகளில் சோதனை நடந்த நிலையில், இப்போது அன்பழகன் வரை ரெய்டு ஆரம்பமாகி உள்ளது, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.