சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூ 20 லட்சம் கொண்டு வந்ததால் பரபரப்பு.. ஆரணி எம்பி செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித் துறையினர் விசாரணை

Google Oneindia Tamil News

சென்னை: ரூ 20 லட்சம் கொண்டு வந்ததாக சென்னை விமான நிலையத்தில் ஆரணி எம்பி செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தினர்.

நாளை கடைசி கட்ட நாடாளுமன்றத் தேர்தலும், தமிழகத்தின் 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் வரும் 27-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

IT officials interrogate Arani MP Elumalai

இந்த நிலையில் டெல்லியிலிருந்து வந்த விமானத்தில் ரூ. 20 லட்சத்தை கொண்டு வந்ததால் விமான நிலையத்தில் ஆரணி எம்பி செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித் துறையினர் விசாரணைநடத்தினர். இவர் மீண்டும் ஆரணி எம்பி தொகுதியில் போட்டியிடுகிறார்.

சிறுத்தை சிக்கிருச்சே.. மோடி பிரஸ் மீட்டை ஜாலியாய் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் சிறுத்தை சிக்கிருச்சே.. மோடி பிரஸ் மீட்டை ஜாலியாய் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

விசாரணையில் டெல்லியில் உள்ள தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 20 லட்சம் எடுத்து வந்ததாக செஞ்சி ஏழுமலை விளக்கம் அளித்துள்ளார். தனது மகளின் மேற்படிப்புக்காக எடுத்துவந்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

தற்போது எங்கு பார்த்தாலும் பணப்புழக்கம் நடந்து வரும் நிலையில் ஒரு எம்பியிடம் ரூ. 20 லட்சத்துக்கு கணக்கு கேட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இது போல் ஆங்காங்கே ரெய்டுகளை நடத்தி வருமான வரித்துறையினரும் தேர்தல் பறக்கும் படையினரும் பண விநியோகம் நடைபெறாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

English summary
IT officials investigates Arani sitting MP Elumalai in Chennai airport for having Rs. 20 lakhs cash.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X