சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அது நாய்கறியே கிடையாது வெள்ளாட்டுக் கறி.. குவியும் ஆதாரங்கள்.. விடை கிடைக்குமா?

சென்னைக்கு கொண்டு வரப்பட்ட மர்மமான இறைச்சி நாய்கறி கிடையாது அது ராஜஸ்தான் வெள்ளாட்டுக் கறி என்று நிறைய ஆதாரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் வந்து இறங்கிய இறைச்சியில் நீடிக்கும் மர்மம்- வீடியோ

    சென்னை: சென்னைக்கு கொண்டு வரப்பட்ட மர்மமான இறைச்சி நாய்கறி கிடையாது அது ராஜஸ்தான் வெள்ளாட்டுக் கறி என்று நிறைய ஆதாரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

    கடந்த வாரம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட பார்சலில் 2000 கிலோ கறிகள் இருந்தது. இதற்கு யாரும் உரிமை கோரவில்லை. இது அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    இவை நாய்கறி என்று முதலில் கூறப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாய்கறி பீதி காரணமாக சென்னையில் பிரியாணி விற்பனையும் பெரிய அளவில் சரிந்தது.

    புயல் பாதிப்பு நிதி கோர இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி புயல் பாதிப்பு நிதி கோர இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி

    உறுதி இல்லை

    உறுதி இல்லை

    ஆனால் ரயில்வே நிர்வாகம் இது நாய்கறிதான் என்று எங்கும் உறுதியாக கூறவில்லை. இதை பரிசோதிக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் இந்த கறியை சோதனை செய்வதற்காக எடுத்து சென்று இருக்கிறார்கள்.

    வெள்ளாடுக் கறி

    வெள்ளாடுக் கறி

    இந்த நிலையில் இது ராஜஸ்தான் பகுதியில் வசிக்கும் வெள்ளாடு ஒன்றின் கறி என்று உறுதியாக பலர் ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இணையத்தில் இதுகுறித்து நிறைய ஆதாரங்களை மக்கள் வெளியிட்டு உள்ளனர். ரயில்வே நிர்வாகம் போலியாக தகவல்களை பரப்பி வியாபாரத்தில் உலை வைத்துள்ளது என்று இறைச்சி விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

    வால் நீளம்

    இந்த கறியின் வால் நீளமாக இருக்கிறது என்பதுதான் முதலில் இது நாய்க்கறியா என்று சந்தேகம் கொள்ள வைத்தது. ஆனால், வால் நீளமாக இருக்கும் ஆடுகள் ராஜஸ்தானில் அதிகம். அவைகளை தமிழகத்திற்கு ஏற்றுமதி செய்வதும் வழக்கமாக நடந்து வருகிறது. இந்த முறை அந்த ஆடுகள் வெப்பநிலை மாறுபாடு காரணமாக அழுகிப்போனதுதான் இந்த சந்தேகத்திற்கும், பிரச்சனைக்கும் காரணம் என்று கூறுகின்றனர்.

    இன்னொரு விளக்கம்

    இன்னொரு விளக்கம்

    இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் ஹைதர் அலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஆடுகளை எப்போதும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவோம். தமிழ்நாட்டில் ஆடுகள் 500 ரூபாய்க்கும் அதிகமாக விற்கிறது. ஆனால் இந்த ஆடுகள் பார்சல் செலவையும் சேர்த்து 300 ரூபாய்க்கு கிடைக்கும். கறியும் சத்தாக இருக்கும் என்பதால் அதை வாங்குகிறோம். இதை நாய்க்கறி என்று கூறி புரளியை கிளப்பி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

    English summary
    It is not Dog Meat, It is Goat meat: People showed proofs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X