சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செல்லாத நோட்டுக்கள் விவகாரம்.. சிறையிலிருந்து உறவினருக்கு கடிதம்.. வருமான வரித் துறை

Google Oneindia Tamil News

சென்னை: செல்லாத நோட்டுக்கள் மூலம் தான் வாங்கிய சொத்துகள் குறித்து உறவினருக்கு கடிதம் எழுதியதாக வருமான வரித் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். 2017-ஆம் ஆண்டு நவம்பரில் அவர் சிறை சென்றவுடன் அவருடைய வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

இதில் வருமான வரித் துறையினர் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். அந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் கடந்த 2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சசிகலா ரூ 1674.50 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.

முழு நிர்வாணமாக.. காருக்குள் காதல் ஜோடி.. சேலத்தை அதிர வைத்த 2 சடலங்கள்.. 2019ன் ஷாக் கிரைம்!முழு நிர்வாணமாக.. காருக்குள் காதல் ஜோடி.. சேலத்தை அதிர வைத்த 2 சடலங்கள்.. 2019ன் ஷாக் கிரைம்!

சசிகலா உறவினர்கள்

சசிகலா உறவினர்கள்

அது போல் அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ 237 கோடியை அவர் கடனாகவும் அளித்துள்ளார். இதுகுறித்து சிறையில் உள்ள சசிகலாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

வருமான வரித் துறை

வருமான வரித் துறை

அப்போது அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துவிட்டார். சொத்துகளை வாங்கிக் குவிக்கவும் அரசு ஒப்பந்ததாரர்களுக்கு கடன் வழங்கவும் பயன்படுத்தப்பட்டது கணக்கில் வராத பணம் என்று ஏன் நாங்கள் அறிவிக்கக் கூடாது என கேட்டு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பினர்.

சசிகலா

சசிகலா

இதற்கு ஆடிட்டர் மூலம் சசிகலா விளக்கம் அளித்துள்ளார். செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்து சொத்து வாங்கியதாகவும், ரூ.237 கோடி கடன் அளித்ததாகவும் கூறும் குற்றச்சாட்டை சசிகலா மறுத்தார்.

ஜெ. முதல்வர்

ஜெ. முதல்வர்

மேலும், முதல்வராக இருந்த ஜெயலலிதாவும், தானும் கோடநாடு எஸ்டேட் உள்பட பல சொத்துகளுக்கு பங்குதாரராக இருந்தநிலையில், அவரது மறைவுக்கு பிறகு தானே அனைத்து சொத்துகளுக்கும் உரிமையாளர் ஆகியிருப்பதாகவும் கூறியிருந்தார்.

தமிழில் கடிதம்

தமிழில் கடிதம்

எனினும் சசிகலா சொத்துகளை வாங்கியதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2017-இல் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனின் வீட்டில் சோதனை செய்த போது தமிழில் எழுதிய சில கடிதங்கள் கிடைத்தன.

சசிகலா

சசிகலா

அதுகுறித்து கேட்ட போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டு காவலாளியிடம் இந்த கடிதங்களை சீலிடப்பட்டு கொடுத்ததாக தெரிவித்தார். ஆனால் விசாரணையில் அந்த கடிதம் 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் பெங்களூர் சிறையிலிருந்து சசிகலாவினுடையது என தெரியவந்தது.

English summary
It officials reveals that Sasikala writes letter to her relative Vivek Jayaraman about unaccounted assets which was bought in demonetisation period.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X