சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சசிகலா வாங்கிய மேலும் ரூ.300 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகள் முடக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவுக்கு சொந்தமான மேலும் ரூ300 கோடி மதிப்புள்ள சொத்துகள் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூருவில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார் சசிகலா. சசிகலாவின் 4 ஆண்டுகால சிறை தண்டனை இந்த மாதத்துடன் நிறைவடையும் என கூறப்பட்டது.

IT dept attaches Rs 360cr assets of Sasikala under Benami Act

ஆனால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சசிகலா விடுதலையாவார் என கூறப்பட்டு வருகிறது. இதனிடையே 2017-ல் சசிகலா மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மெகா ரெய்டு நடத்தினர்.

எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும்: சீனாஎல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும்: சீனா

இந்த சோதனைகளின் அடிப்படையில் ரூ1600 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த நிலையில் சசிகலா குடும்பத்தின் மேலும் ரூ300 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

English summary
Income Tax Department has attached benami assets worth Rs 360 crore belonging to Sasikala, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X