• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"குறி" வைக்கப்படுகிறாரா விஜயபாஸ்கர்.. ராத்திரியெல்லாம் நடந்த "ரெயிடு".. விக்கித்து போன விராலிமலை

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் பரபரப்பு கூடி வரும் நிலையில், மற்றொரு பக்கம் வருமானவரித்துறையினரின் பரபரப்பும் கூடிக் கொண்டே வருகிறது.. அந்தவகையில், அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணன் உதவியாளர் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.

  புதுக்கோட்டை: விஜயபாஸ்கரையே சுற்றி வரும் ஐ.டி ரெய்டு… சகோதரரின் உதவியாளர் வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல்!

  தேர்தல் தேதிக்கு நாள் நெருங்கி கொண்டே வருகிறது.. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று அதிமுகவும், 10 வருடம் விட்டதை பிடிக்க வேண்டும் என்று திமுகவும் களப்போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதற்கு நடுவில் வருமான வரித்துறையினர் அதிரடிகளை காட்டி வருகின்றனர்.

  கடந்த சில நாட்களாகவே விஐபி வேட்பாளர்களை குறி வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.. அந்த வகையில், திமுகவின் முன்னாள் அமைச்சர் எவ வேலு வீட்டிலும், அவரது கல்விநிலையங்களிலும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை நடத்தியது..

   அதிர்ச்சி

  அதிர்ச்சி

  இது அரசியல் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.. மத்திய,மாநில அரசுகளின் சதித் திட்டமே இதற்கு காரணம் என்று, திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மொத்த பேரும் ஆவேசம் அடைந்துள்ளனர்.. இந்த அதிர்ச்சி குறையும் முன்பே, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது.. விஜயபாஸ்கர் அண்ணன் பெயர் உதயகுமார்... இவருக்கு சொந்தமான காலேஜ் இலுப்பூரில் இருக்கிறது.. உதயகுமாரிடம் உதவியாளராக இருப்பவர் வீரபாண்டி.. 32 வயதாகிறது..

  அனுராதா

  அனுராதா

  நேற்று இவரது வீட்டுக்கு வருமானவரித்துறை திருச்சி மண்டல துணை ஆணையர் அனுராதா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்தனர்... வீரபாண்டியின் வீடு முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சோதனை நடத்தினர்... மேலும் வீட்டில் உள்ளவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல, வெளியில் உள்ளவர்களையும் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை...

   அட்ரஸ்கள்

  அட்ரஸ்கள்

  அதுமட்டுமல்லாமல், வீரபாண்டியின் செல்போனில் தொடர்பில் இருந்தவர்களின் வீட்டிற்கும் சென்று சோதனைகளை மேற்கொண்டனர்.. வீரபாண்டி வீட்டுக்கு அருகே உள்ள வீடுகளிலும் சோதனை நடத்தினர்.. இன்னும் சிலரின் அட்ரஸ்களை வாங்கி வைத்திருக்கிறார்கள்... அங்கு இனிமேல் சோதனை நடக்கும் என்று தெரிகிறது.. ஆனால், வீரபாண்டி வீட்டில் இரவெல்லாம் சோதனை நடந்துள்ளது.. இதில் கட்டுக்கட்டாக பணமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாகவும் சொல்கிறார்கள்.

  சோதனை

  சோதனை

  இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் ஏன் சோதனை நடக்கிறது? ஒருவேளை விஜயபாஸ்கர் குறி வைக்கப்படுகிறாரா? அல்லது இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற சந்தேகங்களும் எழுகிறது.. இதுகுறித்து நாம் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:

   தேர்தல்

  தேர்தல்

  "வழக்கமாக தேர்தல் சமயங்களில் பணப்பட்டுவாடா ஏதாவது நடக்கிறதா, கணக்கில் காட்டப்படாத பணம் தேர்தலில் இறக்கி விடப்படுகிறதா என்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது வழக்கம்.. ஆனால் இந்த சோதனைகள் அனைத்தும் எதிர்க்கட்சிகளையே குறிவைத்து நடத்தப்படுகின்றன... ஆளுங்கட்சியை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது..

  வேலு

  வேலு

  கமல் கட்சி நிர்வாகி வீட்டில் சோதனை நடந்தது, பிறகு எவ வேலுவுக்கு சொந்தமான இடத்தில் நடந்தது.. எதிர்க்கட்சிகளுக்கு ஒரு ஜெர்க் தருவதற்காக இப்படிப்பட்ட சோதனைகளை ஆளும் தரப்பு மேற்கொள்ளலாம். இப்படித்தான் கடந்த முறை துரைமுருகன் வீட்டில் சோதனை நடந்தது, மிகப்பெரிய அரசியலாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குறி வைக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை மறைக்க, அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களிலும் சோதனை நடத்தியிருக்கலாம்..

   நம்பகத்தன்மை

  நம்பகத்தன்மை

  இதன்மூலம் தாங்கள் நடுநிலைமையுடன்தான் செயல்படுகிறோம் என்ற ஒரு நம்பகத்தன்மையையும் வருமானத்துறை ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம்.. இது உண்மையாகவும் இருக்கலாம். தாங்கள் யாருக்கும் சாதகமானவர்கள் இல்லை, பொதுவானவர்கள் என்பதன் வெளிப்பாடுதான், இந்த பாரபட்சமற்ற சோதனைகள்... மற்றபடி விஜயபாஸ்கரை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்படுகிறது என்பதை திட்டமிட்டு சொல்ல முடியாது" என்றனர்.

  English summary
  IT Raid at the ADMK Minister Vijayabaskars assistant home
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X