சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

800 கோடிக்கு கணக்கே இல்லை.. ரூ.100 கோடிக்கு ரொக்கம்.. அதிரவைக்கும் கல்கி ஆசிரமம்.. யார் வீட்டு பணம்?

கல்கி ஆசிரம நிறுவனங்களில் சோதனை நடந்ததில் பணம் பிடிபட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    RS.500 seized crores in kalki ashram

    சென்னை: இந்த சாமியார் பிள்ளைங்களுக்கு படிப்பு சொல்லி தர்றாருன்னுதான் எல்லாரும் நினைச்சோம்.. ஆனா இப்படி கலர் கலரா.. கட்டு கட்டா பணத்தை சேர்த்து வெச்சிருப்பாருன்னு யாரு கண்டா! யாரு அப்பன் வீட்டு காசு இதெல்லாம்??

    பேரு விஜயகுமார்.. சாதாரண எல்ஐசி ஏஜெண்ட்.. திடீரென 30 வருஷத்துக்கு முன்னாடி, ஆந்திர மாநிலம் நெகமத்தில் கல்கி பகவான் ஆசிரமத்தை நிறுவினார். இது ஒரு கல்வி நிறுவனம்.

    ஆசிரமத்துக்குதான் இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறார் என்று பார்த்தால், இவரையே கல்கி பகவான் என்று சொல்லி கொண்டார். ஒரு நாள் தன்னை ஒரு கடவுளாக அறிவித்துகொண்டார். விஷ்ணுவின் அவதாரம் என்றார்.. மனைவி புஜ்ஜம்மா "அம்மா பகவான்" ஆகிவிட்டார்.

    சட்டை கிழிந்தது.. மாறி மாறி அடித்து கொண்ட பாமக, தேமுதிக தொண்டர்கள்.. விக்கிரவாண்டியில் பரபரப்புசட்டை கிழிந்தது.. மாறி மாறி அடித்து கொண்ட பாமக, தேமுதிக தொண்டர்கள்.. விக்கிரவாண்டியில் பரபரப்பு

    செக்ஸ் புகார்கள்

    செக்ஸ் புகார்கள்

    கல்வி ஆசிரமம் என்று நம்பி எத்தனையோ பிள்ளைகள் இங்கு வந்து படித்தனர்.. வெளிநாட்டு பெற்றோர்களும் பிள்ளைகளை கல்வி கற்க நம்பி அனுப்பினர்.. ஆனால், செக்ஸ் புகார்கள், போதை பொருட்கள் புழக்கம், எசகுபிசகு வீடியோக்கள் வெளியே வந்து, கோர்ட், கேஸ்வரை போனது.

    சொத்துக்கள்

    சொத்துக்கள்

    சாமியார் மகன் கிருஷ்ணாவின் பிடிக்குள் ஆசிரம பொறுப்பு சென்றது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் நிதி வழங்குவதை வாரி சுருட்டிக் கொண்டார். வரி ஏய்ப்பு செய்துவிட்டார்.. பணப்பரிவர்த்தனைகளை மறைத்து உள்ளார்.. பக்தர்கள் தந்த நன்கொடை மூலம் திரட்டப்பட்ட பணத்தை வைத்து ரியல்எஸ்டேட் பிசினஸ் ஆரம்பித்து விட்டார்.. வேலூரில் 1000 ஏக்கர் நிலம் வாங்கி போட்டுவிட்டார்.. ஆப்பிரிக்க நாடுகளில் சொத்துக்களை குவித்துள்ளார்.. இதெல்லாம் வாங்கி போட்ட சொத்துக்கள்தான்.

    மருமகள் விசாரணை

    மருமகள் விசாரணை

    4 நாளைக்கு முன்னாடி ரெய்டு வந்துவிட்டது.. 40 கல்கி ஆசிரமங்களிலும் சோதனை நடத்தியது... 500 கோடியை அதிகாரிகள் கைப்பற்றியதாக சொன்னார்கள். இதில் 800 கோடி சொத்துக்களுக்கு கணக்கு இல்லையாம். மகன், மருமகள் விசாரணைக்கும் ஒத்துவைக்கலையாம்.

    சாமியார்

    சாமியார்

    ஆவணங்களில் கையெழுத்தும் போடலையாம். சாமியாரை விசாரிக்கலாம் என்றால் ஆளை காணோம். அவர் நேமம் ஆசிரமத்தில்தான் தங்கிருப்பதாக ஆசிர ஊழயர்கள் சொல்கிறார்களாம். அப்படியானால் இவ்வளவு கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டும் வெளியே ஏன் இன்னமும் வராமல் இருக்கிறார் என்று தெரியவில்லை. 500 கோடி பறிமுதல் என்றதுமே.. 500 கோடியா.. என்று மலைப்பாக இருந்தது.. ஆனால் அந்த பணத்தை மலைபோல குவித்து வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்கள் அதிகாரிகள்.

    கலர் கலர் நோட்டுகள்

    கலர் கலர் நோட்டுகள்

    ஒரு பெரிய டேபிளில் பணம் கட்டு கட்டாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. ரோஸ் கலர், பச்சை கலர், சந்தன கலர் என்று கட்டுகள் அடுக்க வைக்கப்பட்டுள்ளன. இதில் நிறைய கலர்களை நாம் நேரில் பார்த்துகூட இல்லை.. என்னமோ ஸ்கூல் நோட்டு புக் மாதிரி இருக்கிறது இந்த பணக்கட்டுகளை பார்க்க.. யார் வீட்டு பணம் இதெல்லாம் என்று தெரியவில்லை.

    பக்தர்கள்

    பக்தர்கள்

    எவ்வளவுதான் ஏமாந்தாலும் திரும்ப திரும்ப நம்பி வந்து ஏமாந்து நிற்கும் இந்த பக்தர்களை சொல்வதா? அல்லது ஏமாறுவர்கள் இருக்கிறவரைக்கும் நாங்க இப்படித்தான் இருப்போம் என்று கெத்து காட்டி நிற்கும் இந்த சாமியார்களை சொல்வதா? என தெரியவில்லை.

    English summary
    it officials seized rs 500 crores in 40 centers in kalki ashram including chennai and released video about it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X