சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்களை வரவேற்கிறேன்.. சீன அதிபரிடம் தமிழில் பேசிய மோடி.. சென்னை கனக்ட் குறித்து பெருமிதம்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தமிழில் பேசினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சீன அதிபரிடம் தமிழில் பேசிய மோடி.. சென்னை கனக்ட் குறித்து பெருமிதம்!-வீடியோ

    சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தமிழில் பேசினார். சென்னையில் அவர்களுடன் ஆலோசனை நடத்துவது பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தமிழகம் வந்தார். அவர் பிரதமர் மோடியை காஞ்சிபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று கோவளம் தனியார் விடுதியில் இரண்டு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் இந்திய - சீன உயர்மட்ட பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    தாஜ் பிஷர்மேன் கேவ் ரெசார்ட்டில் இருவரும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்..

    அதுதான் முக்கியம்.. உலக நாடுகள் உற்றுநோக்கும் ஒரு அறிக்கை.. ஜி ஜின்பிங் - மோடி தீவிர ஆலோசனை!அதுதான் முக்கியம்.. உலக நாடுகள் உற்றுநோக்கும் ஒரு அறிக்கை.. ஜி ஜின்பிங் - மோடி தீவிர ஆலோசனை!

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மோடி தமிழில் தனது பேச்சை தொடங்கி பின் ஆங்கிலத்தில் பேசினார். அவர் தனது பேச்சில், மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன். இந்தியா- சீனா இடையே புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இது புதிய பயணம்.

    தமிழ்

    தமிழ்

    உலகின் தொன்மையான மொழியான தமிழில் பேசுகிறேன். சீன அதிபரை தமிழ்நாட்டிற்கு மனதார வரவேற்கிறேன். அவரும் அதிகாரிங்களும் தமிழகத்தில் என்னுடன் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    கலாச்சாரம்

    கலாச்சாரம்

    இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே 2,000 ஆண்டுகளாக ஆழமான கலாசார வர்த்தக உறவுகள் இருக்கின்றன. மாமல்லபுரம் பயணம் மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளது. இருநாடுகளிடையே ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு ஏற்படும்.

    என்ன மாற்றம்

    என்ன மாற்றம்

    இந்தியாவும் சீனாவும் மிக சக்தி வாய்ந்த நாடுகள். பொருளாதார ரீதியாக இரண்டு நாடுகளும் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகள். நாம் இப்போது நெருக்கமாகி இருப்பது பெரிய மாற்றங்களை ஏற்படுத்த போகிறது.

    என்ன மாநாடு

    என்ன மாநாடு

    முறைசாரா மாநாடுகள் மூலமான பேச்சுவார்த்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா சீனா இடையிலான உறவை ''சென்னை கனக்ட்'' மாற்றப்போகிறது. உஹான் சந்திப்புக்கு பிறகு இரு நாடுகள் இடையிலான உறவு மேலும் உறுதி அடைந்துள்ளது, என்று மோடி தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    It is so happy to bring you here, Prime Minister Modi welcomes Chinese President Xi in Tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X