சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்?

துரைமுருகன், ஸ்டாலினுடனான நெருக்கம் குறைந்துள்ளதா

Google Oneindia Tamil News

Recommended Video

    DMK Secretary Durai murugan is not active now in party

    சென்னை: வேலூர் தேர்தலுக்குப் பிறகு துரைமுருகன் ஆக்டிவாக இல்லை என்பது உண்மைதான்.

    பொதுவாக கருணாநிதியுடன் இருந்தது போன்ற உறவு தற்போது ஸ்டாலினிடம் துரைமுருகனுக்கு இல்லை.
    இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.. ஜெனரேஷன் கேப் என்பது போல இவர்களுக்குள் சரியாக சிங்க் ஆகவில்லை. கெமிஸ்ட்ரி ஒத்துப் போகவில்லை.

    கருணாநிதி இருந்தபோது தினசரி வீட்டுக்குப் போவார் துரைமுருகன், பேசுவார், கருணாநிதி இல்லாவிட்டாலும் கூட வீட்டில் போய் சண்முகநாதனுடனாவது பேசிக் கொண்டிருப்பார். ஒரு கம்ஃபர்ட் இருந்தது. ஆனால் ஸ்டாலினிடம் அப்படி இல்லையாம்

    மற்ற சீனியர் தலைவர்களுக்கும் இதே போன்ற பிரச்சினைதான்.. ஆனால் அதை அவர்கள் வேறு மாதிரி சமாளிக்கிறார்கள். டிஆர் பாலு மகன் ராஜா உதயநிதியுடன் நெருக்கமாக இருக்கிறார். இதேபோல மற்ற வாரிசுகளும் உதயநிதியுடன் நெருக்கமாக உள்ளனர். இதனால் அப்பா - தலைவர் இடையே சரியாக ஒத்துப் போகாவிட்டாலும் மகன்கள் மூலமாக அதை சரி செய்து விடுகிறார்கள். அப்படிப் போய் விடுகிறது.

    Exclusive: என்னை தோற்கடித்ததற்காக மக்கள் தான் கவலைப்படனும்-சாருபாலா தொண்டைமான்Exclusive: என்னை தோற்கடித்ததற்காக மக்கள் தான் கவலைப்படனும்-சாருபாலா தொண்டைமான்

    இணக்கம்

    இணக்கம்

    ஆனால் துரைமுருகன் அப்படி இல்லை. அவரது மகன் கதிர் ஆனந்த் இப்போதுதான் ஆக்டிவ் அரசியலுக்கே வந்துள்ளார். அவருக்கும் உதயநிதிக்கும் பெரிய அளவில் நல்ல இணக்கமான பழக்கம் கிடையாது. இதனால் துரைமுருகனும் சரி, கதிர் ஆனந்ததும் சரி தலைமையுடன் சிங்க் ஆக முடியாமல் தனித்தே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கோபம்

    கோபம்

    வேலூர் தேர்தலில் செலவுக்கு பெரிதாக கட்சியை எதிர்பார்த்திருந்தார் துரை. ஆனால் கிடைக்கவில்லை.. சொற்ப தொகையே கொடுத்ததாக சொல்கிறாரகள். இதனால் கைக்காசை செலவிட நேரிட்டது. மேலும் ஜெயிக்க வைப்பதற்குள் நாக்குத் தள்ளி விட்டது. இதற்கு திமுகவினர் சரியாக வேலை பார்க்கவில்லை என்பது துரைமுருகனின் கோபம்.

    குமரன் சஸ்பெண்டு

    குமரன் சஸ்பெண்டு

    குறிப்பாக குடியாத்தம் குமரன். துரைமுருகன் சொல்லித்தான் குமாரை சஸ்பெண்ட் செய்தது கட்சி. குடியாத்தத்தில் அதிமுக அதிக ஓட்டு வாங்கியதும் இதற்கு இன்னொரு காரணம். உண்மையில் குமரன் நல்லா வேலை செய்யக் கூடியவராம். ஆனால் துரைமுருகனுடன் செட் ஆகாததால் சிக்கலை சந்தித்தாராம்.

    கருணாநிதி

    கருணாநிதி

    கருணாநிதி இருந்தவரை மாவட்டச் செயலாளராக பழம்தலைவர்கள்தான் பல காலமாக நகராாமல் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் வைத்ததுதான் சட்டம். குறு நில மன்னர்கள் போல இருந்தனர். இவர்களைத் தாண்டித்தான் எதுவும் நடக்கும். நாம் மட்டும்தான் கட்சி என்று இவர்கள் இருந்தனர். கருணாநிதிக்கு மட்டுமே எப்போதுமே பதிலும் சொல்லி வந்தனர். இதை ஸ்டாலின் அன்றே விரும்பவில்லை.

    தலைவர்

    தலைவர்

    மொத்தமாக இந்த ஆதிக்கத்தை அவர் இப்போது தகர்த்து வருகிறார். நான்தான் என்று யாராவது நினைத்தால் அவர்களை ஓரம் கட்டி விடுகிறார். துரைமுருகனைப் பொறுத்தவரை அந்த நிலைமை வரவில்லை. தலைவருடன் சிங்க் ஆகவில்லை என்பதே இதற்கு முக்கியக் காரணம்.

    பொருமல்கள்

    பொருமல்கள்

    மேலும் தனது மகன் கதிர் ஆனந்த்தை வேலூர் மாவட்டத்தில் முக்கிய தலையாக மாற்ற ஆசைப்படுகிறார் துரைமுருகன். ஆனால் ராணிப்பேட்டை காந்தி, நந்தகுமார் போன்ற சீனியர்கள் உள்ளனர். இவர்களைத் தாண்டி கதிர்ஆனந்த் மேலே வர கட்சித் தலைமை அனுமதிக்குமா என்பது கேள்விக்குறிதான். கதிர்ஆனந்துக்கு சீட் தந்த விவகாரத்திலேயே நிறைய பொருமல்கள் வேலூர் மாவட்டத்தில் எழுந்த நிலையில், இப்போதுள்ள மற்ற சீனியர்களை திமுக கைவிட்டுவிடாது என்றே தெரிகிறது.

    மரியாதை

    மரியாதை

    மொத்தத்தில் சீனியாரிட்டியே துரைமுருகனுக்கு பெரும் பாதகமாகி விட்டது. முக்கிய ஆலோசனைகள் உள்ளிட்டவற்றில் துரைமுருகனை எப்போதுமே ஸ்டாலின் விட்டுக் கொடுப்பதில்லை. ஆனால் கருணாநிதி போல எப்போதுமே ஸ்டாலினுடன் ஒட்டிக் கொண்டிருக்க துரைமுருகனால் முடியவில்லை. ஸ்டாலினும் அதற்கு இடம் கொடுக்கவில்லை.. இதுதான் நிலவரம்.

    English summary
    it is says that dmk treasurer durai murugan is not active now in party only because of seniority
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X