சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் கிளீன்.. ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யவில்லை.. விஜய் வீட்டு ஐடி ரெய்டில் என்ன நடந்தது?

நேற்று நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையின் முடிவில் அவரின் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையின் முடிவில் அவரின் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவரின் வீட்டில் இருந்து ஆவணங்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.

நேற்றும் நேற்று முதல் நாளும் தமிழகம் முழுக்க 38 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. சென்னையில் ஏஜிஎஸ் சினிமா பட தயாரிப்பு நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது.

ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல் நேற்று நடிகர் விஜய் வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்தது.

எதுவும் இல்ல

எதுவும் இல்ல

இந்த சோதனையின் முடிவில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஒரு ரூபாய் கூட விஜய் வீட்டில் இருந்து வருமான வரித்துறை கைப்பற்றவில்லை. அவரிடம் பொதுவான விசாரணை மட்டும் நடத்தப்பட்டது. பொதுவாக ஒரு நபரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்தால், அவரின் நண்பர்கள், நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடக்கும். அங்கு ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதா என்று சோதிக்கப்படும். நேற்று ஏஜிஎஸ் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகங்களில் சோதனை நடந்தது.

விஜய் இல்லை

விஜய் இல்லை

ஏஜிஎஸ்ஸுக்கு நடிகர் விஜய் பிகில் மூலம் நெருக்கம் ஆனார். இதனால் ஏஜிஎஸ்ஸில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதனால் இதை ஏஜிஎஸ்ஸில் நடத்தப்பட்ட சோதனையின் காரணமாக நடந்த சோதனை மட்டுமே என்று கூறுகிறார்கள். நேரிடியாக விஜய் மீது புகார் எதுவும் இல்லை. அவர் சரியாக வரி கட்டுகிறார். அவர் மீது நேரடியாக யாரும் புகார் வைக்கப்படவில்லை. இந்த சோதனையில் அவர் குறி வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஒரு ரூபாய் கூட இல்லை

ஒரு ரூபாய் கூட இல்லை

இதற்கு ஏற்றபடியே நேற்று விஜய் வீட்டிலும் எதுவும் அகப்படவில்லை. அவர் தான் வரி கட்டியதற்கான ஆதாரங்களை சரியாக வைத்து இருந்துள்ளார். தன்னுடைய சம்பளத்திற்கான ரசீதுகளையும் அவர் சரியாக வைத்து இருக்கிறார். நேற்று விஜய் வீட்டில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியே செல்லும் போது ஆவணங்கள் எதுவும் எடுத்து செல்லவில்லை. விஜயிடம் நீண்ட நேரம் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

வாய்ப்பு குறைவு

வாய்ப்பு குறைவு

இதனால் எதிர்காலத்தில் இந்த வருமான வரி சோதனை தொடர்பாக வழக்கு பதியப்பட்டால் அதில் விஜய்க்கு எந்த பாதிப்பும் வராது. விஜய் எதிர்காலத்தில் விசாரிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். இந்த சோதனையில் விஜயிடம் இரண்டு கேள்விகள் மட்டும் கேட்கப்பட்டு இருக்கிறது. ஒன்று விஜய் பிகில் படத்திற்காக வாங்கிய சம்பள ரசீதுகள் எங்கே என்பது. ஆனால் விஜய் அதை சரியாக வைத்து இருக்கிறார். அதேபோல் இவர் தான் கடந்த வருடம் வாங்கிய சம்பளத்திற்கு முறையாக வரி செலுத்தி உள்ளார்.

எவ்வளவு முதலீடு

எவ்வளவு முதலீடு

அதேபோல் விஜயிடம் கேட்கப்பட்ட இன்னொரு கேள்வி, அவரின் அசையா சொத்துக்கள் மீதான முதலீடு. அவர் அசைய சொத்துக்கள் மீது எவ்வளவு முதலீடு செய்துள்ளார். பிகில் படத்திற்கு பின் எவ்வளவு முதலீடு செய்தார் என்று கேட்கப்பட்டது. ஆனால் பொதுவாக அசைய சொத்து மீதான முதலீடுகள் வருமான வரி சோதனையில் பெரிய சிக்கலை ஏற்படுத்தாது. அதேபோல் விஜயிடம் இதற்கு சரியான ஆவணங்கள் உள்ளது என்றும் அவரின் ஆடிட்டர் தரப்பு தெரிவித்துள்ளது.

English summary
IT department went with nothing from Vijay House: May give clean chit in future If Investigation comes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X