சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹாட் சீட் + எடப்பாடியாருக்கு செக் + சாதி ஓட்டு = ஒரே கல்லில் 3 மாங்காய்.. "ஆபரேஷன் சசிகலா புஷ்பா"!

சசிகலா புஷ்பாவுக்கு விரைவில் பொறுப்பு ஒதுக்கப்படலாம் என தெரிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடியாருக்கே செக் வைக்க முயற்சி நடக்கிறதாம்.. சசிகலா புஷ்பாவை முன்வைத்து பாஜக காய் நகர்த்த தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.. மேலும் சசிகலா புஷ்பாவுக்கு ஹாட் சீட் ஒன்றையும் ஒதுக்க பாஜக தலைமை ரெடியாகி வருகிறதாம்.

சசிகலா புஷ்பாவை பொறுத்தவரை அதிரடியான பெண்.. தடாலடி அரசியல் செய்யக்கூடியவர்.. அதனால்தான் ஜெயலலிதாவின் குட்புக்கிங்கில் வெகு சீக்கிரமாக இடம்பெற்று.. முக்கிய பொறுப்புகளையும் பெற்றார்.. அதன் உச்சபச்ச பதவிதான் ராஜ்யசபா எம்பி!

அதுவரை இருந்த சசிகலா புஷ்பாவுக்கும், டெல்லி சென்று எம்பியான சசிலகா புஷ்பாவுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் தென்பட்டன.. நிறைய டெல்லி தொடர்புகள் உருவாயின.. எந்த அளவுக்கு செல்வாக்கு பெருகியதோ, அதே அளவுக்கு சர்ச்சைகளும் வெடித்தன.

"மாற்றம்.. முன்னேற்றம்.. எடப்பாடியார்".. சிஏஏ விவகாரத்தில்.. விரைவில் அதிரடி.. பரபரக்கும் கோட்டை!

ராஜ்ய சபா

ராஜ்ய சபா

இதற்கு பிறகுதான் ஜெயலலிதாவின் அதிருப்தி, ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா கொந்தளித்தது.. என பல்வேறு விவகாரங்கள் கிளம்பின.. எனினும் ராஜ்யசபாவுக்கு சசிகலா புஷ்பா நீக்கம் தொடர்பாக அதிமுக தலைமை தெரிவிக்காமலேயே விட்டதுதான் அக்கட்சிக்கு மிகபெரிய மைனஸ்! அதிமுகவின் ராஜ்யசபா எம்பியாகவே இருந்தார் சசிகலா புஷ்பா.. இது அவருக்குதான் பல சாதகங்களை பெற்று தந்தே தவிர, கட்சிக்கு இல்லை!

பாஜக

பாஜக

இதற்கு பிறகு ஓபிஎஸ் அணி.. அதற்கு பிறகு தினகரன் அணி என்று தன் ரூபத்தை மாற்றி கொண்டே இருந்தார். இந்த சமயத்தில் பாஜகவுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார்.. லோக்சபா தேர்தல் சமயத்தில்தான் நெருங்க ஆரம்பித்தார்... பிரதமர் மோடியை வெளிப்படையாகவே புகழ தொடங்கினார்.. தற்போது பதவிக்காலம் முடிந்து எல்லாவற்றையும் அனுபவித்து முடித்த பின்னர் அதிகாரப்பூர்வமாகவே பாஜகவில் சேர்ந்து விட்டார்!

நாடார் சமுதாயம்

நாடார் சமுதாயம்

விரைவில் தேர்தல் வர உள்ளது.. அதற்கான வேலைகளில் பல்வேறு கட்சிகள் இறங்கி உள்ளன.. சசிகலா புஷ்பாவை வைத்து ஒரு சில திட்டங்களை செயல்படுத்த பாஜகவும் முயல்வதாக சொல்கிறார்கள்.. முதலாவதாக, நாடார் சமுதாயத்தை குறி வைத்துள்ளது பாஜக! தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சசிகலா புஷ்பாவுக்கு நாடார் இன ஆதரவு ஓரளவு உள்ளது என்பதை மறுக்க முடியாது.. ஏற்கனவே தமிழிசை சவுந்தராஜனை வைத்து அச்சமூக வாக்குகளை பாஜக வளைத்து வந்தது.

வாக்குகள்

வாக்குகள்

ஆனால் தமிழிசையை நாடார் சமுதாயம் என்ற பார்வையில் பார்க்க நம் மக்களுக்கு மனசில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.. எந்தவித சாதி ரீதியான வெளிப்பாடு தமிழிசையிடம் வெளிப்படவே இல்லை. கடைசிவரை அவர் ஒரு பொதுவான, அனைத்து தரப்பினராலும் விரும்பக்கூடிய பெண்மணி போலதான் பாவிக்கப்பட்டார். அன்று தமிழிசையை போலவே இப்போது சசிகலா புஷ்பா முன்னிறுத்தப்படுகிறார்.. கட்சியில் இணைந்ததற்கு மானாவாரியாக புகழ்ந்து போஸ்டர்களை ஒட்டி வரவேற்றுள்ளனர் நாடார் சமுதாய மக்கள்! அதனால் தென் தமிழகத்தில் நாடார் சமூக வாக்குகளை தக்க வைக்க சசிகலா புஷ்பாவை பயன்படுத்தலாம் என பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

திராவிட முகம்

திராவிட முகம்

இரண்டாவதாக, தமிழக பாஜகவுக்கு தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை.. அப்பட்டமான பாஜக முகத்தினை அக்கட்சி என்றுமே முன்னிறுத்தி கொண்டது இல்லை.. மாற்று கட்சியினரை தமிழக மக்கள் முன்பு நிறுத்தி, அதற்கு பின்னாடி நின்று இவர்கள் காய் நகர்த்துவதுதான் வழக்கம்.. மேலும் திராவிட பரிச்சய முகம் இருக்கும் நபரை தலைவராக்குவதுதான் தனக்கு சாதகம் என பாஜக நினைக்கிறது.. அதனால்தான் புதிதாக கட்சியில் சேர்ந்த நயினார் நாகேந்திரன் பெயரும், மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன் பெயரும் தொடர்ந்து அடிபட்டு வருகிறது.. இந்த லிஸ்ட்டில் இணைகிறார் சசிகலா புஷ்பா.. தமிழிசை இடத்தை இவரை கொண்டு நிரப்புமா என்ற பேச்சும் டெல்லியில் சலசலக்கப்பட்டு வருகிறது.

முதல்வருக்கு செக்

முதல்வருக்கு செக்

மூன்றாவதாக, நாடார் சமூக பெண்களை ஒருங்கிணைக்கும்படி பாஜக தலைமை தெரிவித்திருக்கிறது.. இதை தவிர, திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் உள்ள மகளிரணி நிர்வாகிகளை பாஜகவிற்கு கொண்டு வரும் அசைன்மென்ட்டையும் சசிகலா புஷ்பாவிடம் தந்துள்ளதாக சொல்கிறார்கள்.. குறிப்பாக, முதல்வரின் சேலம் மாவட்டத்தில் நாடார் சமூக வாக்காளர்கள் மட்டும் 40 ஆயிரம் பேர் வரை இருக்கிறார்களாம். இதை முதலில் அள்ள வேண்டும், அதனால் உங்கள் களப்பணியை முதலில் முதல்வர் தொகுதியில் இருந்தே தொடங்குங்கள் என்று சொல்லி எடப்பாடியாருக்கு செக் வைத்துள்ளதாக கூறுகிறார்கள்.

உள்கட்சி பூசல்

உள்கட்சி பூசல்

நான்காவதாக, திராவிட கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்கும் வேலையும் தரப்பட்டுள்ளதாம்.. அதாவது அதிமுக, திமுக மாஜிக்கள், தேர்தலில் சீட் கேட்டவர்கள், தோற்றவர்கள், உள்பூசலால் புழுங்கி கிடப்பவர்கள், கட்சி தலைமையால் மரியாதை இழந்தவர்கள் இவர்கள் எல்லாரையும் பாஜக பக்கம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளார் என்கிறார்கள். சுருக்கமாக சொல்ல போனால், திராவிட கட்சிகளின் முக்கிய புள்ளிகளை கட்சியில் இணைய வைக்கும் வேலைதான் இது!

முத்திரை

முத்திரை

இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சசிகலா புஷ்பா கட்சியில் இணைந்தது பாஜகவிலேயே நிறைய பேருக்கு பிடிக்கவில்லை என்பதுதான்.. ஏற்கனவே பல சாதிகளாக ஆளுக்கு ஒரு குரூப் வைத்து செயல்படும்போது, நாடார் என்ற சாதி முத்திரையுடன் உள்ளே நுழைந்துள்ள சசிகலாவை பாஜகவினர் எல்லோருமே ஏற்பார்களா என தெரியவில்லை.. இவரை தமிழக பாஜக தலைமைக்கு பொறுப்பில் அமர்த்தினால் அதை எப்படி எதிர்கொள்வார்கள் எனவும் தெரியவில்லை.

சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா

ஏற்கனவே, அதிமுகவிலேயே சசிகலா புஷ்பாவுக்கு நல்ல பெயர் இல்லை.. கொள்கை பிடிப்பு இல்லை.. ஒரே நிலைப்பாட்டில் இதுவரை இருந்ததில்லை.. ஒரே கட்சியில் உறுதியாக நிலைத்தது இல்லை.. ஆனால் பாஜகவில் முக்கிய பொறுப்பை கொடுக்க டெல்லி தலைமை தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. சசிகலா புஷ்பாவுக்கு பொறுப்பு தருவது என்பது பாஜகவுக்கு கிடைக்க போகும் வரமா? என தெரியவில்லை.

English summary
It is likely that the BJP will soon be given a major responsibility for Sasikala Pushpa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X