சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்றே ஆஜராகி விளக்கம் அளியுங்கள்.. விஜய், அன்புச்செழியன், ஏஜிஎஸ்ஸுக்கு சம்மன்.. வரித்துறை அதிரடி!

நடிகர் விஜய் இன்றே ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தளபதி விஜய்... ரசிகர்களும்... ரெய்டும்

    சென்னை: நடிகர் விஜய் இன்றே ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.வருமான வரித்துறை சோதனையை அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் தமிழகம் முழுக்க 38 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. மொத்தம் இரண்டு நாட்கள் இந்த வருமான வரித்துறை சோதனை நடந்தது.

    சென்னையில் ஏஜிஎஸ் சினிமா பட தயாரிப்பு நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    எஸ்.சி/எஸ்.டி சட்ட திருத்தம்.. உச்ச நீதிமன்ற வழக்கு.. இன்று மிக முக்கியமான தீர்ப்பு!எஸ்.சி/எஸ்.டி சட்ட திருத்தம்.. உச்ச நீதிமன்ற வழக்கு.. இன்று மிக முக்கியமான தீர்ப்பு!

    எவ்வளவு

    எவ்வளவு

    ரூ. 300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பைனான்சியர் அன்புச்செழியன் தன்னுடைய பணத்தை ரகசியமாக பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் இவர் பணம், ஆவணங்களை பதுக்கி வைத்து இருந்தார். இதுதான் வருமான வரித்துறை அவரை விடாமல் துரத்த காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய் எப்படி

    விஜய் எப்படி

    வருமான வரித்துறை சோதனையில் இவர் மறைத்து வைத்து இருந்த பத்திரங்கள் பல பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அதேபோல் நடிகர் விஜய் வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையின் முடிவில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஒரு ரூபாய் கூட விஜய் வீட்டில் இருந்து வருமான வரித்துறை கைப்பற்றவில்லை. அவர் தான் வரி கட்டியதற்கான ஆதாரங்களை சரியாக வைத்து இருந்துள்ளார். தன்னுடைய சம்பளத்திற்கான ரசீதுகளையும் அவர் சரியாக வைத்து இருக்கிறார்.

    சம்மன் இன்று

    சம்மன் இன்று

    நடிகர் விஜய் இன்றே ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.வருமான வரித்துறை சோதனையை அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கும் வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. மேலும் பிகில் பட தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரத்துக்கும் ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது.

    நேற்று மாலை

    நேற்று மாலை

    இந்த வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் கிடைத்துள்ளது. இந்த விசாரணை முடிந்து இரண்டு நாட்கள் முன்பு ஷூட்டிங் ஸ்பாட் வந்த விஜய்க்கு பெரிய அளவில் பட்டாசு வெடித்து படக்குழு வரவேற்பு கொடுத்தது குறிப்பிடத்தக்கது . நெய்வேலி என்எல்சியில் மாஸ்டர் பட ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு நடிகர் விஜயை காண பெரிய அளவில் ரசிகர்கள் கூடி வருகிறார்கள். அவரின் மற்ற படத்தை விட இந்த படத்தின் ஷூட்டிங்கை காண அதிக அளவில் மக்கள் கூடி உள்ளனர்.

    English summary
    IT department summons and seeks an explanation from Anbuchezhiyan, AGS, and Vijay today itself in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X