சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவருக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா.. கை கொடுக்க அழகிரி ரெடி.. ரஜினி தரப்பு செம குஷி!

மே 23-க்கு பிறகு ரஜினியுடன் இணைய முக அழகிரி விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கை கொடுக்க அழகிரி ரெடி.. ரஜினி தரப்பு செம குஷி!- வீடியோ

    சென்னை: ரஜினி அரசியலில் குதிக்க இன்னும் எத்தனை எத்தனை பாதுகாப்பு கவசங்கள் தேவைப்படுமோ தெரியலை (அம்புட்டு பயம் போல!). அந்த அளவுக்கு ஒவ்வொன்றையும் அவருக்காக பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்கள் அவரை வைத்து கல்லா கட்ட ஆசைப்படும் சில முக்கியஸ்தர்கள்.

    இப்போது ரஜினிக்காக முக்கியமான ஒரு அஸ்திரத்தை தயார் செய்து வைத்து விட்டனராம். அவர்தான் மு.க.அழகிரி.

    பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ளனராம். ரஜினி தரப்புக்கு பிளானிங்தான் பெரிய பஞ்சாயத்து. சுத்தமாக அது வராது. ஆனால் மு.க.அழகிரி அதில் கில்லாடி. ஸ்கெட்ச் போட்டு செயல்படுவதில் அழகிரி தரப்பு படு ஸ்டிராங்.

    மிக முக்கியமான கோரிக்கை.. தேர்தல் முடிந்ததும் ஜனாதிபதியை சந்திக்கும் 21 கட்சிகள்.. அதிரடி பிளான்! மிக முக்கியமான கோரிக்கை.. தேர்தல் முடிந்ததும் ஜனாதிபதியை சந்திக்கும் 21 கட்சிகள்.. அதிரடி பிளான்!

    அழகிரி

    அழகிரி

    இதை அறிந்துதான் ரஜினியை இயக்கும் பிரமுகர்கள், அழகிரியுடன் டீல் பேசி அவரை ரஜினிக்கு ஆதரவாக திருப்பியுள்ளனராம். ரஜினி கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும்போது வெளிப்படையாக ரஜினியுடன் அழகிரி கை கோர்ப்பாராம்.

    பாஜக தலைவர்கள்

    பாஜக தலைவர்கள்

    ரஜினியை பந்தோபஸ்தாக அரசியலில் இறக்குவது என்பதுதான் அவரது வட்டாரத்தின் முக்கிய கவனமாக உள்ளதாம். சட்டசபைத் தேர்தலில் ரஜினி கட்சியும் போட்டியில் இருக்கும். அது திமுகவுக்கு டஃப் பைட் கொடுக்கும் வகையில் ஸ்டிராங்காக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கிய பாஜக தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் ஒரே விருப்பம். எனவேதான் பார்த்து பார்த்து செய்கிறார்களாம்.

    உள்நோக்கம்

    உள்நோக்கம்

    அழகிரிக்கு இருக்கும் சில பல சிக்கல்களை (இதில் பல சிக்கல்களை உள்நோக்கத்துடன் வேண்டும் என்றே உருவாக்கியதாக சொல்கிறார்கள்) அவரிடம் எடுத்துச் சொல்லி, அதை நாங்க சரி பண்றோம். நீங்க ரஜினிக்கு ஆதரவா இறங்குங்க, அது மட்டும் செய்தால் போதும், சிக்கல்கள் தானாக சரியாகும் என்று ஒரு முக்கிய நபர் டீல் பேசினாராம். இழப்புகளை யோசித்துப் பார்த்த அழகிரியும், எனக்கு ரஜினி நல்ல நண்பர், எனது நலம் விரும்பி, அவருடன் செயல்படுவதில் எனக்கு என்ன கஷ்டம் என்று கூறி டீலை முடித்து விட்டாராம்.

    பொறுப்பு

    பொறுப்பு

    இதனால் ரஜினி தரப்பு குஷியாகி விட்டதாம். இப்பவே பாதி ஜெயிச்சாச்சு என்ற நம்பிக்கைக்கு அவர்கள் வந்து விட்டார்களாம். விரைவில் ரஜினியுடன் அழகிரியை அதிகாரப்பூர்வமாக சந்திக்க வைக்கவுள்ளனர். இது நடந்து விட்டால் தென் மாவட்டங்களில் ரஜினியை கரை சேர்க்கும் பொறுப்பை அழகிரி எடுத்துக் கொள்வாராம்.

    அடித்தளம்

    அடித்தளம்

    இதேபோல ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒரு முக்கியமான செல்வாக்கு உள்ள உள்ளூர் தலைவர்களை வலை வீசித் தேடி வருகிறதாம் ரஜினியை இயக்கும் தரப்பு. அழகிரி போல ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒருவர் கிடைத்தால் போதும் அதை வைத்து எளிதாக ரஜினி கட்சிக்கு அடித்தளம் வலுவாக அமைத்து விடலாம் என்பது இவர்களின் கணிப்பாக உள்ளதாம். அதற்கேற்ப காய்கள் நகர்த்தப்படுகிறதாம். எல்லாம் ரெடியான பிறகுதான் ரஜினி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவாராம்.

    English summary
    After May 23, MK Azhagiri is said to be ready to join with Rajinikanth Politics
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X